ரெயேவின் நோய்க்குறி என்றால் என்ன?
ரெயேவின் நோய்க்குறி முக்கியமாக குழந்தைகளில் காணப்படுகிறது.இது மூளையில் வீக்கத்தையும், கல்லீரலில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.இது மற்ற உறுப்புகளையும் பாதிக்கலாம்.பெரியவர்களில் இது அரிதாகவே காணப்படுகிறது.
இதன் முக்கிய அடையாள-அறிகுறிகள் என்ன?
ரெயேவின் நோய்க்குறியின் அடையாள-அறிகுறிகள் வைரல் தொற்று (சளி, காய்ச்சல் அல்லது சிக்கன்பாக்ஸ்) ஏற்பட்ட ஒரு சில நாட்களுக்குள் தோன்றலாம்.இவை பின்வருமாறு:
- சோர்வு.
- மீண்டும் மீண்டும் வாந்தியெடுத்தல்.
- குறைந்த உற்சாகம் அல்லது ஆர்வம் இல்லாமலிருப்பது.
- வேகமான மூச்சிரைப்பு மூச்சுவாங்குதல்.
- வலிப்பு அல்லது வலிப்பு அறிகுறி.
நோய் மோசமடையும் போது அறிகுறிகள் கடுமையாகும். இவை:
- ஆக்கிரோஷமான நடத்தை.
- எரிச்சலான மன நிலை.
- அதிகப்படியான கவலை.
- ஹாலூசிநேஷன் உடன் சேர்ந்து குழப்பம்.
- நினைவு இழப்பு மற்றும் சில நேரங்களில் கோமா.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
மைட்டோகாண்ட்ரியாவுக்குள் (உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் ஆற்றல் உற்பத்தி செய்யும் உறுப்புகள்) உள்ள சிறு அமைப்புகளுக்கு ஏற்படும் சேதம் ரெயேவின் நோய்க்குறியில் காணப்படுகிறது. இது கல்லீரலை பாதித்து அதன் ஆற்றல் அளிக்கும் திறனை குறைக்கிறது, மேலும் உடலில் நச்சு பொருட்களின் அளவை கூட்டுகிறது. இது முழு உடலையும் பாதித்து முடிவில் மூளையில் வீக்கத்தை விளைவிக்கும். ஆர்.எஸ் இன் பிரதான காரணி இன்னமும் கண்டறியப்படவில்லை என்றாலும் சில தொடர்புடைய காரணங்கள் பின்வருமாறு:
- வைரல் தொற்று (குளிர், காய்ச்சல் அல்லது சிக்கன்பாக்ஸ்).
- ஆஸ்பிரின் போன்ற மருந்துகளிலிருந்து ஒவ்வாமை தூண்டல்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவர் அறிகுறிகளின் முழுமையான அறிக்கையை குறிப்பெடுத்து முழுமையான உடல் பரிசோதனையும் நடத்துவார்.மேலும் சில சோதனைகள் செய்யப்படலாம்:
- இரத்த பரிசோதனைகள்:
- அஸ்பர்டேட் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் (ஏஎஸ்டி) மற்றும் அலனைன் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் (ஏஎல்டி சோதனைகள்).
- சீரம் எலக்ட்ரோலைட்கள்.
- இரத்த சர்க்கரை அளவு.
- செரிப்ரோஸ்பைனல் திரவம் (சிஎஸ்எஃப்) மதிப்பீடு.
- மூளை மற்றும் கல்லீரலின் கம்ப்யூட்டட் டோமோக்ராபி (சிடி) ஸ்கேன்.
- கல்லீரலின் அல்ட்ராசோனோகிராபி.
- கல்லீரல் திசுப்பரிசோதனை.
- இடுப்புப்பகுதியில் ஓட்டை போட்டு சிகிச்சை தருதல்.
ரெயேவின் நோய்க்குறிக்கான பராமரிப்பு மற்றும் முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகள்:
ஒரு குழந்தை ரெயேவின் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனையின் தீவிர பராமரிப்பு பிரிவில் சேர்க்கப்பட வேண்டும்.இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, சுவாசிக்கும் விகிதம், மற்றும் உடல் வெப்பநிலை போன்ற முக்கிய செயல்பாடுகளை கண்காணித்தல் முக்கியமானது.சிகிச்சையின் முதன்மை நோக்கம் அறிகுறிகளைக் குறைப்பதாகும்.மூச்சு மற்றும் இரத்த ஓட்டம் ஆகிய உடலின் முக்கிய செயல்களை கண்காணிக்கவும் மற்றும் வீக்கம் காரணமாக மூளை பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.சில நேரங்களில், வென்டிலேட்டர் சிகிச்சையும் தேவைப்படலாம். சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் பின்வருமாறு:
- எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்கள் - உப்புகள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவை பராமரிக்க திரவங்கள் வழங்கப்படுகிறது.
- டையூரிடிக்ஸ் - உடலில் இருந்து அதிகமான நீரை குறைக்க உதவுகிறது, இதனால் மூளையில் வீக்கம் குறைகிறது.
- அம்மோனியா டீடாக்ஸிஃபயர்ஸ் - உடலில் அம்மோனியா அளவை குறைக்க உதவுகிறது.
- ஆன்டிகன்வல்சன்ட்ஸ் வலிப்பு மற்றும் அதன் வலிப்பு அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.