குடல் அழற்சி நோய் - Inflammatory Bowel Disease in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

April 24, 2019

March 06, 2020

குடல் அழற்சி நோய்
குடல் அழற்சி நோய்

குடல் அழற்சி நோய் என்றால் என்ன?

குடல் அழற்சி நோய் (ஐ.பி.டி) என்பது செரிமானப்பாதை மற்றும் இரைப்பை-குடல் பாதையில் அழற்சி அல்லது வீக்கம் மற்றும் வாழ்நாள் முழுவதும் குறைந்த செயல்பாடு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நிலை ஆகும்.நீண்ட காலத்திற்கு ஏற்படும் அழற்சி, இரைப்பை-குடல் (ஜி.ஐ) பாதையின் சேதத்திற்கு வழிவகுக்கும்.குரோன்'ஸ் நோய் மற்றும் புண்ணுறு பெருங்குடல் அழற்சி ஆகியவை ஐ.பி.டி இன் கீழ் ஏற்படும் இரண்டு வகையான அழற்சி வடிவங்கள் ஆகும்.புண்ணுறு பெருங்குடல் வளர்ச்சியில் பெருங்குடல் முதன்மையாக பாதிக்கப்படுகிறது, ஆனால் வாயில் இருந்து மலவாய் வரை உள்ள ஜி.ஐ பாதையின் எந்த பகுதியில் குரோன்'ஸ் நோயின் பாதிப்பு ஏற்படலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பெரும்பாலும், 15 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு ஐ.பி.டி நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.அறிகுறிகள் ஒவ்வொரு நபர்களின் மத்தியில் வேறுபடலாம்.சில அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

 • எடை இழப்பு.
 • களைப்பு.
 • இரத்தம் அல்லது சீழ் உடன் அல்லது இல்லாமல் மீண்டும் மீண்டும் ஏற்படும் வயிற்றுப்போக்கு.
 • குடல் மலத்தை வெளியேற்றவேண்டும் என்ற அவசரம்.
 • நோய் உயிர்ப்புள்ள கட்டத்தில் காய்ச்சல்.

ஐ.பி.டி தொடர்ந்து இருந்தாலும், அறிகுறிகள் வழக்கமாக அழற்சியின் அளவை பொறுத்து வந்து போகும்.வீக்கம் கடுமையாக இருக்கும்போது, ​​நோய் உயிர்ப்புள்ள தீவிரமான நிலையில் உள்ளது, மற்றும் வீக்கம் குறையும்போது, ​​நோய் லேசான அறிகுறிகளுடன் நிவாரணம் அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஐ.பி.டி நோயின் உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் பின்வரும் காரணிகள் ஐ.பி.டி உருவாக்குவதற்கான காரணம் என நம்பப்படுகிறது.

 • மரபணு:
  உங்கள் குடும்ப வரலாறில் எவரேனும் ஐ.பி.டி நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், நீங்களும் இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.
 • பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு:
  பொதுவாக, உங்கள் உடம்பானது வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் போன்ற அயல் உயிரினங்களை தாக்குகிறது.சுற்றுச்சூழல் அல்லது பிற தூண்டுதல்களின் காரணமாக, உடல் திசுக்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு அமைப்பு குறிப்பாக குடல் நோய்களுக்கு எதிராக செயல்படுகையில், அது ஜி.ஐ பாதையில் ஏற்படும் அழற்சிக்கு வழிவகுக்கிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

ஒரு உடல் பரிசோதனை மற்றும் விரிவான மருத்துவ வரலாற்றுக்கு அப்பால், அகநோக்கியல் அல்லது பெருங்குடல் அகநோக்கியல் ஆகிய சோதனைகளில் கூட்டு மற்றும் எம்.ஆர்.ஐ, சி.தி ஸ்கேன் மற்றும் கான்ட்ராஸ்ட் ரேடியோக்ராபி போன்ற தோற்றமாக்கல் சோதனைகள் ஆகியவை வழக்கமாக ஐ.பி.டி நோயைக் கண்டறிய உதவுகின்றன.மலப் பரிசோதனை மற்றும் இரத்த சோதனைகள் நோயறிதலை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்படுகின்றன.

சிகிச்சையின் முக்கிய நோக்கம் குடல் அழற்சியைக் குறைப்பதும், அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதும் ஆகும்.ஒருமுறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டால், இது மறுபடியும் ஏற்படாமல் தடுக்கவும் மற்றும்  அதை பராமரிக்கவும் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இது பராமரிப்பு சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.கடுமையான சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.மேற்கோள்கள்

 1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; What is inflammatory bowel disease (IBD)?
 2. Crohn's and Colitis UK. [Internet]. United Kingdom; Treatments.
 3. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Inflammatory bowel disease.
 4. National Center for Complementary and Integrative Health. [Internet]. U.S. Department of Health & Human Services. Inflammatory Bowel Disease (IBD) and Irritable Bowel Syndrome (IBS).
 5. Jan Wehkamp. et al. Inflammatory Bowel Disease. Dtsch Arztebl Int. 2016 Feb; 113(5): 72–82. PMID: 26900160

குடல் அழற்சி நோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for குடல் அழற்சி நோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.