புற நரம்பு கோளாறு - Peripheral Neuropathy in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 04, 2019

March 06, 2020

புற நரம்பு கோளாறு
புற நரம்பு கோளாறு

புற நரம்பு கோளாறு என்றால் என்ன?

புற நரம்பு மண்டலம் என்பது உடலினுள் இருக்கும் தொடர்பு அமைப்பாகும்.இது மைய நரம்பு மண்டலம், மூளை மற்றும் முதுகு தண்டு, மேலும் உடலின் பிற உறுப்புகள் ஆகியவைகளின் இடையே ஏற்படும் சமிக்ஞைகளின் பரிமாற்றத்தில் ஈடுபடக்கூடியது.இந்த சமிக்ஞைகள் உணர்ச்சிப்பூர்வமான செய்திகளை பரிமாற்றம் செய்கிறது அதாவது குளிர்ந்த கைகள், உடலின் இயக்கத்திற்கு உதவும் தசை சுருங்குதலுக்கான சமிக்ஞைகள், மற்றும் பிற சமிக்ஞைகள் போன்றவைகள் இவற்றுள் அடங்கும்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

எந்த நரம்பு சேதமடைந்திருக்கின்றது என்பதைப் பொறுத்து இதற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் வேறுபடுகின்றது.

 • உடல் இயக்க நரம்பில் ஏற்படும் சேதம்
  தசைப்பிடிப்புகள், தசை பலவீனம், தசை வலி மற்றும் தசை சுருங்குதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
 • உணர்வு நரம்பில் ஏற்படும் சேதம்
  இது உணர்ச்சிகளை உணர்தலுக்கான திறனில் இயலாமையை ஏற்படுத்துகின்றது.அதாவது, தொடுதல், வலி ​​மற்றும் தட்பவெப்பநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு உடல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் சிரமத்தை ஏற்படுத்துகின்றது அதாவது நடப்பது, விரைவாக பட்டன்களை போடுதல், போன்ற மேலும் பல இயக்கங்களில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
 • தன்னியக்க நரம்பில் ஏற்படும் சேதம்
  இது வியர்வை, வெப்ப சகிப்புத்தன்மை ஆகியவற்றில் மாறுபாட்டை ஏற்படுத்துவதோடு உள் உறுப்புகளை சார்ந்த பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

புற நரம்பு கோளாறுகள் ஏற்படுவதற்கு மிக பரவலான காரணமாக இருப்பது நீரிழிவு நோயாகும்.இந்நிலை ஏற்படுவதற்கான பிற காரணங்களுள் அடங்கும் ஆரோக்கிய நிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

புற நரம்பு கோளாறை கண்டறிய ஈடுபடுத்தப்படும் முறைகள் பின்வருமாறு:

 • நீரிழிவு அல்லது வைட்டமின் குறைபாட்டை கண்டறிவதற்கான இரத்த சோதனை.
 • நரம்பு கடத்துதல் ஆய்வுகள்.
 • எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) சோதனை போன்ற இமேஜிங் தொழில்நுட்பங்கள்.
 • எலெக்ட்ரோமியோகிராஃபி.
 • நரம்பு திசுப்பரிசோதனை.

புற நரம்பு கோளாறுக்கான சிகிச்சையானது அதன் காரணத்திற்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி அதற்கான அறிகுறிகளைக் கையாளுவும் உதவுகின்றது.பொதுவாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

 • நீரிழிவு சிகிச்சை மற்றும் அதன் பராமரிப்பு.
 • வைட்டமின் சப்ளிமெண்டுகளை வாய்வழியாகவோ அல்லது ஊசி மூலமாகவோ உட்கொள்தல்.
 • இந்நிலைக்கு காரணமாக இருக்கும் மருந்துகளை உட்கொள்தலை நிறுத்துதல்.
 • கார்டிகோஸ்டெராய்டுகள்.
 • இம்யூனோகுளோபலின் ஊசிகள்.
 • தடுப்பாற்றடக்கிகள்.
 • நரம்பில் ஏற்படும் வலிக்கு சிகிச்சையளிக்க வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளை உட்கொள்தல்.
 • எல்லா நேரங்களிலும் சாக்ஸ் மற்றும் காலணிகளை அணிந்துகொள்வது குறைந்த உணர்திறனால் ஏற்படும் காயங்களைத் தடுக்க உதவுகின்றது.மேற்கோள்கள்

 1. National Institute of Neurological Disorders and Stroke [internet]. US Department of Health and Human Services; Peripheral Neuropathy Fact Sheet.
 2. National Health Service [Internet]. UK; Peripheral neuropathy.
 3. The Foundation for Peripheral Neuropathy [Internet]: Buffalo Grove, IL; What Is Peripheral Neuropathy?
 4. National Health Service [Internet]. UK; Causes.
 5. National Health Service [Internet]. UK; Diagnosis.

புற நரம்பு கோளாறு க்கான மருந்துகள்

Medicines listed below are available for புற நரம்பு கோளாறு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.