ஆண்குறி வலி - Pain in penis in Tamil

Dr. Anish Kumar GuptaMBBS,MS,DNB

December 29, 2018

March 06, 2020

ஆண்குறி வலி
ஆண்குறி வலி

சுருக்கம்

ஆண்குறியில் வலி (அல்லது ஆண்குறி வலி), ஆண்குறியின் தலை, தண்டு அல்லது அடிப்பகுதியில் ஏற்படக் கூடும். அது முன்தோலையும் பாதிக்கக் கூடும். ஆண்குறியில் வலி, அடிபடுதல், விபத்துக்கள் அல்லது ஏதேனும் மறைந்திருக்கும் காரணங்களால் ஏற்படுகிறது, மேலும் இது, அனைத்து வயதுப் பிரிவு ஆண்களையும் பாதிக்கிறது. ஆண்குறி வலி, அதற்கு காரணமான மறைந்திருக்கும் பிரச்சினைகளைப் பொறுத்து இருக்கிறது. காயங்களுடைய நபர்கள் போன்றவர்களுக்கு, இது திடீரென்று ஆரம்பிக்கும் (தீவிரமானது) அல்லது படிப்படியாக (நாள்பட்டது) அதிகரித்து, நாளாவட்டத்தில் மோசமாக மாறுகிறது. ஆண்குறியில் ஏற்படும் எந்த வகை வலியாக இருந்தாலும், குறிப்பாக விறைப்புத்தன்மையில் ஏற்படும்போது, அல்லது சிறுநீர் கழித்தல் கடினமாக இருக்கும் பொழுது அல்லது இரத்தக் கசிவோடு இருக்கும் போது, அசாதாரணமான திரவ வெளியேற்றம், புண்கள், சிவந்து போதல் அல்லது வீக்கமாக இருக்கும் போது, அது ஒரு அக்கறை கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஆண்குறி வலி என்ன - What is Penis Pain in Tamil

ஆண்குறி வலி பலவித மறைமுக காரணங்களால் ஏற்பாடக் கூடும். காயங்களுக்கும், அதே போல் நோய்த்தொற்றுகளுக்கும் எளிதில் இலக்காகக் கூடியதாக ஆண்குறி இருக்கிறது. பெரும்பாலான ஆண்கள், ஆண்குறியில் ஏதோ ஒரு வகை காயம் அல்லது வலியை உணர்கிறார்கள். ஆண்குறி வலியை உண்டாக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதித்து, மன உளைச்சல் ஏற்பட வழிவகுக்கிறது. மேலும், வாழ்க்கைத்துணையுடன் உறவில் உரசல் மற்றும் ஒரு நபரின் தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது. ஆண்குறி புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட நிலைகளில், உயர்ந்த சிகிச்சை அளிக்கும் பொழுது கடுமையான மனநல பின்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது, மேலும், பயம் மற்றும் சங்கடத்துடன் சமூகப் பழியையும் ஏற்படுத்துகிறது. இதனால், மறைமுகப் பிரச்சினையை திறமையுடன் கையாள்வதை உறுதி செய்ய, பிரச்சினைகளை விரைவில் அடையாளம் கண்டறிவது முக்கியமானது. சில நிலைகளில் விளையாட்டினால் ஏற்படும் காயங்கள் போன்று காரணம் வெளிப்படையானதாக இருக்கின்ற வேளையில், மற்றவற்றில், ஆண்குறி வலி படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்பதால், சரியான காரணத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது.

ஆண்குறி வலி என்றால் என்ன?

ஆண்குறியில் உணரப்படும் எந்த ஒரு வலி அல்லது அசௌகரியம், ஆண்குறி வலி அல்லது ஆண்குறியில் வலி என அழைக்கப்படுகிறது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

ஆண்குறி வலி அறிகுறிகள் என்ன - Symptoms of Penis Pain in Tamil

வலியின் சரியான இடத்தைப் பொறுத்து, ஆண்குறி வலியின் அறிகுறிகள் வேறுபடுகின்றன. பின்வரும் பகுதிகள் சம்பந்தப்படக் கூடும்:

  • ஆண்குறியின் வேர்ப்பகுதி (வயிற்று சுவரோடு இணைக்கப்பட்டிருக்கும், ஆண்குறியின் ஒரு பகுதி).
  • ஆண்குறியின் மையப் பகுதி அல்லது தண்டு.
  • ஆண்குறியின் தலை, ஆண்குறி மொட்டு எனவும் அறியப்படும்.
  • விந்து, அதே போல் சிறுநீரை எடுத்துச் செல்லும், ஆண்குறியின் உள்ளே ஓடும் சிறுநீரக குழாய்.

