ஹைப்பர் தைராய்டிசம் என்றால் என்ன?
தைராய்டு உங்கள் கழுத்தின் முன் பகுதியில் தோன்றும் ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும்.இது வளர்சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்தி, மற்றும் மனநிலை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராய்டு சுரப்பி நோய்கள் பல உடல் அமைப்புகளின் வளர்சிதை மாற்றத்தின் விளைவாக ஏற்படுகின்றன. தைராய்டு சுரப்பியோடு தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளாக, அதிக செயல்திறன் மற்றும் செயலற்ற தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதாகும். இந்த தைராய்டு குறைபாடுகள் ஆண்களை விட பெண்களில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மிகைப்பு தைராய்டு சுரப்பியானது அதிகப்படியான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இந்த நிலை ஹைப்பர் தைராய்டிசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மிகைப்பு தைராய்டு சுரப்பியின் அறிகுறிகள் பின்வருமாறு:
- எடை இழப்பு.
- கவலை, எரிச்சல், மற்றும் ஒழுங்கற்ற மனநிலை போன்றவை.
- விரிவாக்கப்பட்ட தைராய்டு (கண்டமாலை) காரணமாக கழுத்தில் வீக்கம் ஏற்படுதல்.
- பலவீனம்.
- அதிகரித்த இதய துடிப்பு.
- வெப்ப உணர்திறன்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஹைப்பர் தைராய்டின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- கிரேவ்ஸ் நோய்.
- தைராய்டு சுரப்பியின் மீது உள்ள வேர்முடிச்சுகள்.
- அதிக அயோடின் உட்கொள்ளுதல்.
- புற்றுநோய் அல்லாத பிட்யூட்டரி சுரப்பி கட்டிகள்.
- வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் தைராய்டு சுரப்பி அழற்சி.
- தைராய்டு புற்றுநோய்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
எந்த வகையான தைராய்டு பிரச்சினையின் நோயறிதலை கண்டறிய பின்வரும் வழிகளில் கையாளலாம்:
- கழுத்து பரிசோதனை.
- இரத்தப் பரிசோதனைகள்: தைராயிடினை தூண்டும் ஹார்மோன் (டி எஸ் எச்), டி3 மற்றும் டி4 அளவுகளை சரிபார்த்தல்.
- அயோடின் உட்கொள்ளுதல் சோதனை.
- சுரப்பியில் உள்ள வேர்முடிச்சுகளின் அல்ட்ராசவுண்ட் இயல்நிலை வரைவு.
- சுரப்பியின் அசாதாரண வளர்ச்சியை கண்டறிய திசுக்களுக்கான சோதனை.
தைராய்டு பிரச்சினை சிகிச்சை முறை, இரத்த பரிசோதனையில் கண்டறியப்படும் ஹார்மோனின் அளவு மற்றும் சுரப்பியினால் காட்டப்படும் செயல்பாடுகளுக்கு ஏற்ப வேறுபடும். பின்வரும் சிகிச்சை முறைகள் ஹைப்பர் தைராய்டிசம் பிரச்சனைககளை சரிசெய்ய உதவும்:
- மருந்துகள்: கதிரியக்க அயோடின், தைராய்டு எதிர்ப்பு மருந்து மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
- பகுதி அல்லது முழு தைராய்டு சுரப்பியின் அறுவை சிகிச்சை நீக்கல்.
ஒழுங்கான சிகிச்சை மற்றும் தொடர்ந்து சிகிச்சை எடுத்தல் ஹைப்பர் தைராய்டிசம் பிரச்சனையிலிருந்து நோய் பாதித்தவரை காத்துக்கொள்ள உதவும். வைட்டமின்கள், புரதங்கள், கால்சியம், அயோடின் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஒரு சமச்சீர் உணவுமுறை, தைராய்டு பிரச்சினைகள் உங்களை அணுகாமல் உதவுகிறது.
(மேலும் படிக்க :ஹைபர்டைராய்டிசம் சிகிச்சை).