கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு நோயாளியின் சேதமடைந்த கல்லீரலை, எந்த மருந்தோ அல்லது குணப்படுத்தும் முறையினாலோ சிகிச்சையளிக்க முடியாத போது, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீக்கப்பட்டு ஒரு ஆரோக்கியமான கல்லீரலால் மாற்றப்படுகிறது.
இது ஏன் செய்யப்படுகிறது?
ஒருவர்க்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்ற கல்லீரலின் தவறான செயல்பாடுகளைக் குறிக்கும் பல அறிகுறிகள் உள்ளன. கல்லீரல் செயலிழப்பினால் ஏற்படும் சில ஆரம்ப மற்றும் தனித்தன்மையற்ற அறிகுறிகளாவன:
- குமட்டல்.
- வயிற்றுப்போக்கு.
- களைப்பு.
- திடீர் எடை இழப்பு.
- அடிவயிற்றில் தொடர்ந்து வலி இருப்பது (மேலும் படிக்க: வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்கள்).
- அடிவயிறு மற்றும் கால்களில் வீக்கம்.
தனித்துவமான அறிகுறிகளில் அடங்குவன:
- குடல் இரத்தப்போக்கு - இரத்தத்தில் உள்ள நவச்சார ஆவி (அம்மோனியா) மற்றும் பித்தத்கள் (பிலிரூபின்) ஆகியவற்றை திறம்பட நீக்குவது கல்லீரலின் பொறுப்பாகும். ஒரு வேலை கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால், கல்லீரல் இரத்த நாளங்களின் சவ்வுகள் மெலிதாக மாறுகின்றன மற்றும் உறுப்பானது தரம் குறைந்த பொருட்களை அகற்றாமல் விடுகிறது, இதனால் அழுத்தம் அதிகரிக்கின்றது. மெல்லிய மற்றும் சிறிய நாளங்கள் அல்லது இரத்த நாளங்கள் குருதியோட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், கிழிவு ஏற்பட்டு குடல் வழியாக இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. இந்த இரைப்பை குடல் இரத்தப்போக்கு மிகவும் தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தானதாகும்.
- திரவ தக்கவைப்பு - கல்லீரலின் ஒரு மிக முக்கிய செயல்பாடு, சில திரவங்களை மீண்டும் உறிஞ்சி இரத்த ஓட்டத்திற்குள் மீட்டெடுப்பதாகும். கல்லீரல் பழுதடைதல் அல்லது செயலிழப்பு ஏற்படுவதனால் வெண்புரதம் (ஆல்புமின்) மற்றும் இதர புரதங்களின் உற்பத்தியைக் குறைக்க வழிவகுக்கிறது, இது இதனுடன் ஆன்கோடிக் அழுத்தத்தை பாதிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தில் இருந்து திரவ இழப்பைத் தடுக்கிறது. திரவங்கள் பின்னர் வெளியேறி உடலினுள் சேர்த்துவைக்கப்பட்டு மார்பு நீர்க்கோவை நோய் ( மார்பு) அல்லது பாத நீர்க்கட்டு (கால்கள்) ஏற்பட வழிவகுக்கும். இது உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்காது, ஆனால் இதனை உடலில் இருந்து வற்றச் செய்ய வேண்டும்.
- மஞ்சள் காமாலை - ஒரு வேலை கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால், கல்லீரலால் இரத்தத்தில் இருந்து சில வளர்சிதை மாற்ற பொருட்களை அகற்ற முடியாது. பிலிரூபின் அந்த மாதிரியான ஒரு பொருள் ஆகும், இது இரத்த சிவப்பணுக்களில் இருந்து (ஹீமோகுளோபின்) உற்பத்தி செய்யப்படுகிறது, மற்றும் பிலிரூபின் அளவு அதிகரித்தால் , உடல் மஞ்சள் நிறம் ஆகின்றது. இந்த நிலை பொதுவாக மஞ்சள் காமாலை என்று குறிப்பிடப்படுகிறது இது அதிக காய்ச்சல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தலாம்.
யாருக்கு இது தேவைப்படுகிறது?
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை எந்தவொரு மருந்துகளாலும் சிகிச்சையளிக்க முடியாத கல்லீரல் செயலிழப்புகளில் மிகவும் முன்னேறிய நிகழ்வுகளில் மட்டுமே செய்யப்படுகிறது. கல்லீரல் செயலிழப்பின் பொதுவான காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:
- கல்லீரல் இழைநார் வளர்ச்சி - பல்வேறு நோய்களால் கல்லீரல் சீர்கெடுகிறது மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சியால் கல்லீரல் செயலிழக்கத் தொடங்குகிறது.
- பிலியரி அட்ரசியா - இது குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளிடம் வரும் ஒரு அரிய நிலையாகும், இதில் கல்லீரல் மற்றும் சிறு குடலிற்கு இடையே உள்ள பித்த குழாய் தடுக்கப்படுகிறது அல்லது இல்லாமல் இருக்கிறது, இதற்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்படவேண்டும்.
மற்ற நிலைகள்:
- கல்லீரலில் புற்றுநோய் அல்லது கட்டி இருத்தல்.
- அதிகளவில் மது அருந்துதல்.
- சில பரம்பரை நோய்கள்.
இது எப்படி செய்யப்படுகின்றது?
கல்லீரல் மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
நோயாளியின் கல்லீரல் செயலிழப்பு நிலை மற்றும் உடல் நிலைக்கு ஏற்ப கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல்கள் பொதுவாக ஒரு உறுப்பு வங்கியிலிருந்து பெறப்படுகின்றன, பதிவு செய்யப்பட்ட நன்கொடையாளர்களின் மரணத்திற்குப் பின் கல்லீரல் பெறப்பட்டு வைக்கப் பட்டிருக்கும். சில சந்தர்ப்பங்களில், ஆரோக்கியமான நபர்கள் அல்லது உறவினர்கள் பணம் பெற்றுக்கொண்டு அல்லது மனிதாபியமான அடிப்படியில் தங்கள் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்குகின்றனர்.
செயலிழந்த கல்லீரல் நோயாளிகளின் / பெறுபவர்களின் உடலில் இருந்து முதலில் அகற்றப்படுகிறது, மற்றும் இரத்த ஓட்டம் இயந்திரத்தினால் நிலைப்படுத்தி, தானமளிப்பவரிடம் இருந்து ஆரோக்கியமான கல்லீரல் வெட்டி எடுக்கப்பட்டு மீண்டும் பெறுநருக்கு அளிக்கப்படுகிறது.இந்த செயல்முறைக்கு தீவிர மற்றும் விரிவான பாதுகாப்பு தேவைப்படுகிறது மற்றும் 5 - 6 மணி நேரம் வரை நீடிக்கும். வெளி உறுப்பை உடல் ஏற்றுக்கொள்ளவதற்கு உதவியாக நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.
வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சை விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் சிகிச்சைக்குப் பின் நோயாளிக்கு பொருத்தமான கவனிப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படுகிறது.