இயக்கு தசைச்சோர்வு நோய் என்றால் என்ன?
இயக்கு தசைச்சோர்வு நோய் (எம்.ஜி) என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்புமுறையின் ஒரு அசாதாரண செயல்பாடு காரணமாக ஏற்படும் ஒரு நோய் ஆகும். இது தவறாக தன் சொந்த திசுக்களை பாதித்து வீக்கம் மற்றும் சேதத்தை ஏற்படுத்துகிறது. நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையேயான இரசாயனச் செய்திகளின் பரிமாற்றத்தை இது பாதிக்கிறது, இது அனைத்து இயக்கங்கள் மற்றும் செயல்பாட்டைக் கொண்டுவர உதவுகிறது. இது வெவ்வேறு வயதினரிடையே உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை பாதிக்கிறது. இது பெண்களின் ஆரம்ப வயதிலும் ஆண்களின் பிந்தைய வயதிலும் காணப்படுகிறது. வீக்கம் காரணமாக, வெவ்வேறு தசைகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலின் முற்போக்கான இழப்பு ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- தசை பலவீனம்.
- பலவீனமான கண் தசைகள் காரணமாக இரட்டை பார்வை.
- பேசும்போது சிக்கல்.
- பலவீனமான குரல்.
- மெல்லுதல் மற்றும் விழுங்குவதில் சிரமம்.
- சுவாசத்தில் சிரமம்.
- எடை தூக்குவதில் பிரச்சினைகள்.
இந்த அறிகுறிகள் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நோய் நீடிக்கும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, தவறாக மூளை மற்றும் தசை நரம்பு முனையங்களுக்கு இடையே உள்ள ஆரோக்கியமான செல்களை தாக்கும்போது இயக்கு தசைச்சோர்வு நோய் ஏற்படுகிறது. மூளை மற்றும் நரம்பு க்கு இடையில் செல்லும் அசிடைல்கோலின் எனப்படும் வேதியியல் பொருளின் குறைந்த அளவு காரணமாக இந்த அணுக்கள் சேதமடைகிறது. இந்த நிலையில் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் சேதமடைந்த தைமஸ் சுரப்பிகள் (கழுத்துக்கணையச்சுரப்பி).
- புற்றுநோய்.
- எம்.ஜி நோயின் குடும்ப வரலாறு.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றை நிர்ணயிக்கும் ஒரு நரம்பியல் சோதனை செய்யப்படுகிறது.
- தசை பலவீன அளவு.
- தசை குரல் மதிப்பீடு.
- எதிர்வினைகள்.
- பரிசோதனை மூலம் கண்டறியப்படும் கண் குறைபாடு.
- தசை ஒருங்கிணைப்பு.
ஒரு விரிவான மருத்துவ வரலாறு எடுக்கப்படுகிறது. மற்ற சோதனைகள் பின்வருமாறு;
- அசிடைல்கொலின் இன்னும் இரசாயன தூதுபொருளின் அளவைக் கண்டறிதல்.
- எட்ரோபோனியம் குளோரைடு சோதனை என்பது தசை இயக்கம் சோதிக்கப்படும் ஒரு அகநிலை சோதனை.
- தசை திசுக்களின் மின் செயல்பாட்டை பதிவு செய்யும் தசை மின்னியக்கப் பதிவியல் (எலக்ட்ரோமயோகிராபி).
- தைமஸ் சுரப்பிகளை பரிசோதிக்க சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்.
- சுவாச வலிமையை அளவிட நுரையீரல் சோதனை.
தற்போது எம்.ஜி நோய்க்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை. அறிகுறிகளை நிர்வகிப்பதையும் நோயெதிர்ப்பு மண்டலத்தை கட்டுப்படுத்துவதையும் இந்த சிகிச்சை நோக்கமாக கொண்டுள்ளது.
- நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகள் மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. நரம்பு அணுக்கள்மற்றும் தசைகளுக்கு இடையில் உள்ள மூளை சிக்னல் பரிமாற்றத்தை மேம்படுத்த பைரிடோஸ்டிக்மின் பயன்படுத்தப்படுகிறது. சிறை வழி செலுத்தப்படும் இம்யூனோகுளோபுலின் என்பது தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் ஒரு வகை இரத்த விளைபொருள் ஆகும்.
- தைமஸ் சுரப்பியை அகற்றும் அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ளது.
- பிளாஸ்மா (குருதிநீர்) பரிமாற்றம் தசை வலிமையை மேம்படுத்த உதவுகிறது.
வாழ்க்கை முறை மாற்றங்கள் எம்.ஜி நோயின் அறிகுறிகளைத் தடுக்க உதவும்:
- தசை பலவீனத்தை குறைக்க ஓய்வு எடுத்தல்.
- மன அழுத்தம் மற்றும் வெப்பத்திற்கு வெளிப்படுவதை தவிர்த்தல்..