சுருக்கம்
கபம் என்பது நுரையீரலின் சுவர் அணுக்கள் உருவாக்கும் ஒரு தடிமனான, திரவம் ஆகும். இது உடலின் தற்காப்பு அமைப்புகளால் தயாரிக்கப்படுகிறது, மருத்துவ ரீதியாக இது சளி என அழைக்கப்படுகிறது. ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்கும்போது கூட ,மெலிதாக சளி இருக்கும், அனால் தெரியவராது. சில நோய்களின் போது, நுண்ணிய துகள்கள் மற்றும் பாக்டீரியா போன்ற தொற்றுக்களை சிறைபிடித்து நோயை குணப்படுத்துவதற்க்காக சளி தடித்துவிடுகிறது. கபத்திற்க்கு, வித்தியாசமான துர்நாற்றம் மற்றும் வண்ணம் இருந்தால் அதை பொருத்து அதன் அடிப்படை நோயை ஆய்வு செய்ய வேண்டும். இது குளிர், மேல் சுவாசக் குழாய் தொற்று, நாள்பட்ட நுரையீரல் தடுப்பு, சிஓபிடி நோய், ஒவ்வாமை, ஆஸ்துமா, நிமோனியா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களிலும் அதிகமாக உற்பத்தி ஆகலாம். அசாதாரண கபம் இருந்தால், இரத்த பரிசோதனையுடன் பொதுவாக மார்பக எக்ஸ்ரே அல்லது சி.டி ஸ்கேன், நுண்ணோக்கி மற்றும் நுண்ணுயிர் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் உறுதிப்படுத்தலாம். சிகிச்சையின் நெறிமுறைகள் அடிப்படை காரணத்தை பொருத்து, நபருக்கு நபர் வேறுபடுகின்றன. கபம், சுவாசக்குழாயில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் திரவமாக இருப்பதால் அதை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமில்லை.