நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் (லிம்போமா) - Lymphoma in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 26, 2019

July 31, 2020

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்
நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் (லிம்போமா) என்றால் என்ன?

லிம்போமா என்பது, செல்களின் இறப்பு இல்லாமல், நிணநீர் அணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் வகைப்படுத்தப்படும் ஒரு வகையான புற்று நோய் ஆகும்.இது நிணநீர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும், மற்றும் அவை அனைத்தும் ஒரே இடத்தில குவியும் தன்மைக்கும். வழிவகுக்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

லிம்போமாவின் ஆரம்ப அறிகுறிகள்  பொதுவாக, சாதாரண  உடல்நலப் பிரச்சினைகளாக கருதப்பட்டு,  அலட்சியப் படுத்தப்படுகிறது.அதன் ஆரம்ப அறிகுறிகளில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • கழுத்து அல்லது வயிறு மற்றும் தொடை இணையும் இடம் அல்லது அக்குள் போன்ற பகுதிகளில் தோன்றும்  நிணநீர் முனைகளில்  ஏற்படும் வீக்கம் ஆகும்.
  • சோர்வு.
  • நிலையற்ற அல்லது இடைவிடாத காய்ச்சல்.
  • இரவில் ஏற்படும் வியர்வை.
  • திடீர் மற்றும் விவரிக்கப்படாத எடை இழப்பு.
  • பசியிழப்பு.
  • முடி கொட்டுதல்.

எனினும், இந்த நோய் கவனிக்கப்படாவிட்டால்,இதன் அறிகுறிகள் மிகவும் கடுமையானதாகவும், குறிப்பிடத்தக்கதாகவும் இருக்கும்.முற்றிய நிலையின் அறிகுறிகள் சில பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

லிம்போமாக்கள் ஏற்படுகின்ற போது, ​​லிம்போசைட்கள், அதாவது, அந்நிய அச்சுறுத்தலுக்கு எதிரான நோய் எதிர்ப்புக்கு பொறுப்பான வெள்ளை இரத்த அணுக்கள், பல்வேறு காரணங்களால் பெருகி வரும்.

லிம்போசைட்ஸின் அத்தகைய திடீர் வெடிப்பிறகான குறிப்பிட்ட காரணம் இன்னும் அறியப்படவில்லை,மேலும் இதன் நோயறிதலை கண்டறிய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.சில காரணிகள், அதாவது வயது மற்றும் பாலினம் போன்ற சில காரணிகள் இந்த புற்றுநோயின் அபாயகரமான காரணியாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளன.ஆனால் யாரும் இதை இன்றுவரை உண்மை என நிரூபிக்கவில்லை.

தெரிந்த மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய லிம்போமாவின் ஆபத்து காரணிகளவான, உடல் பருமன், புற்றுநோய்க்காரணிகள், மதுப்பழக்கம், புகைபிடித்தல், கதிர்வீச்சு மற்றும் புகையிலை ஆகியவை ஆகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நிணநீர் புற்றுநோயைக் குறிக்கும் அறிகுறிகளின் அடிப்படையில், கட்டுப்பாடற்று வளர்ந்து வரும் செல் வகைகளின் சோதனை  மற்றும்   திசு பரிசோதனை ஆகியவற்றை மருத்துவர் அல்லது ஹெமடோபதோலோஜிஸ்ட் பரிந்துரைப்பார்.

லிம்போமா நோயின் காரணத்தை கண்டறிந்த  பிறகு, மற்ற பரிசோதனைகளான, மார்பக எக்ஸ் ரே, கணிப்பொறி பருவரைவு (சி டி ) அல்லது காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) ஆகியவற்றுடன் இரத்த பரிசோதனை போன்றவை உடலில் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறியவும், நோயின் வளர்ச்சி விகிதத்தை அறியவும் செய்யப்படுகிறது.

புற்றுநோய்  நிலையின் அடைப்படையில் அதற்கான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நோய்க்கு ஆரம்ப நிலையில் பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவம் சார் சிகிச்சை மட்டுமே ஆகும்.எனினும், பிற்காலத்தில் ,வேதிமுறை நோய்நீக்கம் மற்றும் கதிவீச்சு சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டன.புற்றுநோய்களான பி-செல்ககளை குறிவைக்கிற ரிட்டுக்ஷிமப் போன்ற மருந்துகள் அத்தகைய நிலைகளில் பயனுள்ளதாக உள்ளன.அதிக நோயெதிர்ப்பு பற்றாக்குறையுடன் இருக்கும் சிறப்பு நோயாளிகளுக்கு, மருத்துவர்கள்  எலும்பு மஜ்ஜை அல்லது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதால் அது  புதிய மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செல்களை உருவாக்க உதவுகிறது.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Lymphoma.
  2. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Lymphoma.
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Lymphoma.
  4. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Lymphoma—Patient Version.
  5. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Lymphoma—Health Professional Version Patient Version TREATMENT.

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் (லிம்போமா) டாக்டர்கள்

Dr. Anil Gupta Dr. Anil Gupta Oncology
6 Years of Experience
Dr. Akash Dhuru Dr. Akash Dhuru Oncology
10 Years of Experience
Dr. Anil Heroor Dr. Anil Heroor Oncology
22 Years of Experience
Dr. Kumar Gubbala Dr. Kumar Gubbala Oncology
7 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் (லிம்போமா) க்கான மருந்துகள்

Medicines listed below are available for நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் (லிம்போமா). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.