இடியோபாட்டிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என்றால் என்ன?
இடியோபாட்டிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என்பது அசாதாரணமாக நுரையீரலில் உள்ள திசுக்கள் அசச்சுறுத்தும் வகையில் தடித்து இருக்கும் நிலையைக் குறிக்கும் ஒரு குறைபாடு ஆகும். இந்த வடுக்கள் ஃபைப்ரோஸிஸ் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்நோய்க்கான காரணம் தெரியவில்லை எனவே, இந்நோய் இடியோபாட்டிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் (ஐபிஎஃப்) என அழைக்கப்படுகிறது.இது நடுத்தர வயதினர் அல்லது முதியோர்களை பாதிக்கும் ஒரு தீவிரமான நோய் ஆகும். இதனால் சுவாசப்பாதை செயலிழப்பு, நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு,நுரையீரல் அடைப்பு (நுரையீரலுக்கு இரத்தத்தை அளிக்கும் தமனிகளில் இரத்த உறைவு) மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்பட காரணமாக அமைகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இடியோபாட்டிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் நோயின் அறிகுறிகளாவன-
- நுரையீரலிலிருந்து வராத வறட்டு இருமல்.
- மூச்சுவிட சிரமம்.
- மூச்சுவிடும் போது ஒரு விரிசல் ஒலி கேட்பது.
- விரல் நுனியை சேர்த்தல்.
- தசை வலி மற்றும் மூட்டு வலி.
- பசியின்மை.
- திடீரென எடை குறைதல்.
- மார்பில் வலி அல்லது இறுக்கம்.
- களைப்பு அல்லது சோர்வு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இடியோபாட்டிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் நோய்க்கான காரணங்கள் தெரியவில்லை ஆனால் சுற்றுசூழல் காரணிகள் மற்றும் மாசுபாடுகள் இந்நோய்க்கான காரணத்தை அதிகரிக்கின்றன. புகைப்பிடித்தல், உலோக தூசி வெளிப்பாடு, மரத்துகள், கல் தூசு, சிலிகா, வைக்கோல் தூசு, அச்சு வித்துக்கள் அல்லது விவசாய பொருட்கள் ஆகியன இடியோபாட்டிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் நோயை மனிதனுக்கு உண்டாக்குகிறது. இந்நோய் அதிகமாக 50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களையே பாதிக்கிறது.
சுமார் 20% ஐ.பி.எப் உடன் உள்ளவர்கள், மற்றொரு குடும்ப உறுப்பினர் இக்குறைபாட்டை கொண்டிருப்பதற்காக அறியப்படுகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால், இது குடும்ப நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என அழைக்கப்படுகிறது.
ஐபிஎஃப் ஆல் பாதிக்கப்பட்டுள்ள 75% நோயாளிகளுக்கு இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் எனப்படுகிற காஸ்ட்ரோஈசோபேகியல் எதிர்வினை நோய் (ஜி.இ.ஆர்.டி) உள்ளது).
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
அறிகுறிகள் பெரும்பாலும் ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி), மற்றும் இதய செயலிழப்பு போலவே இந்நோய் இருப்பதால், இடியோபாட்டிக் நுரையீரல் ஃபைப்ரோசிஸ் நோயை கண்டறிவதற்கு நுரையீரலியலாளர், கதிர்வீச்சாளர் மற்றும் நோயியல் வல்லுநரால் ஒரு பல்நோக்கு அணுகுமுறை தேவைப்படுகிறது. உங்கள் மருத்துவர் உங்கள் மருத்துவ பின்புலத்தின் அடிப்படையிலும் மற்றும் உடல் பரிசோதனை, மற்றும் எக்ஸ் கதிர்கள், உயர் தெளிவுத்திறன் கதிர்வீச்சு வரைவி (சிடி), நுரையீரல் செயல்பாட்டு சோதனைகள், பல்ஸ் ஆக்ஸிமெட்ரி தமனி இரத்தப் பரிசோதனை, காச நோய்க்க்கான தோல் சோதனை, உடற்பயிற்சி சோதனை, மற்றும் நுரையீரல் திசு ஆய்வு போன்ற சோதனை முடிவுகளின் அடிப்படையிலும் அதைக் கண்டறிவார்.
உங்கள் மருத்துவர் மருந்துகள், ஆக்ஸிஜன் சிகிச்சை, நுரையீரல் சீரமைப்பு மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை ஆகியவற்றைக் கையாளலாம். சில கூடுதல் மருந்துகள் மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஆகியவற்றைக் சரிசெய்ய பரிந்துரைக்கப்படுகின்றன. இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (ஜி.இ.ஆர்.டி) க்கான ஆன்சிடாசிட் சிகிச்சையும் வழ ங்கப்படுகிறது.