பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) (சினைப்பை நோய்க்குறி) என்றால் என்ன?
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், என்பதின் சுருக்கமே பி.சி.ஓ.எஸ் ஆகும்.இது பெண்களிடத்தில் ஏற்படும் ஹார்மோனல் சமநிலையின்மையின் காரணமாக வெளிப்படும் அறிகுறிகளின் அமைப்பாகும்.இது பொதுவாக இனப்பெருக்க வயதிற்குட்பட்ட பெண்களை, அதாவது 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.இந்நிலைக்கான பெயர் அதன் முதல் நிலை அறிகுறிகள் ஒன்றிலிருந்து பெறப்பட்டிருக்கின்றது.பாதிக்கப்பட்ட பெண்களின் ஓவரிகளில் (எப்போதும் அல்ல) கருமுட்டை தூண்டும் இயக்குநீர் (எப் எஸ் ஹெச்) மற்றும் லியூடினைசிங் ஹார்மோன் (எல் ஹெச்) போன்ற மற்ற ஹார்மோன்களில் ஏற்பட்டிருக்கும் தொந்தரவுகளின் அளவுகளுடன் குறைந்த பட்சம் ஒரு ஓவரியிலாவது 12 அல்லது அதற்கும் மேற்பட்ட ஃபோலிக்கல்ஸ் இருக்கக்கூடும்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
இந்நிலைக்கான அறிகுறிகளுள் அடங்குபவை:
- அமினோரியா அதாவது., மாதவிடாயின்மை.
- டிஸ்மெனோரியா அதாவது., வலிமிகுந்த மாதவிடாய்.
- ஒழுங்குமுறையில்லாத மாதவிடாய்கள்.
- ஹிர்ஸுட்டிசம், உடல் மற்றும் முகத்தில் இருக்கும் அதிகமாக வளர்ந்திருக்கும் முடி.
- பருக்கள் / முகப்பரு.
- இடுப்பு பகுதியில் ஏற்படும் வலி.
- கர்ப்பம் உண்டாவதில் ஏற்படும் சிரமம்.
- உடல் பருமன், இதன் இயல்பின்படி கொழுப்பு சத்துக்கள் அடிவயிற்றில் குவிந்திருத்தல்.
- பெரிஃபெரல் இன்சுலின் எதிர்ப்பு.
- குழந்தையின்மை.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்ப வரலாற்றினால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், அட்ரீனல் என்சைம் குறைபாடுகள், குழந்தையின்மை, உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கான நோய்க்குறி, அல்லது நீரிழிவு போன்றவைகள் ஏற்படலாம்.இல்லையெனில், அதிக இரத்தப்போக்கு அல்லது நீண்ட நாள் இருக்கக்கூடிய மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
பி.சி.ஓ.எஸ் எனும் நிலை மரபணு முன்கணிப்பை காட்டுவதோடு இரு பெற்றோரிடமிருந்தும் மரபுவழியாக பரிமாற்றமாகி தன்னியக்க மேலாதிக்க முறையில் தோன்றக்கூடியது.நோயாளிகளின் உடலில் அதிகரித்த அளவில் ஆன்ட்ரோஜென்ஸ் (ஆண் ஹார்மோன்கள்), குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் ஆகியவைகள் இருக்கக்கூடும்.இத்தகைய ஹார்மோன்கள் அண்டவிடுப்பின் முறையில் தலையிட்டு பிற அறிகுறிகளுக்கு வரிசையாக வழிவகுக்கக்கின்றது.இந்த ஹார்மோன்கள் ஃபாலிக்கல்ஸை முதிர்ச்சி அடைவதிலிருந்து கைப்பற்றுகின்றன.இந்த முதிர்ச்சியற்ற ஃபாலிக்கல்ஸ் ஓவரியை முழுமையாக-நிரப்பப்பட்ட நீர்க்கட்டிகளைப் போலத் தோன்றச்செய்கின்றன.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நிலைக்கான கண்டறிதல் விரிவான மருத்துவ வரலாறு மற்றும் உடலியல் பரிசோதனையை கொண்டது.ஆய்வக விசாரணைகளுக்குள் தைராய்டு செயல்பாடு சோதனைகள்; எப் எஸ் ஹெச் அளவுகள், புரோலாக்டின், மற்றும் எல் ஹெச்; டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் போன்ற சோதனைகள் அடங்குகின்றன.இதற்கு முன்னர், ஆக்கிரமிப்பு அல்லாத இமேஜிங் சோதனைகள் அதாவது அல்ட்ராசோனோகிராஃபி போன்றவை மேற்கொள்ளப்படுகின்றது.ஓவரிகளில் உள்ள நீர்க்கட்டிகளின் கிளாசிக்கல் தோற்றம் முத்துச் சரம் போல தோன்றுகின்றது.இந்நிலைக்கான சிகிச்சை முறை நோயாளியை ஊக்கப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுகொள்ள செய்தலே ஆகும்.இந்த வாழ்க்கை முறை மாற்றங்களில் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், எடை இழப்பு மற்றும் ஹார்மோன்கள் சமநிலையை மீட்டெடுக்க வழக்கமான உடற்பயிற்சிக்கான உதவி ஆகியவைகள் அடங்குகின்றன.மேலும், மருத்துவரால் ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.நீரிழிவுக்கு முன் அல்லது இன்சுலின் எதிர்ப்பு போன்ற வழக்குகளில் மெட்ஃபோர்மின் போன்ற இன்சுலின் உணர்வூட்டல் மருந்துகள் உதவுகின்றன.