நியூரோலெப்டிக் மாலிகன்ட் நோய்க்குறி என்றால் என்ன?
நியூரோலெப்டிக் மாலிகன்ட் நோய்க்குறி (என்.எம்.எஸ்) என்பது ஆண்டி-சைகாடிக் மருந்துகளின் பயன்பாடு காரணமாக ஏற்படக்கூடிய ஒரு அபாயகரமான நிலை ஆகும். அல்சைமர்ஸ், பார்கின்சனிசம், இருமுனை சீர்குலைவு, மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆண்டி-சைகாடிக்ஸ் ஆகும். இது ஒரு அரிய நிலை, இது பொதுவாக ஆண்களில் காணப்படுகிறது. சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது மரணத்திற்கு வழிவகுக்கும். எனவே என்.எம்.எஸ் நோயின் முதல் அறிகுறி தோன்றியவுடனேயே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும்.
இந்திய மக்கள்தொகையில் என்.எம்.எஸ் நோயின் நிகழ்வு, ஆண்டி-சைகாடிக்ஸ் பயன்படுத்தும் 1000 பேரில் 1.40 - 0.41 பேருக்கு ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதோ அல்லது மருந்தளவு அதிகரிக்கப்படும்போதோ அறிகுறிகள் தொடங்கலாம்.1 முதல் 2 வாரங்களுக்குள் அனுபவிக்கக்கூடிய அறிகுறிகள் பின்வருமாறு:
- 38ºC க்கும் அதிகமான ஆனால் 40ºC க்கும் குறைவான வெப்பநிலையில் காய்ச்சல்.
- தசை இறுக்கம்.
- நடுக்கம்.
- இயக்கத்தில் சிரமம்.
- பேசுவதில் சிரமம்.
- குழப்பம்.
- அதிகரித்த இதய துடிப்பு.
- அதிகரித்த சுவாச விகிதம்.
- மன தொந்தரவுகள்.
- அசாதாரண இரத்த அழுத்தம்.
- வியர்வை.
- உணர்வற்ற சிறுநீர் வெளியேற்றம்.
- கிரியேட்டினின் கைனேஸ் உயர்த்தப்பட்ட அளவில் இருத்தல்.
- சிறுநீரில் புரதம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகள் டோபமைன் வாங்கிகளைத் தடுப்பதன் காரணமாக என்.எம்.எஸ் ஏற்படுகிறது. டோபமைன் என்னும் பொருள். நமது உடலில் நரம்பு செய்தி பரிமாற்றத்தில் உதவுகிறது. நரம்பு வாங்கிகளில் டோபமைன் இல்லாதபோது அது என்.எம்.எஸ் நோய்க்கு வழிவகுக்கிறது. இந்த இயங்குமுறைக்கு சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
என்.எம்.எஸ் நோயின் ஆபத்துக்கு இடமளிக்கும் மற்ற காரணிகள் பின்வருமாறு:
- 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகளின் பயன்பாடு.
- ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகளின் திடீர் மருந்தளவு அதிகரிப்பு.
- ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகள் வாய்வழி நிர்வகிக்கப்படாமல் இருப்பது.
- நீர்ப்போக்கு.
- மயக்க மருந்துகளை உபயோகித்தல்.
- டோபமைன் வாங்கியைச் செயல்படுத்தும் மருந்துகளின் விலக்கு.
- வாந்தி எதிர்ப்பு மருந்துகள்.
- என்.எம்.எஸ் இன் முந்தைய வரலாறு.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
என்.எம்.எஸ் நோயை உறுதிப்படுத்த எந்த குறிப்பிட்ட சோதனைகளும் இல்லை. எனவே, உங்கள் மருத்துவர் இரத்த சோதனை, எலக்ட்ரோலைட் சோதனை மற்றும் சிறுநீர் சோதனை உட்பட பல சோதனைகளை பரிந்துரைக்க கூடும். சில நேரங்களில், தோற்றமாக்கல் சோதனைகள் அல்லது எலக்ட்ரோஎன்சேபலோகிராம் (EEG) ஆகியவற்றையும் உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
என்.எம்.எஸ் நோய் ஒரு அவசர நிலை என்பதால், உடனடி மருத்துவ தலையீடு தேவைப்படுகிறது. முதலில், உங்கள் மருத்துவர், என்.எம்.எஸ் நோயை ஏற்படுத்தும் அனைத்து மருந்துகளையும் நிறுத்துமாறு ஆலோசனை கூறுவார். பின்னர், அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிவெப்பத்துவ நிலையை சீர்செய்ய (உயர் உடல் வெப்பநிலை) இழந்த திரவம் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் ஆகியவற்றை மீண்டும் பெறச்செய்யும் நடவடிக்கைகள் மற்றும் குளிர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. என்.எம்.எஸ் நோயை உருவாக்கும் அபாயம் குறைவாக உள்ள புதிய மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார், ஆனாலும் வழக்கமான கண்காணிப்பு தேவைப்படுகிறது. பொதுவாக, குணமடைவதற்கு 7-14 நாட்கள் தேவைப்படுகிறது.