சுருக்கம்
படர்தாமரை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான தோல் நோய் தொற்றாகும். டெர்மடொஃப்ட் என அழைக்கப்படும் ஒரு பூஞ்சை தொற்றினால், படர்தாமரை ஏற்படுகிறது. படர்தாமரையை மருத்துவ ரீதியாக டினியா என அழைக்கப்படுக்கிறது, இது மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்ககூடியது. படர்தாமரைத் தொற்றானது பொதுவாக சூடான மற்றும் ஈரப்பதமான தோல் பகுதிகளில் ஏற்படும். ஆதாவது, இடுப்பு பகுதி, உச்சந்தலையில், விரல்களுக்கு இடையில் உள்ள மடிப்பு போன்ற தோல் பகுதிகளில் படர்தாமரை தோன்றலாம். பல்வேறு வகையான படர்தாமரைகளுக்கு, அது ஏற்படும் தோல் பகுதியினை பொறுத்து பெயரிட்டு அழைக்கப்படுகிறது. உதாரணமாக, இடுப்பு மற்றும் தொடை சேருமிடத்தில் ஏற்படும் படர்தாமரையை தொடையிடுக்குப் படை எனப்படும், உச்சந்தலையில் ஏற்படுவது தலைப்படை, கால் விரல்களில் ஏற்படுவது நகப்படை, கால்களில் ஏற்படுவது (தடகள அடி)சேற்றுப் புண் மற்றும் கைகளில் ஏற்படுவது டினியா மானுமம் ஆகும். உடலில் தோன்றும் பூஞ்சை தொற்றுக்களை உடற்படை என பொதுவான பெயரில் அழைக்கப்படுக்கிறது.
படர்தாமரையானது, ஒரு தெளிவான பகுதியின் மையத்தில் வளையம் போன்ற வடிவத்தில் தோற்றமளிக்கும். வளையத்தின் விளிம்புகளில், சிவப்பு நிறமாக மற்றும் செதில் போன்று கானப்படும். படர்தாமரையானது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான அரிப்பை ஏற்படுத்தும். டினியா என்ற சொல்லுக்கு 'படர்தாமரை' என பெயர் ஏற்படுவதற்கு, அதன் வளையம் போன்ற வடிவமே காரணமாகும். படர்தாமரையானது எளிதில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்தோ, விலங்குகளிலோ அல்லது செல்லப் பிராணிகளிலிருந்து மற்றும் பூஞ்சைத் தொற்றுக் கொண்டிருக்கும் மண் பரப்புகளிலிருந்தும் எளிதாக பரவுகிறது. இது பொதுவாக எச்.ஐ.வி, நீரிழிவு, மற்றும் புற்றுநோய் போன்ற பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு ஏற்படுவதை காணலாம். உடலில் பாதிக்கப்பட்ட தோலின் மாதிரிகள் மற்றும் நுண்ணோக்கி பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர்கள் படர்தாமரையை கண்டறிக்கின்றனர். மிதமான படர்தாமரைகளுக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் லோஷன்ஸிகளின் வெளிப்புற பயன்பாடினால் தீர்க்கப்படுகின்றன. இருப்பினும், கடுமையான படர்தாமரை கொண்டவர்களுக்கும் இந்த பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. கூடுதலாக, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான பழக்க வழக்கங்களினால் தோலினை சுத்தமாகவும், படர்தாமரை ஏற்படுவதை தடுக்கவும் முடிக்கிறது.