எலும்புத் திண்மக் குறைவு நோய் (ஆஸ்டியோபீனியா) என்றால் என்ன?
ஆஸ்டியோபீனியா எனும் நிலையில் எலும்பின் அடர்த்தி குறைவாக இருப்பதினால், எலும்புகள் சாதாரணமாக இருப்பதை விட பலவீனமடைய வழிவகுக்கின்றன. ஆஸ்டியோபீனியா என்பது ஆஸ்டியோபோரோசிஸ் வளர்ச்சிக்கான முன்னோடியாகவும் எலும்பு முறிவுகளுக்கான அதிக அபாயத்தை கொண்டதாகவும் இருக்கின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பொதுவாக, ஆஸ்டியோபீனியா என்பது அறிகுறியற்றதாக இருப்பதோடு ஒருவருக்கு எந்த வெளிப்படையான காரணமுமின்றி ஏற்படும் எலும்பு முறிவிற்கு பின்னரோ அல்லது ஒரு சிறிய வீழ்ச்சியினால் ஏற்படும் எலும்பு முறிவிற்கு பிறகோ கவனிக்கக்கூடியதாக இருக்கின்றது. இது மற்ற எலும்புகளிலும் முறிவு ஏற்படுவதற்கான அபாயத்தை குறிக்கின்றது அதோடு இதை ஆஸ்டியோபோரோசிஸ்கான எச்சரிக்கை அறிகுறியாக எடுத்து கொள்தல் அவசியம்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
இந்நிலைக்கான காரணங்கள் பல காரணிகளையும், எலும்பின் வலிமையை பாதிக்கும் நிலைகளையும் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. இந்நிலையை சார்ந்த முக்கிய காரணங்களுள் அடங்குபவை:
- கெட்ட / மோசமான எலும்பு ஆரோக்கியத்தை கொண்ட குடும்ப வரலாறு.
- பல மருத்துவ நிலைகளுள் அடங்கும் கோலியாக் நோயுடன், குளுட்டன் அல்லது கோதுமைக்கான ஒவ்வாமை இருக்கும் ஒரு நபருக்கு உணவிலிருந்து மோசமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி உறிஞ்சுதலுக்கு இந்நிலை வழிவகுக்கக்கின்றது.
- ஸ்டெராய்டுகளோடு அடங்கிய குளூக்கோக்கார்ட்டிகாய்டு (நீண்டகால உபயோகத்துடன்) போன்ற பல்வேறு மருத்துகளின் பயன்பாடு.
- உடல்பருமன்.
- இளம் பெண் விளையாட்டு வீரர்கள்.
- உணவு கோளாறுகள்.
- வயது முதிர்தல் (குறிப்பாக மாதவிடாய்க்கு பின்னர்).
- எந்த காரணத்தினாலும் ஏற்படக்கூடிய கால்சியம் குறைபாடு மற்றும் வைட்டமின் டி குறைபாடு.
- உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகள் பற்றாக்குறை.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர், அறிகுறிகளுக்கான முழுமையான வரலாற்றுடன் குடும்ப வரலாறு மற்றும் மருத்துவ வரலாற்றினை எடுத்துக்கொள்வதை தொடர்ந்து பாதிக்க பட்ட பகுதிகளில் பரிசோதனையும் மேற்கொள்வார். உங்களுக்கு மோசமான எலும்பு ஆரோக்கியம் அல்லது ஆஸ்டியோபீனியா இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், அவர் மேலும் அறிவுறுத்தும் கண்டறிதல் முறைகள் பின்வருமாறு:
- எலும்பு அடர்த்தி சோதனையுடன் மறு சோதனை, அதாவது முதல் சோதனைக்குப் பின்னர் இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மறு சோதனை மேற்கொள்ளமாறு அறிவுறுத்தப்படும்.
- எலும்பு முறிவு ஏற்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட பகுதிக்கான எக்ஸ்ரே.
- டூயல்-எனர்ஜி எக்ஸ்-ரே அப்சார்ப்ஷியோமெட்ரி ஸ்கேன் (டிஇஎக்ஸ்ஏ அல்லது டிஎக்ஸ்ஏ).
ஆஸ்டியோபீனியாவுக்கான சிகிச்சைமுறைகள்:
- ஆஸ்டியோபோரோசிஸ் போன்று ஆஸ்டியோபீனியா கடுமையானது இல்லை, எனவே இதற்கு அதிக மருந்துகள் தேவைப்படுவதில்லை. எலும்பைப் பாதுகாப்பதோடு அதன் பலத்தை மேம்படுத்துவதே ஆஸ்டியோபீனியாவின் சிகிச்சைக்கான லட்சியமாக இருக்கிறது.
- கால்சியம் மற்றும் வைட்டமின் டி உடன் கூடிய ஆஸ்டியோபீனியா இருப்பதாக கண்டறியப்பட்டவருக்கு அதற்கான சப்ளிமெண்டஷன் வழங்குதல் அவசியம்.
- வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவைச் சேர்ப்பதற்கான உணவு முறை மாற்றத்தினுள் அடங்குபவை பால் மற்றும் பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, அதனுடன் காய்கறி வகைகளான கீரை மற்றும் ப்ரோக்கோலி, மீன் வகையான சால்மன் மீன், சீரேல்ஸ், ரொட்டி மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகியவை ஆகும்.
- எடையை கட்டுப்பாட்டில் வைக்க வழக்கமான உடற்பயிற்சி மற்றும் எடை பராமரிப்பு அவசியம்.
- போன் - ஃப்ரெண்ட்லி வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்தல்.
- புகைபிடித்தல் மற்றும் மதுவினை தவிர்த்தல்.