மயோபியா (கிட்டப்பார்வை) என்றால் என்ன?
மயோபியா (கிட்டப்பார்வை) என்பது நாம் பார்க்கும் பொருட்களில் அருகில் இருக்கும் பொருள் தெளிவாக தெரியும் ஆனால் தொலைவில் இருக்கும் பொருள் மங்கலாக தெரியும் ஒரு நிலை.உங்களுக்கு தொலைக்காட்சி திரை, வெண்பலகை போன்றவற்றை பார்ப்பதில் சிரமம் ஏற்படலாம்.மயோபியா, ஹை/உயர் மயோபியா (தீவிர மயோபியா), லோ/குறைந்த மயோபியா (லேசான மயோபியா) என இரு வகைப்படும்.
மயோபியாவின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மயோபியா நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தென்படலாம்:
- மங்கிய தூரப்பார்வை.
- தலைவலி.
- கண் சிரமம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மயோபியாக்கான காரணங்கள் பின்வருமாறு:
- மரபுவழி காரணி: மயோபியா ஏற்படுவதற்கான காரணம் ஒருவரது மரபாக இருந்தாலும், கண்களுக்கு தரும் அழுத்தமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
- பார்வை அழுத்தம்: பலமணி நேரம் கணினியில் வேலை செய்வது போன்ற கல்வி அல்லது வேலை சம்பந்தமாக அழுத்தம்.
- நீரிழிவு போன்ற நோய்கள்: நீரிழிவு நோயால் ஒருவரின் ரத்த சர்க்கரை அளவு மாறுபடும்போது அது கண்பார்வையை பாதிக்கிறது.
- சுற்றுச்சூழல் காரணிகள்: சுற்றுப்புற சூழலில் நிகழும் மாற்றம் ஒருவரின் கண் பார்வையை பாதிக்க வாய்ப்புண்டு.உதாரணமாக, இரவில் மட்டும் தொலைவில் இருக்கும் பொருள் மங்கலாக தெரிந்தால், அதை இரவு மயோபியா என்பர்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மயோபியா நிலையை கண்டறிய உங்கள் கண் மருத்துவர் ஒரு விரிவான கண் பரிசோதனையை செய்வார்.இந்த சோதனையில் கண் பார்வை சோதனை மற்றும் உடல் சார்ந்த கண் பரிசோதனை செய்யப்படுகிறது.கண்களில் விடும் சொட்டு மருந்து மூலம் கண்மணியை(பியூபில்) விரிவடையச்செய்து பரிசோதனையை சுலபமாக செய்யலாம்.இதன் மூலம் விழித்திரை (ரெடினா) மற்றும் பார்வை நரம்பு ஆகியவற்றை துல்லியமாக ஆராய்ந்து பரிசோதிக்க முடிகிறது.
மயோபியாவிற்கு பொதுவாக கண்ணாடிகள் அல்லது கண் வில்லைகள் எனப்படும் ஐ லென்ஸ்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்.இதைத்தவிர பயன்படுத்தப்படும் மற்ற முறைகள் பின்வருமாறு:
- போட்டோரிஃப்ராக்டிவ் கேரடெக்டோமி (பி.கே.ஆர்) மற்றும் லேசர் தூண்டப்பட்ட இன்-சிடு கேரடோமிலுசிஸ் (எல்.ஏ.எஸ்.ஐ.க்) எனப்படும் லேசர் உதவிக்கொண்டு இயல்புநிலை கருவிழி திருத்தம் போன்ற ஒளிவிலகள் அறுவை சிகிச்சை.ஒருவரின் பார்வை பிழை எண், அதாவது கண்ணாடிகளின் எதிர்ம எண்கள் சில காலங்களுக்கு மாறாமல் நிலையாக இருக்கும் பொது மற்றும் வயது 20 மற்றும் வளர்ச்சி முழுமையடைந்த பின்பு ஒளிவிலகள் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.இந்த அறுவை சிகிச்சைகள் கருவிழிப்படலத்தின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் ஒளி விழித்திரையில் மீது முழுமையாக ஒளி விழுவதை மேம்படுத்த உதவுகிறது.
- கார்னியல் ரிஃப்ராக்டிவ் சிகிச்சை (ஆர்த்தோ-கே) : அறுவை சிகிச்சை ஏதுமின்றி வலுவான வில்லை ஒன்றை கண்கள் மேல் அணிவதன் மூலம் கருவிழிப்படலத்தின் வடிவத்தை மாற்றுவது.
- பார்வை சிகிச்சை: அழுத்தம் காரணமாக வரும் மயோபியாவிற்கு இது உதவும். ஒலிக்குவியலை மேம்படுத்தி கண் பார்வையில் தெளிவு பெற கண் பயிற்சி முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.