ஹோட்ஜ்கின் லிம்போமா என்றால் என்ன?
ஹோட்ஜ்கின் லிம்போமா என்பது நிணநீர் அணு என்ற ஒரு வகை
வெண்குருதி அணுவில் வரும் தீங்கான புற்றுநோய் ஆகும். உடம்பில் இருக்கும் நிணநீர் முனைகள் மற்றும் நிணநீர் நாளங்களில் நிணநீர்க் அணுக்கள் இருக்கும். நிணநீர் முனைகள் என்பது உடலில் கழுத்து ,அக்குள் , மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் இருக்கும் சிறிய அவரை விதை போன்ற வடிவிலான சுரப்பிகள். நிணநீர் என்ற திரவத்தையும் நோய் எதிர்ப்பு அமைப்பில் இருக்கும்.
தொற்றை எதிர்க்கும் அணுக்களையும் நிணநீர் நாளங்கள் அதன் குழாய்கள் வழியாக எடுத்து செல்கிறது. நிணநீர் அமைப்பில் இருக்கும் நிணநீர் அணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே ஹோட்ஜ்கின் லிம்போமா என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு கணுவில் இருந்து மற்றொரு கணுவிற்கு நிணநீர் நாளங்கள் மூலம் புற்றுநோய் பரவக்கூடும். பெண்களை விட 20 -25 வயதில் அல்லது 70 வயதிற்கு மேலே இருக்கும் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
ஹோட்ஜ்கின் லிம்போமா பொதுவாக காணப்படாத ஒரு தீங்கற்ற புற்றுநோயாய் இருந்தாலும், இது சுலபமாக சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு புற்றுநோய் ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- பொதுவான அறிகுறிகள்: கழுத்து, அக்குள் மற்றும் இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் வலி இல்லா வீக்கம்.
- வழக்கமான அறிகுறிகள்:
- இரவில் அதிகமாக வியர்த்தல்.
- காய்ச்சல் (அதிகமான வெப்ப நிலை).
- எடை குறைதல்.
- உடம்பில் அரிப்பு.
- இருமல் மற்றும் சுவாசமற்ற நிலை.
- அடிவயிற்றில் வலி.
- அரிதான அறிகுறிகள்
சில நபர்களுக்கு எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் அசாதாரண உடலணுக்களின் வளர்ச்சியினால் கீழே உள்ள அறிகுறிகள் காணப்படலாம்:
- பலவீனம்.
- நோயெதிர்ப்பு அமைப்பின் பலவீனத்தால் தொற்றுநோய்கள் உண்டாகும் ஆபத்து அதிகரிக்கும்.
- மூக்கில் ரத்தம் வடிதல், அதிகமான மாதவிடாய் மற்றும் தோலின் கீழே சிறிய சிவப்பு புள்ளிகள் போன்ற இரத்தப்போக்கு பிரச்சினைகள் காணப்படும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதன் துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை ஆனால் பின்வரும் ஆபத்து காரணிகள் உள்ள நபர்களுக்கு ஹோட்ஜ்கின் லிம்போமா தாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது:
- மனித ஏமக்குறைப்பு நச்சுயிரி (ஹெச்.ஐ.வி) தோற்று அல்லது உயிர்க்கொல்லி நோய் (எய்ட்ஸ்)
- உறுப்பு நிராகரிப்பை தடுக்க எடுக்கப்படும் நோய்எதிர் திறனொடுக்கி மருந்து.
- முடக்கு வாதம், உருப்புசார் லூபஸ் எரிதிமாடோசிஸ் (எஸ்.எல்.இ) போன்ற தன்னுடல் தாக்குநோய்கள்.
- ஹோட்ஜ்கின் இல்லாத லிம்போமாவின் முந்தைய வரலாறு.
- ஹோட்கின் லிம்போமாவாள் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் (தாய், தந்தை அல்லது உடன்பிறப்புகள்).
- எப்ஸ்டீன் பார் வைரஸ் அல்லது சுரப்பி காய்ச்சலுக்கு முந்தைய வெளிப்பாடு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர் ஒரு விரிவான குடும்ப வரலாறு மற்றும் தனிப்பட்ட வரலாற்றின் மூலம் ஆபத்து காரணிகளை மதிப்பீடு செய்வார். முதலில், உங்கள் மருத்துவர் நோயை உறுதிப்படுத்த நிணநீர் கணுவில் இருந்து திசுமாதிரியை எடுக்க செய்யப்படும் திசுப்பரிசோதனை (பயாப்சி) என்னும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை முறையைப் பரிந்துரைப்பார். பயாப்சி மூலம் உறுதிப்படுத்திய பிறகு, இன்னும் சில இரத்த பரிசோதனைகள், மார்பு எக்ஸ்-கதிர்கள் சோதனை மற்றும் பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் போன்ற சோதனைகள் இரத்த அணுக்களின் நிலை மற்றும் உடல் உறுப்புகளின் பாதிப்பு ஆகியவற்றைக் கண்டறிய நடத்தப்படும்.
கீமோதெரபி (மருந்துகளுடன் சிகிச்சை) மற்றும் கதிரியக்க சிகிச்சை (கதிர்வீச்சு பயன்படுத்தி சிகிச்சை) போன்ற சிகிச்சைகளும் இருக்கின்றன. சில நேரங்களில் ஸ்டீராய்டு மருந்துகளும் வழங்கப்படலாம். நோய் முழுமையாக குணமடைந்ததை உறுதிசெய்ய, தொடர்ந்து மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது அவசியம்.