சுருக்கம்
நமது சிறுநீரகங்கள் நம் உடம்பில் உள்ள நச்சுக்களையும், கழிவுப் பொருட்களையும் சுத்தப்படுத்த அடிப்படையாக இருக்கின்றன. ஆயினும், சிறிய கடினமான பொருட்களின் வளர்ச்சி, ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களில் ஏற்படுவதால், இந்த செயல்முறையை மிகவும் அசௌகரியமாகவும், கவலையானதாகவும் ஆக்குகிறது. சிறுநீரக கற்கள் பொதுவாக அவற்றின் தீவிரத்தை விட மிகவும் வலி மிகுந்தவை. பெண்களை விட ஆண்களிடமே அதிகம் காணப்படும் ஒரு நிலையில், சிறுநீரக கற்கள், ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களிலும் வளரும் சிறிய, கல் போன்ற கடினமானவை ஆகும். அவை அளவு, தன்மை, நிறம் மற்றும் வகையின் படி வேறுபடும். குறிப்பிட்ட தாதுப் பொருட்கள் படிவதால், அவை உருவாகின்றன. சுண்ணாம்பு சத்து, யூரிக் அமிலம், ஸ்ட்ருவைட் அதிகரித்த நிலைகள் அல்லது சிஸ்டின்யூரியா (சிறுநீரில் சிஸ்டைன் அமிலம் வெளியேறுவது) எனப்படும் நிலையின் விளைவாக இந்தப் படிதல் ஏற்படுகிறது.
மிகவும் பொதுவாக தெரியக் கூடிய அறிகுறிகள், சிறுநீரின் நிறம் மற்றும் வாடையில் ஏற்படும் மாற்றங்கள், அத்துடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவசியம், ஒவ்வொரு முறையும் சிறிய அளவே கழிப்பது போன்றவை ஆகும். கூடுதலாக, கீழ் முதுகு, அடி வயிறு, இடுப்பு, பக்கவாட்டுப் பகுதியில் வலி ஏற்படலாம். உடலில் அமிலங்களும், தாதுக்களும் அதிகரிக்கும் நிலைகளைத் தவிர, தைராய்டு சுரப்பு அதிகரிப்பு, சிறுநீரக கோளாறுகள், செரிமானக் கோளாறுகள், சிறுநீர்ப் பாதை தொற்றுகள் (UTIs) ஆகியவையும் ஒரு நபருக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
சிறுநீரகக் கற்களைக் கண்டறியும் முறை ஒரு தனிநபரின் மருத்துவ சரித்திரத்தைப் பொறுத்து அமைகிறது, ஒரு முழு உடல் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், எக்ஸ்-ரேக்கள், அல்ட்ராசோனோகிராஃபி மற்றும் சிடி ஸ்கேன்கள்.
சிகிச்சை, கல்லின் அளவைப் பொறுத்து இருக்கிறது, மேலும் சிறுநீரில் வெளியேறுவதற்காக வெறுமனே காத்திருப்பது முதல் ஒலி அலை சிகிச்சை மூலம் அந்தக் கல்லை நொறுக்குவது அல்லது அறுவை சிகிச்சை கூட செய்வது வரை வேறுபடலாம். தடுக்கும் முறை, முக்கியமாக அதிக அளவு தண்ணீர் குடிப்பது, தாதுப் பொருட்கள் படியக் காரணமான உணவுகளை தவிர்ப்பது மற்றும் உப்பைக் குறைவாக உட்கொள்வது இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. மறுபடியும் வரக்கூடிய ஆபத்து இருந்தாலும் , முன்கூட்டியே பரிசோதித்தல் நல்லது. ஏனெனில் மரபுவழித் தாக்க பிரச்சினைகள் இல்லையென்றால், சிறுநீரக கற்களுக்குத் திறமையாக சிகிச்சை அளிக்க முடியும். சிறுநீரக கற்களால், சிறுநீரக பாதிப்பு அல்லது தொற்று, UTI, சிறுநீரக குழாய் அல்லது சிறுநீரகங்களில் அடைப்பு மற்றும் சிறுநீரில் ரத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.