ரோசாசியா என்றால் என்ன?
ரோசாசியா அல்லது ஆக்னே ரோசாசியா என்னும் தோல் நிலை, பிரதானமாக முகத் தோலை பாதிக்க வல்லது.நுண்குழாய்கள் விரிவடைந்து முகத்துக்கு நிரந்தரமாக வெளிறிய நிலையை தரும்.அதேபோல், நெற்றி, கன்னங்கள் மற்றும் முகவாய்க் கட்டை ஆகியவற்றிலும் பருக்களை போன்ற மஞ்சள் நிற வெடிப்பு தென்படுகிறது.இவற்றை பருக்கள் என தவறாக நினைக்கக்கூடும், ஆனாலும் பருக்களைப் போன்று ரோசாசியா தழும்பை விட்டுப்போவது இல்லை.
இந்நிலை 35-50 வயதுக்குட்பட்ட பெண்களில் பொதுவாக ஏற்படுகிறது மற்றும் இது ஒரு வெளிறிய தோல் தோற்றத்தைத் தருகிறது.நுண்குழாய்கள் விரிவடையும் இந்நிலை முன்னேறும் பட்சத்தில், நிரந்தர சிவப்பு நிறம் உண்டாகிறது.ஆண்களில் இந்நிலை மூக்கினையும் சிவக்கச் செய்யும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்நிலையை முகத்தின் செம்மை நிறம் அல்லது வெளிறிய நிலையை வைத்து கண்டறியலாம்.சில நேரங்களில் கண்கள் பாதிக்கப்பட்டு, இரத்தம் தெறிப்பது போன்றும் சொரசொரப்புடனும் காணப்படும்.மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- நெற்றி, கன்னம் மற்றும் முகவாய்க் கட்டை சிவத்தல்.
- வெளிறிய தன்மை.
- தடிப்புகள் மற்றும் சீழ் நிரம்பிய பருக்கள்.
- வெள்ளைத்தோல் உள்ள பெண்களில் வெளிப்படையாக காணப்படும் இரத்தக் நாளங்கள்.
- சொரசொரப்பான சமமில்லாத தோல் வாகு.
- ரைனோஃபைமா அல்லது தடிமனாகும் மூக்குத் தோல்.
- முகத்தில் எறிவது போன்ற உணர்வு.
- முகத்தில் புள்ளிகள்.
நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?
முகத்தில் சாதாரணமாக காணப்படும் சிற்றுண்ணிகளால் இந்நிலை ஏற்படலாம்.இந்நிலையை உண்டாக்கும் மற்ற தூண்டிகள் பின்வருமாறு:
- இரத்த நாளங்களில் இயல்பிறழ்வுகள்.
- டீ அல்லது சூப் போன்ற சூடான பானங்கள் மற்றும் காஃபின் கலந்த பொருட்கள்.
- யுவி கதிர்களுக்கு ஆழ்படுதல்.
- மனஅழுத்தம்.
- சிவப்பு ஒயின் அல்லது வேறு ஏதேனும் மது பானம்.
- அறுதியான தட்ப வெப்ப நிலை.
- கடுமையான உடற்பயிற்சி.
- மருந்துகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடல் பரிசோதனை மற்றும் விரிவான மருத்துவ வரலாற்றின் மூலம் ரோசாசியா நிலையைக் கண்டறியலாம்.லூபஸ் எரிதிமடிஸஸ் போன்ற நிலையை கண்டறிய இரத்த பரிசோதனை உதவுகிறது.எனவே ஒரு மருத்துவரை அணுகுதல், இதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிய உதவும்.
எனினும் ஒரு சராசரி மனிதன் பருக்கள், மிகைவியர்வை சுரத்தலால் வரும் தோல் அழற்சி (செபோரிக் டெர்மடய்டிஸ்) மற்றும் பெரியோரல் டெர்மடய்டிஸ் போன்றவற்றுடன் இதன் அறிகுறிகளை குழப்பிக்கொள்ளலாம்.
இந்நிலைக்கான சிகிச்சை பின்வருமாறு:
- அடிப்படை தூண்டிகளை தவிர்த்தல்.
- முகத்தை முறையாக கழுவுதல்.
- சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துதல்.
- ஃபோட்டோதெரபி எனப்படும் ஒளிக்கதிர் மருத்துவ முறை.
- மைனோசைக்ளின் அல்லது டாக்ஸிசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லி.
- குழைமம் அல்லது களிமம் கொண்டு மேலோட்டமான மருத்துவ முறை.
- வெப்ப சிகிச்சை.
- லேசர் மருத்துவம்.
- ஐசோட்ரெடிநியான் தருதல்.
- அறுவைச் சிகிச்சை.