சுருக்கம்
வெள்ளைப்படுதல்(லுகோர்ஹொயா) என்பது பெண்களுக்கு காணப்படும் பொதுவான மற்றும் சாதாரணமான ஒரு நிலை. இந்த நிலையில் வெளிறிய சளி போன்ற திரவம் வெளிவருவதால், எப்போதும் யோனி(கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதை) ஈரமாக மற்றும் வழவழப்பாகவும் இருக்கும். இதனால் யோனியில் நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. வெள்ளைப்படுதல் பருவமடைந்த ஒரு வயது வந்த பெண்ணின் வாழ்க்கையில் மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக ஏற்படுகிறது. வெள்ளைப்படுதலின் அறிகுறிகள், அரிப்பு இல்லாத வெள்ளை படல வெளியேற்றம், ஈரப்பத உணர்வு போன்றவை. இது பொதுவாக பாதிப்பில்லாதது மேலும் இது எந்த சிக்கல்களும் இல்லாமல் சரிசெய்யப்பட கூடியது. வெள்ளைப்படுதலின் பிற காரணங்களில் பாலியல் முறையினால் பரவக்கூடியதும், பாலியல் ரீதியினால் பரவாத நோய்த்தாக்கங்களும் அடங்கும். இந்தச் சூழல்களில், அரிப்பு, சிவத்தல், கெட்ட நாற்றம் மற்றும் அசௌகரியம் அல்லது வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இத்தகைய தொற்றுநோய்களை அல்லது இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களின் வளர்ச்சியை, மருந்துகள் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்க இயலும். அதிகப்படியாக அல்லது அசாதாரணமானதாக வெள்ளைப்படுதல் இல்லாதவரையில், அதற்கு எந்தவகையான சிகிச்சையையும் தேவையில்லை.