நரம்பு நோய் வலி என்றால் என்ன?
நரம்பு சார்ந்த வலி என்பது நரம்பு திசுக்களில் காயம் அல்லது அதில் ஏற்படும் ஏதேனும் பிரச்சனையின் விளைவாக ஏற்படுவதாகும். உடலில் உள்ள வலி ரிசப்டர்களுக்கு அசாதாரணமான சிக்னல்கள் அனுப்பி வைக்கப்படுவதன் காரணமாக, வழக்கமாக பாதிக்கப்படாத அல்லது காயமடையாத பகுதியிலும் இது வலி மிகுந்த உணர்வுகளை உருவாக்குகிறது. நரம்பு நோய் வலிக்கு ஆளானவர்களின் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகிறது. சுமார் 7-8% மக்களுக்கு நரம்பு நோய் வலி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அடையாள-அறிகுறிகள் என்ன?
இடுப்பு பகுதியில் வலி, தசைக்கூட்டு வலி மற்றும் தாடையை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, இது போல் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். முக்கிய தொடர்புடைய அறிகுறிகளில் இவை அடங்கும்
- தீவிர வலி.
- பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி சுரீரென்று குத்துவது போல் உள்ள உணர்வு.
- இதுவரை வலி ஏற்படாத பகுதிகளில் திடிரென்று ஏற்படும் வலி உணர்வு.
- அதிகரித்த உணர்திறன்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
அறுவை சிகிச்சையின் போதோ அல்லது ஏதேனும் காயம் காரணமாகவோ நரம்புகளின் மீது உண்டாகும் அழுத்தம் இந்த நரம்பு சார்ந்த வலிகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் சில தொற்றுகள், உருக்குலைந்த நாளங்கள், மற்றும் வளர்சிதை மாற்ற நிலைமைகள் இந்த வலிக்கு காரணங்களாகின்றன. முதுகுத் தண்டு அல்லது மூளை சிதைவுகள், அல்லது உடலில் ஏற்படும் ஒரு நோயுற்ற நிலையினால் கூட நரம்பு சார்ந்த வலிகள் ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோயாளியின் மருத்துவ பின்புலம் மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை ஆரம்ப மதிப்பீட்டில் அடங்கும். வலியின் பிற இயல்புகளை மதிப்பிட்டும் அடுத்தகட்டமாக மருத்துவரால் மற்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம். இதற்கான சிகிச்சை வலியின் தன்மையை பொறுத்தே வழங்கப்படும். வலிக்கு காரணமாக உள்ள உடல் பகுதியின் ஏற்பட்டுள்ள சிதைவை பரிசோதிக்க நரம்பு பரிசோதனையானது மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம். சோதனையின் போது, வலிக்கான மதிப்பீடுகளை எடுப்பதும் தேவைப்படும்., மேலும் பல்குத்தி அல்லது பிற கருவிகள் போன்றவை வலி உணர்வைக் கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன. எம்.ஆர்.ஐ. அல்லது சரும திசு பரிசோதனை உள்ளிட்ட இமேஜிங் சோதனைகள் நரம்புச் செயல்களை பரிசோதனை செய்ய உபயோகிக்கப்படலாம்.
நரம்பு சார்ந்த வலியை முற்றிலுமாக நீக்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாது, ஆயினும், ஓரளவு வலியை கட்டுப்படுத்த முதன்மை பராமரிப்பு சிகிச்சை அளிக்கப்படலாம். வலியினால் ஏற்படும் அசௌகரியத்தை தடுக்கவும் வலியை கட்டுக்குள் கொண்டுவரவும் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதன்மை பராமரிப்பு சிகிச்சையில் மனச்சோர்வு மற்றும் ஓபியோட்-வகை மருந்துகள் அடங்கும். அதைத் தொடர்ந்து மயக்கமருந்துகள் உபயோகிக்கப்படலாம். இருந்தாலும் இவற்றின் பயன்பாடு குறைவாக இருக்கும்படி மருத்துவரால் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
மருந்து இல்லாத சிகிச்சை முறைகளில் இவை அடங்கும்:
- உடற் பயிற்சி.
- அறிவுத்திறன் மற்றும் நடத்தை சிகிச்சை.
- பொழுதுபோக்கு மற்றும் தியானம்.
மற்ற அடிப்படை நிலைகள் காரணமாகவும் நரம்பு நோய் வலி ஏற்படுகிறது.