என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) - Rickets in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

April 30, 2019

July 31, 2020

என்புருக்கி நோய்
என்புருக்கி நோய்

என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) என்றால் என்ன?

என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) என்பது வைட்டமின் டி மற்றும் கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒரு நோயாகும். இது எலும்பு ஆரோக்கியத்திலும் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மென்மையான, பலவீனமான மற்றும் வலிமிகு எலும்பு வளர்ச்சி மற்றும் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் எனவும் குறிப்பிடப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

என்புருக்கி நோயின் ஆரம்ப நிலை மருத்துவ தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளாவன, எலும்பு வலி, எலும்பு உருக்குலைவு, பல் சார்ந்த பிரச்சினைகள், வளர்ச்சி குறைவு முன்கூட்டியே வெளிப்படுதல், முழங்கை, முழங்கால் மற்றும் காஸ்டோகாண்ட்ரல் சந்திப்புகளில் குறைந்த வளர்ச்சி வெளிப்பாடு (மார்பெலும்புடன் விலாஎலும்புகள் இணையுமிடம்) ஆகியவை ஆகும். இவை எலும்பு மற்றும் பலவீனமான எலும்புகளின் விரைவான வளர்ச்சி மற்றும் முன்னேற்றதிற்கான தளங்கள் ஆகும். குழந்தைகளில் உச்சிக்குழி தாமதமாக மூடுதல் (குழந்தையின் தலையின் மேல் காணப்படும் மென்மையான புள்ளிகள்) மற்றும் மண்டை எலும்பு மென்மையுறுதல் போன்ற பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது. நடுத்தர வயது குழந்தைகளில் கூனல் முதுகு அல்லது நெளிமுதுகு (ஸ்கோலியோசிஸ்) (முதுகெலும்பு முன் அல்லது பக்கவாட்டாக வளைந்து இருத்தல்) நோய் பாதிப்பு இருக்கலாம். எலும்பு பாதிப்பு அல்லாத நோய் அறிகுறிகளாவன வலி, எரிச்சல், இயக்கம் சம்பந்தமான செயல்பாடுகளில் தாமதம் மற்றும் குறைவான வளர்ச்சி ஆகியவை அடங்கும். ரிக்கெட்ஸ் எலும்பு இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சியாக தவறாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இவற்றில் அறிகுறிகள் ஒத்து காணப்படுகின்றன.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ரிக்கெட்ஸ் நோய் ஏற்படுவதற்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடு மிகவும் பொதுவான காரணியாகும். இந்த குறைபாடுகளுக்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

கால்சியம் மற்றும் பாஸ்பேட் குறைபாடு காரணமாக ஏற்படும் கனிமப் பற்றாக்குறை கால்சிபெனிக் மற்றும் பாஸ்போபெனிக் ரிக்கெட்ஸ் என முறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.  கனிமப் பற்றாக்குறை, வைட்டமின் டி குறைபாடுக்கு தனிமையாக்கப்பட்ட அல்லது இரண்டாம் நிலை குறைபாடாக இருந்தாலும், வளர்ச்சி தட்டுக்கு கீழ் எலும்பு திசுக்களில் எலும்பு முகை (கனிமம் அல்லாத கூறு) குவிதலுக்கு வழிவகுக்கிறது. இது சில காலத்தில் எலும்பு பலவீனமடைவதற்கும், வளைந்து போவதற்கும் காரணமாக அமைகின்றது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கால்சியம், வைட்டமின் டி அளவுகள், அல்கலைன் பாஸ்பேட், பாஸ்பரஸ் மற்றும் இணைகேடய இயக்குநீர் அளவுகள் ஆகியவற்றிற்கான இரத்த பரிசோதனைகளின் அடிப்படையில் வைட்டமின் டி குறைபாட்டிற்கான காரணிகளை கண்டறிய ஆய்வக சோதனைகள் செய்யப்படுகிறது. எலும்புகளில் மாற்றங்கள் காணப்படும் போது எக்ஸ்-ரே சோதனைகள் அறிவுறுத்தப்படுகின்றன. என்புமென்மை நோய் அல்லது ரிக்கெட்ஸ் நோயின் காரணத்தை கண்டறிய எலும்பு திசு பரிசோதனை தேவைப்படுகிறது. இதுவே நோய் கண்டறிவதற்கான சரியான முறையாகும்.

நோயின் இயல்பு மற்றும் தீவிரத்தன்மையை பொறுத்து வைட்டமின் டி மருந்தின் சரியான அளவு தீர்மானிக்கப்படுகிறது. எக்ஸ்-ரே சோதனை முடிவுகள் இயல்பிற்கு திரும்பும் வரை, வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

தற்காப்பு நடவடிக்கைகள்:

பல எளிய நடவடிக்கைகள் உங்களை ரிக்கெட்ஸ் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது. நீங்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் பின்வருமாறு:

  • பால் பொருட்கள் மற்றும் முட்டைகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவு திட்டத்தை மேற்கொள்ளுதல்.
  • குறிப்பாக காலையில் சூரிய வெளிச்சத்திற்கு வெளியே நேரத்தை செலவிடுவது.
  • ஒரு டாக்டரைப் பரிசீலித்த பின் வைட்டமின் டி சப்ளைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Rickets and osteomalacia.
  2. Manisha Sahay, Rakesh Sahay. Rickets–vitamin D deficiency and dependency. Indian J Endocrinol Metab. 2012 Mar-Apr; 16(2): 164–176. PMID: 22470851
  3. Behzat Özkan. Nutritional Rickets . J Clin Res Pediatr Endocrinol. 2010 Dec; 2(4): 137–143. PMID: 21274312
  4. National Center for Advancing and Translational Sciences. Rickets. Genetic and Rare Diseases Information Center
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Rickets
  6. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; NCI Dictionary of Cancer Terms
  7. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Rickets

என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.