சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது பாதிக்கப்பட்ட சிறுநீரகதிற்கு (பெறுநர்) மாற்றாக டோனர் வழங்கக்கூடிய ஆரோக்கியமான சிறுநீரகத்தை பொருத்தும் ஒரு செயல்முறையாகும். இந்தியாவில் இறுதி-நிலை சிறுநீரக நோய் (இ எஸ் ஆர் டி) வழக்குகளில், ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 151 லிருந்து -232நோயாளிகள் வரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டையாலிசிஸ் செயல்முறைகள் தேவைப்படுகின்றது.
ஏன் இந்த சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது?
டோனரிடமிருந்து பெறப்படும் ஆரோக்கியமான சிறுநீரகத்தை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதனால் இஎஸ்ஆர்டி நோயாளிகளில் சிறுநீரக செயல்பாட்டை மீட்டெடுக்க உதவியாயிருக்கிறது. இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது முக்கியமாக இஎஸ்ஆர்டி நோய் உடையவர்களுக்கே குறிப்பிடப்படுகிறது. மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- முகம் மற்றும் முனைப்புள்ளிகளில் ஏற்படும் எடிமா (வீக்கம்).
- தலைவலி.
- உயர்ந்த இரத்த அழுத்தம்.
- சருமத்தின் வெளிறியநிறம்.
- காபி நிறமுடைய சிறுநீர்.
- சோர்வு.
- சருமத்தில் ஏற்படும் அரிப்புத்தன்மை.
இது யாருக்கு தேவைப்படுகிறது?
இந்நிலையானது, சிகிச்சையளிக்கப்படாமல் விட்டுவிட்டால், இறுதியில் சிறுநீரக செயல்பாட்டை முற்றிலுமாக சீர்குலைத்துவிடுவதோடு உடனடியான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றது. அதன் காரணங்கள் பின்வருமாறு:
- மருந்துகள் எடுத்து கொண்ட போதிலும் கட்டுப்படுத்தப்படாத உயர்ந்த இரத்த அழுத்தம்.
- மருந்துகள் எடுத்து கொண்ட போதிலும் கட்டுப்படுத்தப்படாத உயர்ந்த இரத்த சர்க்கரை அளவுகள் (மேலும் வாசிக்க: நீரிழிவு தடுப்பு செயல்முறைகள்).
- பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்.
- உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் நெப்ரோஸ்கிளிரோஸிஸ் (ஒரு வகையான சிறுநீரக கோளாறுகள்).
- க்ளோமெருலோனெப்ரிடிஸ் போன்ற குளோமருலர் கோளாறுகள் (ஒரு வகையான சிறுநீரக கோளாறு).
- வாஸ்குலர் நிலைகள், அதிலும் சிறுநீரகம்-குறித்த நோய்கள்.
இது எவ்வாறு செய்யப்படுகிறது?
சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையினை உயிர்வாழக்கூடிய டோனோரின் சிறுநீராகத்தை பயன்படுத்தியோ அல்லது இறந்தவருடைய சிறுநீராகத்தை பயன்படுத்தியோ செய்யப்படலாம். டோனோர் மற்றும் பெறுநரின் இணக்கத்தன்மையை சோதிக்க இரத்த வகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் சிறுநீரக பொருத்தமின்மைத் தவிர்க்கப்படுகிறது. இந்த செயல்முறையானது மயக்கமருந்து கொடுப்பட்ட நிலையில் நிகழ்த்தப்படுகிறது. இதன் முழு சிகிச்சை முறையானது 2-4 மணி நேரத்திற்கு மேல் போகாது. இதனால் ஏற்படும் சிக்கல்களை கவனித்துக்கொள்வதனால் இதன் செயல்முறை சுமூகமாக மேற்கொள்ளப்படலாம்.
செயல்முறைக்கு பிறகு, பெறுநரின் வயிற்றில் பொருத்தப்பட்ட டோனோரின் சிறுநீரகம் புதிய உடலுடன் சேர்ந்து இயங்குவதை பராமரிக்க, ஸ்டெராய்டுகள் போன்ற எதிர்ப்பு நிராகரிப்பு மருந்துகள் கொடுப்பதன் மூலம் உறுப்பு நிராகரிப்பு ஏற்படாமல் நிர்வகிக்கலாம்.
வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பின்தொடர்ந்து, பொதுவாக நோயாளிகளுக்கு பெரிடோனியால் அல்லது ஹெமோடையாலிசிஸ் போன்ற மேற்கொண்ட சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை. இருப்பினும், மாற்று அறுவை சிகிச்சை செய்த சிறுநீரகம் செயலிழக்கும் சந்தர்ப்பங்களில், நோயாளிகள் மீண்டும் டையாலிஸிஸ் சிகிச்சை முறையை தொடர்தல் வேண்டும்.