விழிப்புள்ளிச் சிதைவு (மாகுலர் டிஜெனரேஷன்) - Macular Degeneration in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

April 26, 2019

July 31, 2020

விழிப்புள்ளிச் சிதைவு
விழிப்புள்ளிச் சிதைவு

விழிப்புள்ளிச் சிதைவு என்றால் என்ன?

கண்ணில் உள்ள மாகுலா, கூர்மையான மற்றும் மைய பார்வைக்கு தேவைப்படுகிறது மற்றும் விழித்திரை மையத்தின் அருகில் ஒரு சிறிய இடமாக தோன்றுகிறது. மாகுலா நம்மை நேரடியாக முன்னோக்கி பொருட்களை பார்க்க உதவுகிறது. விழிப்புள்ளிச் சிதைவு என்பது மாகுலா சேதத்தால் ஏற்படுகின்ற பொதுவான கண் நிலைமை ஆகும். இது சிலருக்கு பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். விழிப்புள்ளிச் சிதைவு இரு வகைப்படும், உலர்ந்தது மற்றும் ஈரமானது.

அதன் தொடர்புடைய முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

விழிப்புள்ளிச் சிதைவுவின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • சிவந்த, வலி உள்ள கண்கள் (மேலும் வாசிக்க: சிவந்த கண்களுக்கான காரணங்கள்).
  • ஒரு நிழல் அல்லது ஒரு இருண்ட திரை, பார்வை வரிசையில் இருப்பதைப் போல உணர்தல்.
  • நேரான கோடுகள் வளைந்து தோன்றுதல்.
  • மங்கலாக்கப்பட்ட அல்லது வடிவச்சிதைவு பார்வை (மேலும் வாசிக்க: மங்கலான பார்வை சிகிச்சை).
  • சாதாரணமாக அளவை விட சிறியதாக காணப்படும் பொருள்கள்.
  • பார்வையின் பிரகாசமான மாற்றங்கள்.
  • மாயத்தோற்றம் (தற்போது இல்லாத விஷயங்களைக் கண்டறிதல்).
  • உங்கள் பார்வையின் மத்தியில் பொருட்களை பார்க்க போராடுவது.
  • பார்வை இழத்தல் அல்லது நல்ல பார்வை இழப்பு.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

விழிப்புள்ளிச் சிதைவு முக்கியமாக விழித்திரை சேதத்தால் ஏற்பட்டு விழித்திரை மைய பகுதியின் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்.விழிப்புள்ளிச் சிதைவு நோய்க்காரணிகள்:

  • மரபுசார்ந்தது.
  • சுற்றுச்சூழல்.
  • வயது.
  • ஸ்டார்கார்ட் நோய்களில் காணப்படுவதைப் போன்ற மரபியல்புகள்.

இது எப்படி நோயறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

விழிப்புள்ளிச் சிதைவு நோயறிதலை கண்மருத்துவர் ஒரு முழுமையான கண் பரிசோதனை செய்து கீழ்க்காணும் முறைகள் மூலம் கண்டறிவார்:

  • அம்ஸ்லெர் கட்டம்: நீங்கள் ஒரு அம்ஸ்லெர் கட்டத்தினை பார்க்கும்போது கண்களை ஒரு சிறப்பு லென்ஸைப் பயன்படுத்தி பரிசோதிப்பது விழித்திரை மற்றும் மாகுலாவிலுள்ள மாற்றங்களை கண்டறிய உதவுகிறது.
  • விரிவுபடுத்தப்பட்ட கண் பரிசோதனை: உங்கள் கண்களை விரிவுபடுத்துவதற்காக கண் சொட்டு மருந்து பயன்படுத்தப்படலாம் மற்றும் பரிசோதனையின் போது விழித்திரை பார்க்கும் போது உங்கள் கண்மணியை விரிவுபடுத்தலாம்.
  • கண் அட்டவணை அளவீடுகளைப் பயன்படுத்தி பார்வைக் கூர்மை பரிசோதனை.
  • கதிரியக்க நுட்பங்கள், இதில் உள்ளடங்கியவைகள்:
    • ஃப்ளூரெஸ்சின் (மஞ்சள் சாயம்) பயன்படுத்தி ஃப்ளூரெஸ்சின் இரத்தக்குழாய் வரைவி (ஆஞ்சியோகிராஃபி).
    • விழித்திரையை ஸ்கேன் செய்ய உதவும் பார்வை ஒத்திசைவு வரைவி (ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (ஓ.சி.டீ).

விழிப்புள்ளிச் சிதைவு சிகிச்சையில் உள்ளடங்கியவைகள்:

  • உலர்ந்த விழிப்புள்ளிச் சிதைவை கீழுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன்  சிகிச்சையளிக்கப்படலாம்:
    • துத்தநாகம் (80 மிகி).
    • செம்பு (2 மிகி).
    • வைட்டமின் சி (500 மிகி) மற்றும்/அல்லது வைட்டமின் ஈ (400 ஐயூ).
    • லுடீன் (10 மிகி).
    • ஸிக்ஸாந்தின் (2 மிகி).
  • ஈரமான விழிப்புள்ளிச் சிதைவுகள் கீழுள்ள முறையில் சிகிச்சையளிக்கப்படலாம்:
    • ஃபோட்டோடைனமிக் சிகிச்சை, இதில் வேர்ட்டோஃபோர்பின் மருந்து சிரை வழியாக செலுத்தப்படுவது அடங்கும்.
    • ஆன்டி-வாஸ்குலர் எண்டோதெளியல் வளர்ச்சி காரணி (எதிர்ப்பு வி.ஈ.ஜி.எப்) மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது , இதனால்  விழித்திரை இரத்த நாளங்களில் உள்ள அசாதாரண நிலையை குறைக்க உதவுகிறது.
    • லேசர் அறுவை சிகிச்சை.



மேற்கோள்கள்

  1. American Academy of Ophthalmology. [Internet]. San Francisco, California, United States; How is AMD Diagnosed and Treated?.
  2. National Eye Institute. Facts About Age-Related Macular Degeneration. U.S. National Institutes of Health [Internet].
  3. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Symptoms - Age-related macular degeneration (AMD).
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Learn About Age-Related Macular Degeneration.
  5. National Eye Institute. Age-Related Macular Degeneration (AMD). U.S. National Institutes of Health [Internet].

விழிப்புள்ளிச் சிதைவு (மாகுலர் டிஜெனரேஷன்) டாக்டர்கள்

Dr. Vikram Bhalla Dr. Vikram Bhalla Ophthalmology
14 Years of Experience
Dr. Rajesh Ranjan Dr. Rajesh Ranjan Ophthalmology
22 Years of Experience
Dr. Nikhilesh Shete Dr. Nikhilesh Shete Ophthalmology
2 Years of Experience
Dr. Ekansh Lalit Dr. Ekansh Lalit Ophthalmology
6 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

விழிப்புள்ளிச் சிதைவு (மாகுலர் டிஜெனரேஷன்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for விழிப்புள்ளிச் சிதைவு (மாகுலர் டிஜெனரேஷன்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.