கர்ப்பக் காலத்தில் கால் பிடிப்பு என்றால் என்ன?
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் கால் பிடிப்பு என்பது மிகவும் அதிகமாக ஏற்படும் ஒரு அறிகுறியாகும். சுமாராக ஐம்பது சதவிகித கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த அறிகுறி ஏற்படுகிறது. இந்த கால் பிடிப்பு பொதுவாக மாலையில் அல்லது இரவில் ஏற்படுகின்றது, குறிப்பாக கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாத காலத்தில் அதிகமாக இருக்கும். இந்த கால் பிடிப்பு மிகுந்த வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி அன்றாட வாழ்கையை பாதிக்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கர்ப்பகாலம் என்பது பெண்கள் பல உடல் மற்றும் மன மாற்றங்களை அனுபவிக்கும் ஒரு கட்டம். இந்த காலத்தில் கால் பிடிப்பு ஏற்படுவது பொதுவாக ஒரு பெரிய கவலை இல்லை. இத்தகைய கால் பிடிப்பு ஏற்படுவதற்கு ஒரு தெளிவான காரணம் இல்லாமல் கூட இருக்கலாம். கால் பிடிப்பின் வேறு முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- அடிக்கடி ஏற்படும் தலைவலி.
- அடிவயிற்று வலி மற்றும் இடுப்பு வலி.
- நரம்புகள் மீது அழுத்தம்.
- கீழ் முதுகு வலி.
தசை வலி பொதுவாக ஒரு சில விநாடிகளிலிருந்து அதிகபட்சமாக பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் கால் பிடிப்பிற்கு எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை. இருப்பினும், எடை அதிகரித்தல் ஒரு காரணமாக இருக்கலாம். கர்பத்தில் இருக்கும் குழந்தை காரணமாக சில இரத்த நாளங்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படும், இதனால் கால்களில் இரத்த ஓட்டம் குறையலாம். தசைகள் திடீரென்று சுருங்கும் போது பிடிப்பு ஏற்படுகிறது. இது தசை சுளுக்கு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. கால்சியம் மற்றும் சோடியம் போன்ற சில கனிம குறைபாடுகளும் தசைப் பிடிப்பை தூண்டலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஒரு மருத்துவர் இந்த நோயை வழக்கமான அதன் அறிகுறிகள் மற்றும் உடல் பரிசோதனை மூலம் கண்டறிவர்.
அறிகுறிகளின் நிவாரணத்திற்காக மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். மேலும் கனிம பிற்சேர்வுகளும் பரிந்துரைக்கப்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதிகமான மருத்துவ தலையீடு இல்லாமலேயே கால் பிடிப்பு நிவாரணமடைகிறது.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- கெண்டைக்கால் தசையை நீட்டுதல், கெண்டைக்கால் தசை பிடிப்பின் நிவாரணத்தில் உதவும்.
- மசாஜ் மூலம் வலி நிவாரணம் பெறலாம்.
- நிறைய தண்ணீர் அருந்துதல் தசை வலி நிவாரணத்திற்கு உதவும்.
- முறையான உடற்பயிற்சி தசை மற்றும் மூட்டு இருகுதலை குறைக்கும். இதன் மூலம் தசைப்பிடிப்புகளை குணப்படுத்த முடியும்.
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்த கால் மீளுறைகள் பயன்படுத்தப்படலாம்.
- கால்களை மேல் வாட்டமான நிலையில் வைத்துக் கொள்வது கடுமையான வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும்.
- வெளிப்புறமாக வெப்பம் பயன்படுத்துவது நிவாரணத்திற்கு உதவுகிறது.