மனநோய் (உளநோய்) - Psychosis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 12, 2019

March 06, 2020

மனநோய்
மனநோய்

மனநோய் என்றால் என்ன?

மனநோய் என்பது கடுமையான ஒரு மனநிலையை குறிப்பதாகும், இதில் ஒரு நபர் பிரம்மைகள் அல்லது மருட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படுவார் மற்றும் உண்மைத்தன்மை உடன் பலவீனமான தொடர்பு கொண்டிருப்பார். மனச்சிதைவு என்பது ஒரு மோசமான மனநிலையாகும், மனம் சார்ந்த இந்த நோய்க்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக இருக்கலாம், அதில் அவதியுறும் மக்கள் தங்களையும் அல்லது சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் இருக்கலாம்.

அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

மனச்சிதைவிற்கு பல உறுதியான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளன. அவற்றில் சில:

  • தூக்கமின்மை அல்லது வழக்கத்தை விட அதிக தூக்கம் (தொந்தரவான தூக்க சுழற்சி).
  • மனச்சோர்வு.
  • உளைச்சல்.
  • பிரம்மைகள்.
  • மருட்சிகள்.
  • கவனம் செலுத்துவதில் சிரமம்.
  • குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகி இருத்தல்.
  • தற்கொலை எண்ணங்கள் அல்லது செயல்கள்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

மனநோயானது, அந்நோய் பின்னணிகொண்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. சில குரோமோசோமல் கோளாறுகள் மனச்சிதைவுக்கு வழிவகுக்கலாம். மற்ற சாத்தியமான காரணங்கள்:

  • போதைப்பொருள் பயன்படுத்துதல்.
  • தொந்தரவான மற்றும் மனச்சோர்வான சூழல்.
  • மூளையில் கட்டி.
  • பார்கின்சன் அல்லது ஹன்டிங்டன் போன்ற மூளை நோய்கள்.
  • இருமனக் குழப்பம்.
  • மருட்சி கோளாறு (மாயத்தோற்றங்களுக்கு ஆளான கோளாறு).
  • மனத்தளர்ச்சி நோய்.
  • மனச்சிதைவு நோய் (எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் மனக் கோளாறு).

இது எப்படி நோயறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

எந்தவொரு வகையான மன நோய்க்கும் நோயறிவது தனிப்பட்ட நபரைக் கவனித்து, தூண்டுதலுக்கு எவ்வாறு அவரது செயல் பிரதிபலிக்கின்றது என்பதைப் பொறுத்ததாகும்.மருத்துவர் மனநலம் பாதித்த நபரை மனநல மருத்துவரிடம் மேலும் உதவி பெறுவதன் அடிப்படையில் பரிந்துரைக்கலாம்.

ஆன்டிப்சைகோடிக்ஸ் போன்ற மருந்துகள், மாயைகள் மற்றும் மருட்சிகளை குறைக்க பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுகின்றன, மேலும் உண்மையான விஷயங்கள் மற்றும் உண்மையல்லாத விஷயங்களுக்கு இடையில் தெளிவான வேறுபாட்டினை உருவாக்க உதவுகின்றன.

ஆலோசனை மற்றும் உளவியல் மருத்துவம் (மயக்கி உறக்கமூட்டுவது மூலமாக நோய்க்குப் சிகிச்சை செய்தல்) ஆகியன இந்த சூழல்களில் பரிந்துரைக்கப்படலாம், குறிப்பாக இருமனக் குழப்பம் அல்லது மனநோய் சூழ்நிலைகளில் மனநல சுகாதார ஆலோசகருடன் தொடர்ச்சியான ஆலோசனை அமர்வுகள் ஒருவரை மனநலம் பாதித்த நபரை பிரச்சனையிலிருந்து எளிதாக உணரவைக்கும் மற்றும் உண்மை நிலையுடன் ஒன்றுபட செய்யலாம்.

மனநோயுடன் போராடுவது சவாலானதாகும்,தீர்க்கமான மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஒத்துழைப்பு,தொடர்ச்சியான உதவி மற்றும் ஆதரவு வழங்குதல்  பாதிக்கப்பட்ட நபருக்கு தேவைப்படுகிறது ஏனென்றால் இது போன்ற சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்ட நபர்கள் வழக்கமாக தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து தாங்களாகவே விலகி இருப்பார்கள்.



மேற்கோள்கள்

  1. American Academy of Child and Adolescent Psychiatry [Internet] Washington, D.C; Psychosis
  2. national ins
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Psychosis
  4. Mental Health. Psychotic Disorders. U.S. Department of Health & Human Services, Washington, D.C. [Internet]
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Psychosis
  6. healthdirect Australia. Psychosis. Australian government: Department of Health

மனநோய் (உளநோய்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for மனநோய் (உளநோய்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.