பாஸ்பரஸ் குறைபாடு என்றால் என்ன?
மனித உடலில் உள்ள ஏராளமான உறுப்புகள் சீராக செயல்பட பல்வேறு இயக்கங்களை வழங்கும் இரண்டாவது மிக பெரிய சத்து பாஸ்பரஸ் ஆகும்.நம் உணவில் குறைந்த ஊட்ட உணவு குறைபாடு இருந்தால் அது உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இது டி.என்.ஏ போன்று உடலில் உள்ள பல மூலக்கூறுகளின் ஒரு பகுதியாகும், மேலும் நமது உடலில் உள்ள ஆற்றல் மூலக்கூறுகளில் இவை அடங்கியுள்ளன.உடலில் பெரும்பான்மையான பாஸ்பரஸுகள் எலும்புகளில் காணப்படுகிறது, மீதமுள்ள பாஸ்பரஸுகள் மென்மையான திசுக்கள் அனைத்திலும் காணப்படுகின்றன.உடலில்செல்கள் வளர்ச்சி மற்றும் உண்ட உணவை செமிக்கச்செய்து ஆற்றலைப் பெற பாஸ்பரஸ் தேவைப்படுகிறது.பாஸ்பரஸ் என்பது எலும்பிற்கு தேவையான ஒரு முக்கிய கனிமமாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பாஸ்பரஸ் குறைபாடு நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- மோசமான எலும்பு வளர்ச்சி.
- நடப்பதில் சிரமம்.
- பலவீனம்.
- இரத்த சோகை.
- விரைவான எடை இழப்பு.
- வாய்வழி தொற்று.
- மூட்டு வலி.
- உணவில் நாட்டமின்மை.
பிறந்த குழந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் குழந்தைகளில் பாஸ்பரஸ் குறைபாடு என்பது தீங்கு விளைவிக்க கூடியது, குறிப்பாக அது எலும்புகளில் ஊனங்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பாஸ்பரஸ் குறைபாட்டின் பிரதான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும்.இது குறைந்த ஊட்டச்சத்து கொண்ட சத்தற்ற உணவுகளை உண்பதால் ஏற்படுகிறது.பாஸ்பரஸ் சத்தானது பல இயற்கை உணவு பொருட்களில் அடங்கி உள்ளதால் பாஸ்பரஸ் குறைபாடு என்பது மிகவும் பொதுவாக ஏற்படக் கூடிய ஒரு குறைபாடு இல்லை.
சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொளவதாலும் இந்த பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படலாம்.இந்த மருந்துகள் ஆன்டாசிட்களையும் உள்ளடைக்கியவையாகும்.
எனினும் உடலில் பாஸ்பரஸின் குறைவான உறிஞ்சுதல் விளைவாக மெக்னீசியம் குறைபாடு ஏற்படலாம்.பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல் பாஸ்பரஸின் அளவு ஒரு நாளுக்கு 1000 மிகி ஆகும் (ஆர்.டி.ஐ -யின் படி ).
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இரத்த பரிசோதனை மற்றும் உடலில் தென்படும் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் பாஸ்பரஸ் சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர் கண்டறியலாம்.
பாஸ்பரஸ் சத்து குறைபாட்டிலிருந்து மீண்டு வர, உணவு பழக்க வழக்க மாற்றத்திற்கு மருத்துவர் ஆலோசனை கூறுவார்.அதிக பாஸ்பரஸ் சத்து நிறைந்த குறிப்பிட்ட சில உணவு வகைகள் பின்வருமாறு:
- நட்ஸ்.
- பீன்ஸ்.
- முழு தானியங்கள்.
- சீஸ்.
- பால்.
- பயிறு வகைகள்.
- பூசணி விதைகள்.
- மீன்.
படிப்படியான முறையில் உணவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் பாஸ்பரஸ் சத்து குறைபாட்டை நிர்வகிப்பது ஒரு சிறந்த அணுகுமுறையாகும்.இருப்பினும், மல்டி வைட்டமின் சத்து நிறைந்த மாத்திரைகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.