சுக்கிலவழற்சி என்றால் என்ன?
பெரும்பாலும் நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படும் முன்னிற்குஞ்சுரப்பியின் வீக்கத்தினால் (அழற்சி) வகைப்படுத்தப்படும் ஒரு பொதுவான நிலைமையே சுக்கிலவழற்சி ஆகும். அசுத்தமான சூழலின் காரணமாக எந்த வயது ஆணையும் சுக்கிலவழற்சி பாதிக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சுக்கிலவழற்சியின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பெரும்பாலும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பி விரிவடைதல் போன்றவற்றின் அறிகுறிகளை ஒத்ததாகவே இருக்கும், ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட நிலைமையே ஆகும். இதன் சில தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலியுடன் கூடிய அல்லது தடைப்பட்ட சிறுநீர் வெளியேற்றம்.
- இடுப்புப் பகுதி அல்லது முன்னிற்குஞ்சுரப்பியை சுற்றி உள்ள பகுதியில் வலி, இது மலக்குடலில் ஏற்படும் வலியையும் உள்ளடக்குகிறது.
- சிறுநீர் அவசரமாக தொடர்ச்சியான இடைவெளியில் கழிப்பது, எப்பொழுதாவது சிறுநீருடன் இரத்தம் கலந்திருக்கலாம்.
- பாக்டீரியா நோய்த்தொற்றாக இருப்பின், காய்ச்சல், குமட்டல் மற்றும் பிற சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சுக்கிலவழற்சி அதன் காரணத்தை பொறுத்து வெவ்வேறு வகையாக வகைப்படுத்தப்படுகிறது. அவை:
- நாள்பட்ட சுக்கிலவழற்சி:
இந்த நிகழ்வில், அறிகுறிகள் மெதுவாகவே உருவாகத் தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து நீடிக்கிறது. நாள்பட்ட சுக்கிலவழற்சி நோய்த்தொற்றினால் வருவதில்லை, பெரும்பாலும் இது மிகவும் எளிதாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. வளரும் நாள்பட்ட சுக்கிலவழற்சி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:- சுக்கிலவழற்சி இதற்கு முன்னரே தோன்றியருத்தல்.
- நடுத்தர முதல் முதுமை வயதை அடைந்த ஆண்கள் மத்தியில் நாள்பட்ட சுக்கிலவழற்சி பொதுவாக காணப்படுகிறது.
- குடற் பதற்றப் பிணிக்கூட்டு.
- அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சேதம்.
- கடுமையான சுக்கிலவழற்சி
கடுமையான சுக்கிலவழற்சி நோய்த்தொற்றினால் ஏற்படடும் ஒரு திடீர் மற்றும் தீவிர நிலைமையாகும். இதற்கு உடனடியான மருத்துவ கவனிப்பு அவசியமாகும். இந்த நிலை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:- பாலியல் வன்புணர்வு கடுமையான சுக்கிலவழற்சிக்கு வழிவகுக்கும்.
- சிறுநீரக பாதை நோய்த்தொற்று (யூ.டி.ஐ) அல்லது பால்வினை நோய்கள் (எஸ்.டி.ஐ) அல்லது எச்.ஐ.வி தொற்று அல்லது எய்ட்ஸ் போன்ற சிறுநீர்க்குழாய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பியில் ஏற்படும் நோய்த்தொற்று இதற்கு முன்னரே தோன்றியருத்தல்.
- சில சந்தர்ப்பங்களில், ஒரு நோய்த்தொற்றுனது முன்னிற்குஞ்சுரப்பி திசுப் பரிசோதனை செய்த பின் உருவாகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
சுக்கிலவழற்சியின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை பார்த்து, மருத்துவர் இந்த நிலை சுக்கிலவழற்சி தானா என்பதை அறிய சில சோதனைகளை பரிந்துரை செய்வார். சுக்கிலவழற்சியின் மிகவும் பொதுவான மற்றும் உறுதியான சோதனைகள் பின்வருமாறு:
- டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை உள்ளடக்கிய உடல் பரிசோதனை.
- சிறுநீர் பாதை நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை அறிய சிறுநீர் பரிசோதனை.
- முன்னிற்குஞ்சுரப்பியில் ஏதேனும் வீக்கம் அல்லது அசாதாரண வளர்ச்சியைக் கண்டறிய குதந்தாண்டு மீயொலி (அல்ட்ராசவுண்ட்) சோதனை.
- ஒவ்வொறு முறை வெளியேறும் விந்து மற்றும் விந்துநீரின் அளவுகளை அறிய மற்றும் இரத்தத்தில் தொற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கணடறிய விந்தணு ஆய்வை சிறுநீரக மருத்துவர் மேற்கொள்கிறார்.
- சிறுநீர்ப்பையைப் ஆய்வு செய்து, முன்னிற்குஞ்சுரப்பியிலிருந்து திசு மாதிரிகளை சேகரித்து வீக்கத்திற்கான அறிகுறி உள்ளதா என்பதை அறிய உதவும் சிறுநீர்ப்பையின் திசுப்பரிசோதனை.
ஆரம்ப காலகட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டால், சுக்கிலவழற்சிக்கு பொதுவாக சுலபமாக சிகிச்சை அளிக்கலாம். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியா நோய்தொற்றிற்கு சிகிச்சையளிக்க அவசியமானதாகும். வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் தனி நபருக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. நோய் மிதமாக இருந்தால், அதற்கு பரிந்துரைக்கப்படும் மிகவும் பொதுவான மருந்துகள் பராசிட்டமால் மற்றும் ஐப்யூபுரூஃபன் ஆகும். எனினும், இந்த நிலை கடுமையானதாக இருந்தால் அல்லது வலி மோசமாக இருந்தால், அமிற்றிப்ட்டிளின் போன்ற வலுவான மருந்துக்கள் பரிந்துரைக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்படும் பிற மருந்துகளில் தசை தளர்த்திகள் அடங்கும். வலி நிவாரணத்திற்காக நோயாளிகளுக்கு சூடான குளியல் அல்லது சூடான ஒத்தடம் முதலியவற்றை மருத்துவர் பரிந்துரை செய்வார்.