எலும்புக் குழல் தொற்று - Osteomyelitis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 30, 2019

March 06, 2020

எலும்புக் குழல் தொற்று
எலும்புக் குழல் தொற்று

எலும்புக் குழல் தொற்று என்றால் என்ன?

எலும்பில் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படுவது எலும்புக் குழல் தொற்று ஆகும். இது பாக்டீரியாவால் ஏற்படுகிறது.  இந்நோய் தீவிரமான அல்லது நீண்டகால நோயாக இருக்கலாம். இந்த எலும்பழற்சி எலும்பில் வீக்கம் உண்டாவதற்கு வழிவகுக்கிறது.  

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்நோயினால் ஏற்படும் முதன்மையான அறிகுறிகள் பின்வருமாறு:

  • எலும்புகளில் வலி.
  • அதிகமாக வியர்த்தல்.
  • காய்ச்சல்.
  • குளிர்தல்.
  • அசௌகரியம்.
  • வீக்கம்.
  • உடல் சூடாக இருப்பது போல் உணர்தல்.
  • தொற்றுநோய் ஏற்பட்டுள்ள பகுதியில் வலி.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

எலும்பு நோய்தொற்று ஏற்பட மிகவும் பொதுவான காரணியாக இருப்பது பாக்டீரியா ஆகும்.இருப்பினும், எலும்பு நோய்த் தொற்றானது பூஞ்சை மற்றும் பிற கிருமிகள் மூலமாகவும் ஏற்படலாம். ஸ்டாஃபிலோகாக்கஸ் என்பது எலும்புக் குழல் தொற்று உருவாக்குவதற்கான பொதுவான பாக்டீரியா இனமாக அறியப்படுகிறது.

எலும்புக் குழல் தொற்று ஏற்பட்டுள்ள தோல் அல்லது தசைகளின் வழியாக அருகில் உள்ள எலும்புகளுக்கும் இந்த பாக்டீரியா பரவக் கூடும்.

எனினும், வேறு ஏதேனும் மருத்துவ நிலைமைகளின் காரணமாகவும் ஒருவர் இந்த எலும்புக் குழல் தொற்று நோய் வருவதற்கான ஆபத்தில் தள்ளப்படுகிறார்.

இந்நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

எலும்புக் குழல் தொற்று ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவதற்குப் பல சோதனைகள் உள்ளன. இந்நோய்க்கான சோதனைகள் பின்வருமாறு:

  • எலும்பு திசு பரிசோதனை.
  • சி டி ஸ்கேன் மற்றும் டெக்ஸா போன்ற எலும்பு நோய் சார்ந்த ஸ்கேன்கள்.
  • பாதிக்கப்பட்ட பகுதியில் எக்ஸ்-ரே ஸ்கேன் எடுத்தல்.
  • அறிகுறிகளை பரிசோதித்தல்.
  • மொத்த இரத்த அணுக்களின் எண்ணிக்கை (சி.பி.சி).
  • எலும்பின் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).

இந்த பரிசோதனைகள் எலும்பு நோய்த்தொற்றின் தீவிர நிலையை தீர்மானிக்க உதவுகின்றன.

எலும்புக் குழல் தொற்று நோய்க்கான சிகிச்சை முறையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடும் அடங்கும்.இந்த மருந்துகள் தொற்றினை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அகற்றுவதில் பெரும் உதவி புரிகின்றன.இந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உபயோகித்தவுடன் இது உடலில் வேலை செய்ய 4-6 வாரங்கள் எடுத்து கொள்கிறது மற்றும் இந்த தொற்றினை முற்றிலும் அகற்ற இதற்கான சிகிச்சை முறையை தொடர்ந்து மோற்கொள்ள வேண்டும்.

கொடுக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் உடலில் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது எலும்பின் சேதம் கடுமையானதாக இருந்தாலோ எலும்பில் உள்ள இறந்த திசுவை நீக்கி இந்த தொற்றானது மேலும் பரவாமல் தடுக்க அறுவை சிகிச்சை முறை தேவைப்படலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எலும்புத் தொற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.மேலும் இந்நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளின் பாதிக்கப்பட்ட பகுதியை உடலிலிருந்து அகற்றுதல் மேலும் இதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க தேவையான ஒன்றாகும்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Osteomyelitis
  2. National Center for Advancing and Translational Sciences. Osteomyelitis. Genetic and Rare Diseases Information Center
  3. National Health Portal [Internet] India; Osteomyelitis
  4. Momodu II, Savaliya V. Osteomyelitis. [Updated 2019 Apr 3]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Osteomyelitis
  6. healthdirect Australia. Osteomyelitis. Australian government: Department of Health

எலும்புக் குழல் தொற்று க்கான மருந்துகள்

Medicines listed below are available for எலும்புக் குழல் தொற்று. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.