லைம் நோய் என்றால் என்ன?
லைம் நோய் என்பது பொறிரேலியா பர்க்தார்பெர்ரி என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோய் தொற்று ஆகும், இது டிக் கடி மூலம் பரவுகிறது. சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதி தடிப்பு போன்று வட்ட வடிவில் காணப்படுகிறது. இந்த டிக் கடியினால் மரணத்தை ஏற்படுத்தும் அபாயம் இல்லை மற்றும் இந்த நோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் இதனை குணப்படுத்துவது மிக எளிது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- தடிப்பு - லைம் நோயின் ஆரம்ப கட்டத்தில் தோன்றும் அறிகுறிகள் சாதரண தடிப்பு என தவறாக கணிக்கப்படுகிறது. தடிப்பு அல்லது 'ரியீத்மா மிக்ரான்ஸ்' கடி ஏற்பட்டு 1-2 வாரங்களில் பொதுவாக வெளிப்படுகிறது.இது வழக்கமாக ஏற்படும் வலி மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதில்லை ஆனால் ஒரு மாதத்திற்கு இந்த அறிகுறிகள் தொடர்ந்து காணப்படும்.
- மற்ற அறிகுறிகள் - தடிப்புடன், மூட்டு வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு போன்றவை காணப்படுகின்றன, இவை அனைத்தும், எப்போதும் காணப்படும் பொதுவான அறிகுறிகளாகும், இவற்றால் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
லைம் நோய் முற்றிய கட்டத்தில்அடைத்தால் அதன் அறிகுறிகள் மிகவும் சிக்கலானதாகவும் மற்றும் கவலை அடைய செய்யவதாகவும் இருக்கும். அவற்றில் சில அறிகுறிகள் பின்வருமாறு:
- கடுமையான சோர்வு.
- விறைத்த அல்லது கழுத்து வலி.
- காய்ச்சல்.
- முக வாதம் / பால்சி.
- வாயின் உட்புறங்களில் கூச்ச உணர்வு.
- தொடர்ந்து காய்ச்சல்.
லைம் நோயின் அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் நிரந்தரமானவை அல்ல என்றாலும், அதற்க்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் தட்டிக்கழிப்பதால், நோய் முற்றிய நிலையில் அல்லது கடைசி தருணங்களில், அது மிகவும் வலி நிறைந்ததாகவும், வலியை தாங்கிக்கொள்வதற்கு கடினமாகவும் இருக்கும். நோய் முற்றிய நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன:
- நரம்பியல் கோளாறுகள்.
- முற்றிய முடக்குவாதம் மற்றும் கைகாலுறுப்புகள் உணர்வின்மை.
- மூட்டு வாதம், மூட்டுகளின் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
டிக் கடியிலிருந்து பரவும் பொறிரேலியா பர்க்தார்பெர்ரி லைம் நோய் ஏற்பட காரணியாகிறது. இது கடிப்பதோடு மட்டுமல்லாமல் ஸ்பைரோகிட்ஸ் நுண்ணுயிரிகளை உடலில் பரவச்செய்கிறது .அது இரத்த நாளங்களுக்குள் நுழைந்து மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஒருவரை பூச்சி அல்லது டிக் கடித்த பிறகு ஓரிரு வாரங்களில் தடிப்பு காணப்பட்டால், அவர்கள் முடிந்த விரைவில் மருத்துவரை சந்திப்பது நல்லது.'ரியீத்மா மிக்ரான்ஸ்’ என்பது ஒரு குறிப்பிட்ட தடிப்பு போன்றதாகும், இது டிக் பூச்சி கடித்தால் மட்டும் நிகழ்கிறது மற்றும் பொதுவாக இது ஒரு புல்ஸ்ஐ பலகை போன்ற வட்ட வடிவத்தைக் கொண்டிருக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை கொண்டு இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது மிக எளிதாகும்.
நோய் முற்றிய நிலையில் அறிகுறிகள் அதிகமாக காணப்பட்டால், அதை உறுதிப்படுத்தலுக்கான ஒரு பாலிமரேசு தொடர் வினை (பிசிஆர்) பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும்.
டாக்சிசைக்ளின், அமொக்ஸிசில்லின் அல்லது செஃப்ரோக்ஸைம் அக்ஸெடில் போன்ற மருந்துகள் ஆரம்ப கட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. நரம்பியல் அல்லது இதய பிரச்சனைகள் கொண்ட நோயாளிகளுக்கு, நரம்பு சிகிச்சை முறையில் பென்சிலின் அல்லது செஃபிரியாக்ஸோன் உள்ளிட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.