கணைய அழற்சி என்றால் என்ன?
கணையம் செரிமான நொதிகள் மற்றும் ஹார்மோன்களை சுரக்கிறது. சில சமயங்களில், இந்த செரிமான நொதிகள் கணையத்தின் உள்ளக புறணியில் வீக்கத்தினை ஏற்படுத்தும் இந்த நோயுற்ற நிலையே கணைய அழற்சி என அழைக்கப்படுகிறது. இது கடுமையானதாக அல்லது நாள்பட்டதாக இருக்கக் கூடும். இது பிற ஜீரண கோளாறுகளைப் போன்று பொதுவாக காணப்படுவதில்லை. எனவே, இது மருத்துவமனையில் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிற ஒரு நிலைமையாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவாக காணப்படும் சில தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தீவிர மேல் அடிவயிற்று வலி மற்றும் and முதுகு வலி.
- வயிற்றுப்பகுதி வீங்கி காணப்படுதல்.
- குமட்டல்.
- வேகமான இதய துடிப்பு.
- வாந்தி.
- காய்ச்சல்.
- வயிற்றுப்போக்கு.
- எடை இழப்பு.
- மூச்சுத்திணறல்.
- கணையம் அல்லது பித்தப்பை நாளங்களை தடுத்தல்.
- தளர்ந்து வீழ்தல்.
- அதிகமாக வியர்த்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கணையத்தின் இந்நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- மது அருந்துதல்.
- பித்தப்பை கற்கள்.
- பரம்பரை பரம்பரையாக இருக்கும் கணைய பிரச்சினைகள்.
- மருந்துகளின் பக்க விளைவு.
- வயிற்று பகுதியில் ஏற்பட்டகாயம்.
- கணைய புற்றுநோய்.
- இரத்த சர்க்கரை மிகைப்பு மற்றும் உயர் கொழுப்பு அளவு.
- தாளம்மை (பொன்னுக்கு வீங்கி).
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கணைய அழற்சி கடுமையான அல்லது நாள்பட்ட கணைய அழற்சி என இரு வகைப்படும். கடுமையான கணைய அழற்சி நோயானது திடீரென்று வயிற்று பகுதியில் ஏற்படும் தீவிர காயத்தின் காரணமாக ஏற்படுகிறது. இது இதயம் அல்லது நுரையீரல் செயலிழப்பிற்கு வழிவகுக்கும். நாள்பட்ட கணைய அழற்சி நோயானது அதிகமாக மது அருந்துவதனால் ஏற்படுகிறது. இது நீண்ட காலம் நீடிக்கும் ஒரு நோயாகும். இதனால் இந்நோயிலிருந்து முன்னேற்றமடையும் மற்றும் குணமடையும் வாய்ப்புகள் பொதுவாக குறைவு ஆகும். உடலியல் பரிசோதனையைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஆய்வுகளால் நோயறிதல் உறுதிப்படுத்துகிறது.
கணைய அழற்சி நோய் கண்டறிதல் முறைகள் பின்வருமாறு:
- எம்.ஆர்.ஐ. ஸ்கேன் - இது குழாய்களின் உருவங்களை நோக்குவதன் மூலமாக இந்நோய் ஏற்படுவதற்கான சரியான காரணத்தை மருத்துர்கள் அறிந்துகொள்ளும்படியாக அமைகிறது.
- வயிற்று பகுதியில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் (மீயொலி) ஸ்கேன் - இது பித்தப்பையில் உள்ள கற்களை கண்டறிவதற்கு உதவுகிறது.
- சி டி ஸ்கேன் - இது சுரப்பியின் 3-டி வரைவினை எடுக்க உதவுகிறது.
- எக்ஸ்- கதிர்கள், மற்றும் அமிலேஸ் அளவு இரத்த பரிசோதனைகள் போன்று இன்னும் சில சோதனைகள் நோயறிதலை உறுதிப்படுத்த செய்யப்படுகின்றன.
நோயறிதலுக்குப் பிறகு, இந்நோய் பல்வேறு முறைகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது அவை பின்வருமாறு:
- அறுவை சிகிச்சை - பொதுவாக, பித்தப்பையில் கல் இருப்பது உறுதியானவுடன் பித்தப்பை உடலிலிருந்து அகற்றப்படுகிறது. மேலும், முடிந்தால் கணையத்தில் காயம் அடைந்த பகுதிகளும் அகற்றப்படுகின்றன.
- உள்நோக்கியியல் (எண்டோஸ்கோபி) - பித்தப்பையில் உள்ள கற்களை அகற்ற பயன்படுகிறது.
- நரம்பு வழியாக திரவங்களை உட்செலுத்துதல் - இது கணையத்தில் ஏற்படும் வீக்கத்தைத் சரிசெய்ய உதவுகிறது.
- வலியிலிருந்து நிவாரணம் பெற வலிநீக்கி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன (வலி நிவாரணிகள்).
மருத்துவமனையில் கணைய அழற்சி நோய் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு வாழ்க்கை முறையில் சில சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியம். அவை பின்வருமாறு:
- மது அருந்துவதை நிறுத்துதல்.
- கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்தல்.