இரத்த புற்றுநோய் - Blood Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 11, 2018

March 06, 2020

இரத்த புற்றுநோய்
இரத்த புற்றுநோய்

இரத்த புற்றுநோய் என்றால் என்ன?

இரத்தக் அணுக்களின் வளர்ச்சியில் ஏற்படும் தொந்தரவு காரணமாக உடலின் இயல்பான செயல்பாட்டைத் (நோய்த்தொற்றுக்கள், ஹோமியோஸ்டாஸிஸ் அல்லது பழுதுபார்க்கும் செயல்பாடுகளுக்கு எதிராக போராடுதல்) தடுக்கும் ஒரு நிலை இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது மிகுதியான அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இரத்தப் புற்றுநோய்களின் முக்கிய வகைகள் எழும்புநல்லிப் புற்றுநோய், வெள்ளையணுப் புற்றுநோய் மற்றும் நிணநீர் உயிரணுப்புற்றுநோய் ஆகும். இவை புற்றுநோய் காரணமாக ஏற்படுகிறது மற்றும் இவரு முறையே இரத்தத் துகலணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் நிணநீர் அணுக்கள் ஆகிய 3 வெவ்வேறு அணுக்களை பாதிக்கின்றன.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இரத்த புற்றுநோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் மாறுபடும் என்றாலும், சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

 • திடீரென்று காரணம் இல்லாத எடை இழப்பு.
 • களைப்பு அல்லது தீவிரமான சோர்வு.
 • அதிக வியர்வை, குறிப்பாக இரவில்.
 • மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்று.
 • மூட்டுகள் மற்றும்/அல்லது எலும்புகளில் வலி.
 • தோல் அரிப்பு, எளிதாக காயங்கள் மற்றும்/அல்லது இரத்தம் வடிதல்.
 • தலை, கழுத்து, இடுப்பு (வயிறு-தொடை இணைவிடம்) அல்லது வயிற்றில் புடைப்புகள் உருவாதல் அல்லது வீக்கம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இரத்த புற்றுநோய் முக்கியமாக டி.என்.ஏவில் ஏற்படும் பிறழ்வுகள் அல்லது குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பிறழ்வுகளின் காரணம் தெரியவில்லை மற்றும் குடும்ப வரலாறு, வயது, பாலினம், இனம், அல்லது பிற சுகாதாரம் தொடர்பான நிலைமைகள் போன்ற காரணிகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. சில இரசாயனம் அல்லது கதிர்வீச்சு வெளிப்பாட்டின் வரலாற்றுடன் இரத்த புற்றுநோய் தொடர்புடையது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பொதுவாக, இரத்த புற்றுநோயானது வேறு ஏதேனும் ஒரு நோய்க்காக இரத்தப் பரிசோதனை செய்யும்போது தற்செயலாக கண்டறியப்படுகிறது அல்லது உங்கள் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர் பரிந்துரைக்கும் பின்வரும் சில பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது:

 • இரத்தப் பரிசோதனைகள்:
  • புற இரத்த மென் படலம்.
  • முழு இரத்த எண்ணிக்கை (எஃப்.பி.சி).
  • தொற்றுநோய் பாதிப்பு ஆய்வு/வைராலஜி சோதனை.
  • யூரியா மற்றும் மின்பகுளிகள்.
  • கல்லீரல் செயல்பாடு சோதனைகள்.
  • ஃப்ளோ சைட்டோமெட்ரி (இம்முனோஃபினோடைப்பிங்). 
  • உயிரணுவாக்கம் சோதனை.
 • எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் கணு உயிரணு.
 • ஸ்கேன்கள்.
  • எக்ஸ்-கதிர்கள் சோதனை.
  • அல்ட்ராசவுண்ட்.
  • கணிப்பொறி பருவரைவு (சி.டி).
  • காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ).

இரத்தப் புற்றுநோயின் மேலாண்மை சிகிச்சை பல்வேறு மட்டங்களில் சிகிச்சையை உள்ளடக்கியது:

 • உயர்மட்ட செறிவு சிகிச்சை - புற்றுநோய் அணுக்களை கொல்லவும் அவற்றை பரவுவதில்லை இருந்து நிறுத்தவும் வலுவான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அடங்குபவை பின்வருமாறு:
  • அதிகமான அல்லது நிலையான மருந்தவு கீமோதெரபி (குறைந்த அளவு தீவிர சிகிச்சையில் குறைந்த மருந்தளவு பயன்படுத்தப்படுகிறது).
  • கதிர்வீச்சு அல்லது அறுவை சிகிச்சை.
  • தண்டு உயிரணு மாற்று அறுவை சிகிச்சை.
 • கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றின் பயன்பாடு (குறைந்த தீவிர சிகிச்சையாகவும் பயன்படுத்த முடியும்):
  • ஓரினநகல் எதிர்ப்பொருள் (மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள்).
  • உயிரியல் சிகிச்சை.
  • நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை.மேற்கோள்கள்

 1. Bloodwise. What is blood Cancer ?. 23 May 2019; [Internet]
 2. Bloodwise. Blood cancer treatments and side effects. 11 Aug 2017; [Internet]
 3. Bloodwise. Blood cancer treatments and side effects. 11 Aug 2017; [Internet]
 4. National Health Service [Internet]. UK; Overview - Multiple myeloma
 5. Imperial College Healthcare. Blood cancer. [Intrnet]

இரத்த புற்றுநோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for இரத்த புற்றுநோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.