ஆண்குறி வலியின் அறிகுறிகள், திடீரென்று ஆரம்பிக்கலாம் அல்லது நாளாவட்டத்தில் அதிகரிக்கலாம். இந்த வலி, மந்தமாக, கூர்மையாக அல்லது துடிப்பான தன்மையைக் கூட கொண்டிருக்கலாம். ஆண்குறி வலி, ஒரு ஆணின் தினசரி செயல்பாடுகளான உடற்பயிற்சி, சிறுநீர் கழித்தல் அல்லது உடலுறவு போன்றவற்றை பாதிக்கலாம். பின்வரும் அறிகுறிகளோடு, ஒருவர் எந்த நேரத்தில் ஆண்குறி வலியை உணர்ந்தாலும், அவர் உடனடியாக ஒரு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்:

  • விறைப்புத்தன்மை நான்கு மணி நேரம் அல்லது அதற்கும் மேல் நீடித்தல். இந்த நிலை, பிரியாபிசம் என அறியப்படுகிறது, மேலும் இது ஒரு மருத்துவ அவசர நிலையாகும்.
  • உடலுறவின் போதோ அல்லது விறைப்புத்தன்மையிலோ ஒரு உடையும் அல்லது வெடிப்பது போன்ற சத்தம்.
  • சிறுநீர் கழிக்க இயலாமை.
  • விளையாட்டினால் ஏற்படும் காயம் அல்லது இடுப்புப்பகுதி, விரைச்சிரை அல்லது ஆண்குறியில் ஏற்படும் விபத்து.

ஆண்குறி வலியின் இணைந்த மற்ற அறிகுறிகள்:

  • விந்துவில் இரத்தம் காணப்படுதல்.
  • ஆண்குறியில் நிற மாற்றத்தோடு சிராய்ப்புகள்.
  • உடலுறவுக்காக போதுமான விறைப்புத்தன்மை அடைவதில் இயலாமை அல்லது கிளர்ச்சியின் காரணமாக ஏற்படாத ஒரு வலிமிகுந்த விறைப்புத்தன்மை கொண்ட, எழுச்சி செயலிழப்பு.
  • சிறுநீர் குழாய் திரவம் வடிதல்.
  • ஆண்குறியில் அழற்சி மற்றும் வீக்கம்.
  • சிறுநீர் கழித்தலில் இவை போன்ற அறிகுறிகள் சேர்ந்து இருக்கின்றன:
    • அடிக்கடி நிகழ்வதில் மாற்றங்கள்.
    • சிறுநீர், சிறு சிறு துளிகளாக கசிதல்.
    • சிறுநீர் கழிக்கத் தொடங்கும் நிலையில் சிரமம்.
    • வலிமிகுந்த சிறுநீர் கழித்தல்.
    • சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு.
  • ஆண்குறியில் கட்டி
  • விந்து முந்துதல்
  • சிறுநீர் பை, ப்ரோஸ்டேட், விரைகள் மற்றும் வயிற்றில் வலி (மேலும் படிக்க - வயிற்று வலியின் காரணங்கள் மற்றும் சிகிச்சை)
  • ஆண்குறியில் புண்கள் அல்லது காயங்கள்.
  • ஆண்குறியில் அரிப்பு.
  • இடுப்புப் பகுதியில் கட்டிகள்.
  • முன்தோலுக்கு அடியில் கெட்டியான திரவம் ஒன்றுசேருதல்.
  • உடலுறவு விருப்பத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.

