முன்கூட்டியே பருவமடைதல் என்றால் என்ன?
முன்கூட்டியே பருவமடைதல் (ப்ரிகாசியஸ் பியூபெர்டி) என்றால் ஒருவர் பருவமடையக்கூடிய வயது வழக்கத்திற்கு முன்னதான வயதில் பருவமடைந்ததற்கான அறிகுறிகளை காணக்கூடிய ஒரு மருத்துவ நிலை. பெண்கள் 8 வயதிற்குள்ளாகவும் ஆண்கள் 9 வயதிற்குள்ளாகவும் பருவமடைந்தால் அது முன்கூட்டியே பருவமடைதல் என்று கருதப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் ஆரம்ப அறிகுறிகள் உடலில் பருவகால வளர்ச்சிக்கான மாற்றங்களை உள்ளடக்கும். பெண்களில் இதனால் ஒருபக்கமாக மார்பக விரிவாக்கம் ஏற்படலாம். அதே சமயம் அக்குள் முடியும் தோன்றுகிறது. பெண்குறிமூலம் (க்ளிடோரஸ்) விரிவாக்கம் ஏற்படலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். மார்பக விரிவாக்கம் ஏற்பட்டு சுமார் 2-3 ஆண்டுகளுக்கு பின் மெதுவாக பூப்படைதல் ஏற்படுகிறது. பருவமடைவதற்கு முன்பு கடுமையான முகப்பருக்கள் பெண்களுக்கு ஏற்படலாம். ஆண்களில் விந்தகம் விரிவடைகிறது, இதை தொடர்ந்து விரைப்பை மற்றும் ஆண்குறி வளர்ச்சியும் ஏற்படுகிறது. திடீர் வளர்ச்சி, முகப்பரு, குரல் மாற்றங்கள், மற்றும் பிற பாலியல் பண்புகள் ஆகியவை விரைவில் ஏற்படத் தொடங்கும். மறைவிட முடி தோன்றுவது ஆண்களிலும் பெண்களிலும் காணப்படும் பொதுவான ஒரு நிகழ்வு.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பருவமடைதல் என்பது உடல் வளர்ச்சியின் ஒரு பகுதியான ஒரு சாதாரண நிகழ்வு ஆகும். இதன் துவக்க வயது பல்வேறு காரணிகளை சார்ந்திருக்கிறது. அது மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது. உடன்பிறப்பு அல்லது பெற்றோர்களில் ஒருவர் வழக்கத்திற்கு முன்பே பருவமடைந்திருந்தால் இரண்டாவது குழந்தைக்கும் அது நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. சில சமயங்களில், ஹைப்போதலாமஸில் உள்ள கட்டியின் காரணமாக ஏற்படும் ஆண்ட்ரோஜன்களின் எழுச்சியும் இதற்கு பொறுப்பேற்கலாம். வழக்கத்திற்கு முன்பே ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியாவதன் விளைவாக முன்கூட்டியே பருவமடைதல் நிகழ்கிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
உடல் மாற்றங்கள் மிகவும் நுட்பமாக இருப்பதால், அது ஆரம்ப காலத்தில் கவனிக்கப்படாமல் போகலாம். இதை உறுதி செய்வதற்கு, உடலில் உள்ள ஆன்ட்ரோஜன்களின் அளவை அறிய ஒரு உயிர்வேதியியல் பரிசோதனை தேவைப்படுகிறது. எக்ஸ்-ரே மற்றும் ஹார்மோன் தூண்டுதல் சோதனைகள் இந்நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள செய்யப்படலாம். சிறுவர்களில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பெண்களில் ஓஸ்டெர்ட்டியோலின் அதிகரித்த அளவுகள் முன்கூட்டியே பருவமடைதலுக்கான சரியான அறிகுறிகள். மேலும், தைராய்டு அளவையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இதன் சிகிச்சை காரணிகளை சார்ந்துள்ளது. கட்டிகள் இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இல்லையெனில், கோநடோட்ரோபின்-வெளியீட்டு ஹார்மோனின் எதிர்பு மருந்துகளை வழங்குவதன் மூலம் ஹார்மோன் சமநிலை பராமரிக்கப்படுகிறது. முன்கூட்டியே பருவமடைதலின் அறிகுறிகளுக்கான விளிம்பில் உள்ள குழந்தைகளுக்கு (8-9 வயது) சிகிச்சை தேவைப்படாமல், கண்காணிப்பு மட்டுமே தேவைப்படலாம்.