மேன்டில் செல் லிம்போமா என்றால் என்ன?
மேன்டில் செல் லிம்போமா (எம்.சி.எல்) என்பது தீவிரமான மற்றும் அரிதான ஹாட்ஜ்கின் வகை-சாராத நிண்நீர்ப் புற்று ஆகும். எம்.சி.எல்-ல், நிணநீர் மண்டலம் அல்லது நிணநீர்க்கணு முனையின் பகுதியிலிருந்து இருந்து லிம்போமா உருவாகிறது. மேன்டில் செல் லிம்போமா பொதுவாக செரிமானப் பகுதி மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகியவற்றில் பரவலாக இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மேன்டில் செல் லிம்போமாவின் அறிகுறிகள் பிற லிம்போமாவின் அறிகுறிகளை ஒத்ததாக இருக்கும்.மேன்டில் செல் லிம்போமாவின் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகள் எளிதாக தென்படக்கூடியவை ஆனால் இவை பொதுவாக உடலில் ஏற்படும் பிற பிரச்சனையின் அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.மேன்டில் செல் லிம்போமாவின் சில ஆரம்ப நிலை அறிகுறிகள் பின்வருமாறு:
- கழுத்து, வயிறு-தொடை இணைவிடம் மற்றும் அக்குள்களில் உள்ள நிணநீர் முனைகள் வீங்குதல்.
- களைப்பு.
- நிலையற்ற அல்லது இடைவிடாத காய்ச்சல்.
- இரவில் வியர்த்தல்.
- திடீர் மற்றும் விவரிக்கப்படாத அளவு எடை குறைதல்.
மேன்டில் செல் லிம்போமா நோய் முற்றிய நிலையில் ஏற்படும் அறிகுறிகள் சில பின்வருமாறு:
- எலும்பு வலி.
- சுவாசிப்பதில் பிரச்சனை.
- நீடித்த பலவீனம் மற்றும் சோர்வு.
- மேலே குறிப்பிட்ட அறிகுறிகளின் தாக்கம் அதிகரித்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
எம்.சி.எல் நோய் ஏற்பட பல காரணிகள் உள்ளன. ஆனால், இந்நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. எம்.சி.எல் நோய் தாக்கம் உள்ள 90% ற்கு மேற்பட்டவர்களுக்கு சைக்ளின் டி1 எனப்படும் புரதம் உற்பத்தி அதிகமாக இருப்பதாக கண்டறியபட்டுள்ளது. மேலும் லாக்டேட் டீஹைட்ரோஜினேஸ் மற்றும் பீட்டா 2 மைக்ரோகுளோபுலின் போன்ற புரதங்களும் அதிகமாகக் இருப்பதாக கணடறியப்பட்டுள்ளது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயாளியின் அறிகுறிகள் ஒரு சாத்தியமான நிணநீர் கட்டி அல்லது புற்றுநோயைக் குறிப்பதாக இருந்தால், மருத்துவர் அல்லது நோயியல் வல்லுநர் புற்று நோய் வளர்ச்சிக்கான உயிரணுக்களின் வகையை தீர்மானிக்க திசு பரிசோதனையை பரிந்துரைப்பார்.
லிம்போமா செல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டால், மார்பக X- கதிர் பரிசோதனை, இரத்த பரிசோதனைகள், வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (சிடி ஸ்கேன்) அல்லது காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) போன்ற இயல்நிலை வரைவு சோதனைகள் போன்ற கூடுதல் பரிசோதனைகள் நோயின் வளர்ச்சியைத் தீர்மானிக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும் செய்யப்படுகின்றன.
புற்று நோயின் நிலையினை பொறுத்து எம்.சி.எல் நோயின் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஆரம்ப நிலையில் மேற்கொள்ளப்படும் பொதுவான சிகிச்சை முறைகளாவன மருந்து சார்ந்த சிகிச்சை ஆகும். எனினும் நோய் முற்றிய கால் கட்டத்தில் வேதிச்சிகிச்சை (கீமோதெரபி) மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. புற்றுநோய்க்கு உட்பட்ட பி-உயிரணுக்களை அழிக்கும் ரிடுக்ஷிமப் போன்ற மருந்துகள் நோய் முற்றிய கட்டங்களில் பயனுள்ளதாக இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி கடுமையாக குறைவடையும் போது, மருத்துவர்கள் புதிய மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு உயிரணுக்களை உருவாக்க எலும்பு மஜ்ஜை அல்லது குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்வார்.