வாத இதய நோய் (ருமாட்டிக் இதய நோய்) என்றால் என்ன?
ருமாட்டிக் இதய நோய் (ஆர் ஹெச் டி) என்பது இதயத்தில் ஏற்படக்கூடிய கோளாறாகும், இதில் ஸ்ட்ரெப்டோகாக்கல் தொண்டை தொற்றினை தொடர்ந்து உறுப்பு சேதம் காணப்படுவதோடு மீள முடியாத வால்வு சேதம் மற்றும் இதய செயலிழப்பு போன்றவையும் ஏற்படக்கூடும்.கடுமையான ருமாட்டிக் காய்ச்சல் என்பது (ஏ ஆர் எப்) இந்நோயின் முந்திய நிலையாகும்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
சில நேரங்களில், எந்த அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் இன்றியும் ஆர் ஹெச் டி ஏற்படலாம், ஒருவேளை அறிகுறிகள் இருந்தால், அவை பின்வருமாறு ஏற்படலாம்:
- சேதமடைந்த இதய வால்வுகளில் நோய்தொற்று ஏற்படும் போது, காய்ச்சலும் அதை சார்ந்த அறிகுறியாக ஏற்படுகின்றது.
- வீக்கம் (எடமா).
- படுத்திருக்கும் நிலையில் எதிர்கொள்ளும் சுவாசப் பிரச்சனை(ஆர்த்தோபீனா) மற்றும் / அல்லது கடின உழைப்பால் ஏற்படும் மூச்சுத்திணறல்.
- மார்பில் வலி அல்லது இதயப் படபடப்பு ஏற்படுதல்.
- தூக்கத்திலிருந்து எழுந்து உட்காரவோ அல்லது நிற்க வேண்டியது போன்ற உணர்ச்சி (பாராக்ஸிமல் நொக்டர்னல் டிஸ்ப்னியா).
- மயங்கி விழுதல் (மயக்கநிலை).
- இதய முணுமுணுப்பு.
- ஸ்ட்ரோக்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
ஆர் ஹெச் டி யின் முக்கியக் காரணம் குழு A ஸ்ட்ரெப்டோகோகி தொற்று ஆகும், இந்த தொற்றுநோய் மரபுரீதியாக பாதிக்கப்பட்டவர்களில் அசாதாரண ஆட்டோ இம்யூன் எதிர்வினை ஏற்படக் காரணமாக இருக்கிறது. இந்த மிகைப்படுத்தப்பட்ட எதிர்வினை உடல் முழுவதிலும் உள்ள பல்வேறு திசுக்களில் அழற்சி உண்டாக வழிவகுக்கிறது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர், அறிகுறிகளின் விரிவான வரலாறு மற்றும் மருத்துவ வரலாற்றை முழுமையான உடலியல் பரிசோதனையுடன் ஆராயக்கூடும் (கடந்த ஏஆர்எப் அல்லது ஸ்ட்ரெப்டோகோகால் தொற்றுக்கான சான்றுகள்).சில நேரங்களில், இந்த பரிசோதனையின் போது இதய முணுமுணுப்பை கேட்க நேரிட்டால் அது ஆர் ஹெச் டி என அறிவுறுத்தப்படுகிறது.இருப்பினும், ஆர் ஹெச் டி உடைய சில நோயாளிகளில், இதய முணுமுணுப்பு கேட்கப்படாமலும் இருக்கலாம். மருத்துவர் பின்வரும் சோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தக்கூடும்:
- மார்பு எக்ஸ்-ரே - இதயம் விரிவடைதல் அல்லது நுரையீரலில் திரவம் இருப்பதை பரிசோதிக்க இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
- எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ .சி.ஜி.) - இதய சேம்பர்ஸ் விரிவடைதல் அல்லது இதய துடிப்பின் அசாதாரணத்தை (ஆர்க்டிமியா) பரிசோதிக்க மேற்கொள்ளப்படும் சோதனை.
- எக்கோகார்டியோகிராம் - இதய வால்வுகளை பரிசோதிக்க மேற்கொள்ளும் சோதனை (சேதம், தொற்று இருப்பதாக பரிசோதிக்க).
ஆர் ஹெச் டி யின் பராமரிப்பானது நோயின் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் மற்றும் இதில் அடங்குபவை:
- இதய செயலிழப்பு போன்ற வழக்குகளில், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுதல் அவசியம்.
- பொதுவாக இதய வால்வுகளில் காணப்படும் நோய்த்தொற்றுகளுக்கு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (முக்கியமாக பென்சிலின்) பரிந்துரைக்கப்படுகின்றன.
- ஸ்ட்ரோக்கை தடுக்கவோ அல்லது வால்வுகளை மாற்றுவதற்கு மெலிவுற்ற இரத்தம் தேவைப்படும் போது, இரத்த-மெலிவுறுவதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
- சிக்கி கொண்டிருக்கும் வால்வுகளை பிரிக்க, பலூன் அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றது, இந்த சிகிச்சையில் நாளங்களின் இடையே பலூன் செருகப்படுகிறது.
- சேதமடைந்த இதய வால்வுகளை சரி செய்யவோ அல்லது மாற்றவோ, இதய வால்வு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.