ஓய்வின்மை என்றால் என்ன?
ஓய்வின்மை என்பது ஒரே இடத்தில் இருக்க இயலாமை அல்லது அசையாமல் ஒரே செயலை தொடர்ந்து செய்ய இயலாமை ஆகும்.இது வெவ்வேறு மக்களில் வெவ்வேறான பலவித தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.இது உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களைக் கொண்டுள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- பொதுவாக, ஓய்வின்மை என்பது அதிக செயல்திறன் கொண்ட ஒரு நிலை போல தோன்றும்.அதாவது ஒரு நபர் ஒரே இடத்தில் அல்லது ஒரே நிலையில் உட்கார இயலாமை, உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து தொடர்ந்து நகர்தல் அல்லது மாற்றி கொண்டே இருத்தல் ஆகும்.
- ஓய்வின்மை பிரச்சனை உள்ள ஒருவரை தொடர்ந்து ஒரு உரையாடல் மற்றும் வேலையில் வெகு நேரம் ஈடுபடுத்துதல் கடினமாகும்.
- ஓய்வின்மை பிரச்சனை உள்ளவர்கள் உட்கார்ந்திருக்கும் போது அவரது கால்களில் வலியுடன் கூடிய தசை பிடிப்புகள் ஏற்படலாம்.
- கூச்ச உணர்ச்சி, உணர்வின்மை மற்றும் கைகாலுறுப்புகளில் நடுக்கம் போன்றவை வேறு சில அறிகுறிகளாகும்.
- ஓய்வின்மை பிரச்சனை உள்ள ஒரு நபருக்கு தூங்குவதில் சிரமம், அடிக்கடி பதற்றம், தன்னிலையிழத்தல் போன்றவை ஏற்படும்.
- இந்நோய் முற்றிய நிலையில், இந்நோயினால் பாதிக்கப்பட்ட நபர் இதயப் படபடப்பு மற்றும் அதிகமாக வியர்த்தல் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ளலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- ஓய்வின்மைக்கு மிகவும் பொதுவான காரணம் மருந்து சம்பந்தமானதாகும்.கவனம் பற்றாக்குறை அதிக செயல்திறன் குறைபாடு (எ.டி.எச்.டி), ஆஸ்துமா, பல மயக்க மருந்துகள் மற்றும் வாந்தி எதிர்ப்பு மருந்துகள் போன்ற பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் பல மருந்துகளின் பக்க விளைவின் காரணமாக இந்த ஓய்வின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
- ஓய்வின்மைக்கு மற்றொரு பொதுவான காரணம் காஃபின் அல்ஹகாலுக்கு அடிமையாக இருத்தல் அல்லது டீ அல்லது காபி போன்ற காஃபின் அல்ஹகால் உள்ளடக்கிய பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகும்.
- ஸ்கிசோஃப்ரினியா, எ.டி.எச்.டி , டிமென்ஷியா மற்றும் பதற்றம் போன்ற நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகளுடன் இணைந்து இந்த ஓய்வின்மை குறைபாடு ஏற்படுகிறது.
- மிகையான தைராய்டுசுரப்பு நிலையில் உள்ள ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும் ஒருவருக்கு அதிக ஓய்வின்மை ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
- ஓய்வின்மை என்பது ஒவ்வொரு தனி நபருடனும் தொடர்புடைய ஒன்றாகும்.நோயின் அறிகுறி மற்றும் நோயாளியின் கடந்தகால மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் இந்நோய்க்கான காரணம் கணடறியப்படுகிறது.
- நோயறிதல் செயப்படும்போது, உடல் பரிசோதனையை தொடர்ந்து, உங்கள் வாழ்கை முறை பற்றியும் மற்றும் நீங்கள் ஏதெனும் மருந்துகளை உட்கொள்கிறீர்கள் என்றால் அதனை பற்றியும் உங்களது மருத்துவருக்கு தெரியப்படுத்துவது அவசியமாகும்.
- மருந்தியல் சார்ந்த சிகிச்சை முறைக்கு மாறாக, வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதை இந்த சிகிச்சை நோக்கமாக கொண்டுள்ளது.
- ஒரு சீரான தூக்க அட்டவணையை தொடருதல் மற்றும் இரவில் போதுமான அளவு ஓய்வு எடுத்தல் போன்ற ஆலோசனையை மருத்துவர் கூறுவார்.
- இந்த ஓய்வின்மை நோயிலிருந்து முன்னேற்றம் பெற காஃபின் அடங்கிய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- மருந்துகளால் இந்த ஓய்வின்மை நோய் ஏற்பட்டிருந்தால், மருந்துகளை நிறுத்தும் முன்பு அல்லது மாற்றும் முன்பு உங்களது மருத்துவரை கலந்ந்தாலோசிப்பது அவசியமாகும்.இல்லையெனில் அது உங்களது உடலுக்கு தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
- எ.டி.எச்.டி,ஸ்கிசோஃப்ரினியா போன்ற மருத்துவ நிலைகளால் இந்நோய் ஏற்பட்டிருந்தால், முறையான மயக்க மருந்துகள் அல்லது தூக்க மருந்துகள் போன்றவை பரிந்துரைக்கப்படலாம்.