நோகார்டியாசிஸ் என்றால் என்ன?
நோகார்டியாசிஸ் என்பது மண் மற்றும் தண்ணீரில் காணப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தோற்று நோய் ஆகும், இது நுரையீரல், மூளை மற்றும் சருமத்தை பாதிக்கும். நோகார்டியாசிஸ் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது:
- நுரையீரல் (நுரையீரல் சிரை) வகை பாக்டீரியாவை சுவாசிப்பதால் ஏற்படுகிறது.
- திறந்த காயங்கள் மூலமாக நுழையும் பாக்டீரியாவால் ஏற்படும் முதன்மை தோல் (தோல் சார்ந்த).
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால், நோயாளி கீழ்கண்ட அறிகுறிகளைக் காணலாம்:
- காய்ச்சல்.
- எடை இழப்பு.
- இரவில் வியர்வை.
- இருமல்.
- நெஞ்சு வலி.
- நுரையீரல் அழற்சி (நிமோனியா).
மூளை அல்லது தண்டுவடம், நோகார்டியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நோயாளி அனுபவிக்கும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தலைவலி.
- பலவீனம்.
- குழப்பம்.
- வலிப்புகள்.
நோகார்டியாசிஸ் நோயால் சருமம் பாதிக்கப்பட்டிருந்தால், கீழ்கண்ட அறிகுறிகள் காணப்படும்:
- தோல் சீழ்ப்புண்கள் (அல்சர்கள்).
- கட்டிகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நோகார்டியாசிஸ் என்பது நோகார்டியா அஸ்டிராய்டு பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றாகும். இந்த பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் மண்ணுக்கு மேலான காற்றை சுவாசிப்பதனால் இந்த பாக்டீரியாவால் ஒருவர் பாதிக்கப்படலாம். இந்த பாக்டீரியக்களின் மற்ற வகைகள் உடலில் திறந்த காயங்கள் வழியாக நுழையலாம். பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்கள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக உள்ளனர். எ.கா., புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், எச்.ஐ.வி நோய்த்தொற்று உடையவர்கள், நோய்எதிர் திறனொடுக்கி சிகிச்சை மற்றும் பல. நோய் விரைவாக மற்ற உறுப்புகளுக்கும் பரவுகிறது, குறிப்பாக மூளைக்கும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடல் பரிசோதனை மற்றும் விரிவான மருத்துவ பின்புலம் நோய்த் தொற்றுக்கு உட்பட்ட நுரையீரலின் சுவாசத்தில் உள்ள குறைந்த ஒலியைப் புரிந்து கொள்ள உதவும். தொண்டைச்சளியின் நேர்மறை நுண்ணுயிர் வளர்ப்பு சோதனைகள் மற்றும் நுரையீரல்களில் உள்ள திரவம் பாக்டீரியாவுடன் தொற்றுநோயை உறுதிப்படுத்தும். நோயை கண்டறிந்து உறுதிப்படுத்த மார்பு எக்ஸ்-கதிர் சோதனை மற்றும் சி.டி.ஸ்கேன் செய்யப்படுகிறது.
நோகார்டியாசிஸ் சிகிச்சைக்காக, சல்போனாமைடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சிகிச்சை பல வாரங்களுக்கு தொடரும். சிகிச்சைக்கான பிற மருந்துகள் இம்பீபெனெம் மற்றும் சிலஸ்ததின், மெரொபெனெம், செஃபோடாக்சிம், செஃப்ட்ரியாக்ஸோன் அம்பிசிலின், மினோசைக்ளின் மற்றும் அமிகசின் ஆகியவை அடங்கும்.
நோயாளிக்கு பொருத்தமான மற்றும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த நோய் சரியான நேரத்தில் தீவிர சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.