ஆண்குறி வலி சிகிச்சை - Treatment of Penis Pain in Tamil

சிகிச்சை, ஆண்குறி வலிக்கான காரணத்தைப் பொறுத்திருக்கிறது. சில நிலைகளில் ஆரம்பத்தில் எந்த ஒரு சிகிச்சையும் தேவைப்படாமல் இருக்கும் பொழுது, சிலவற்றுக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

  • மருந்துகள்
    யூ.டி.ஐ., ப்ரோஸ்டேட் அழற்சி மற்றும் சிறுநீர்ப்பாதை அழற்சி போன்ற நோய்த்தொற்றுகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ப்ரோஸ்டேட் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுநீர்ப்பாதை நரம்பு பிடிப்பைக் குறைக்க, வலிநிவாரணிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளும் (என்.எஸ்.ஏ.ஐ.டிக்கள்) வலியைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகின்றன.
  • மாற்று மருத்துவங்கள்
    அக்குபஞ்சர், நீராவி குளியல், மசாஜ் சிகிச்சை, உடற்பயிற்சிகள் போன்ற குறிப்பிட்ட நடைமுறைகள் வலியைக் குறைக்க உதவுகின்றன. மூலிகை மருந்துகள், சில மருந்துகளின் வீரியத்தை மாற்றக் கூடும் என்பதால், அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
  • அறுவை சிகிச்சை
    சர்கும்சிஸன் என்பது ஆண்குறியின் முன்தோலை அகற்றும் ஒரு நடைமுறை. இது, முன்தோல் குறுக்கம் அல்லது முன்தோல் இறுக்கம் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
  • மற்ற சிகிச்சை நடைமுறைகள்
    ஆண்குறி புற்றுநோய் உள்ள நபர்களுக்கு கீமோதெரபியுடன் இணைந்து கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

ஆண்குறி வலியைக் கையாளவும் ஆண்குறியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் சில வழிமுறைகள்:

  • பாலியல்ரீதியாக பொறுப்புணர்வுடன் இருத்தல்
    பால்வினை நோய் இல்லாத ஒருவருடன், ஒருவனுக்கு ஒருத்தி (ஒற்றை துணை)  பாலியல் உறவை பராமரிக்கவும். அந்த நபர் 26 வயதுக்கு உட்பட்வராக இருந்தால், பிறப்புறுப்பு பாலுண்ணிகள் தோன்றுவதைத் தடுக்க மனித பப்பில்லோ வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வதைப் பற்றி சிந்தியுங்கள். உடலுறவுக்குப் பிறகு, முன்தோலை திரும்ப இயல்பு நிலைக்கு இழுத்து விடுங்கள்.
  • உங்கள் மருந்துகளை அறிந்து கொள்ளுங்கள்
    சம்பந்தப்பட்ட நோய்களோடு தொடர்புடைய மருந்துகள், அவற்றை எடுத்துக் கொள்ளும் விதம், சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசியுங்கள்.
  • ஆரோக்கியமான முடிவுகளை எடுங்கள்
    உங்கள் மனநலத்தில் கவனம் செலுத்துங்கள். ஆண்குறி வலியின் காரணமாக ஏற்படும் பயம், கவலை, மன இறுக்கம் காரணமாக ஏற்படும் மோசமான  மனநிலையை, ஒரு மனநல ஆலோசகர் அல்லது உளவியல் நிபுணரிடம் தெரிவித்து சிகிச்சை பெற வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பராமரியுங்கள். நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க, போதுமான மூச்சு மற்றும் இதய சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹799  ₹799  0% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. Douglawi A, Masterson TA. Updates on the epidemiology and risk factors for penile cancer. Translational andrology and urology. 2017 Oct;6(5):785. PMID: 29184774
  2. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Penile Curvature (Peyronie's Disease).
  3. Thomas B. McGregor, John G. Pike, Michael P. Leonard. Pathologic and physiologic phimosis: Approach to the phimotic foreskin. Can Fam Physician. 2007 Mar; 53(3): 445–448. PMID: 17872680
  4. Merck Manual Professional Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Inc.; c2018. Priapism
  5. Urology Care Foundation [Internet]. American Urological Association; What are Prostatitis and Related Chronic Pelvic Pain Conditions?
  6. J. Curtis Nickel. Prostatitis. Can Urol Assoc J. 2011 Oct; 5(5): 306–315. PMID: 22031609
  7. Luzzi G. Male genital pain disorders. Sexual and Relationship Therapy. 2003 May 1;18(2):225-35.
  8. Luzzi GA, Law LA. The male sexual pain syndromes. International journal of STD & AIDS. 2006 Nov 1;17(11):720-6.
  9. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Erectile Dysfunction (ED).
  10. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Alcohol and Public Health
  11. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Human Papillomavirus (HPV)

ஆண்குறி வலி டாக்டர்கள்