தோல் தடிப்பு என்றால் என்ன?
தோல் தடிப்பு என்பது இணைப்பு திசு கோளாறுகள் மற்றும் தோல் சம்பத்தப்பட்ட ஒரு தன்னுடல் தாக்கு நோயாகும்.இந்நோய் பொதுவாக தன்னுடல் தாக்கு கீழ்வாத நோயுடன் சேர்ந்து ஏற்படுகிறது.ஸ்க்ளீரோடெர்மா என்ற சொற்கூறு சுய விளக்கம் அளிக்கக்கூடியதாகும் அதாவது , 'ஸ்க்ளீரோ' என்றால் கடினமானது மற்றும் 'டெர்மா' என்றால் தோல் என்றும் அர்த்தமாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
உடலில் பாதிக்கப்பட்ட பகுதியை சார்ந்தே தோல் தடிப்பு நோயின் அறிகுறிகள் காணப்படுகின்றன.
இந்நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் பின்வருமாறு:
- கைகள், விரல்கள் மற்றும் முகம் போன்ற சரும பகுதிகளை தடிப்பாக்குதல் மற்றும் கடினப்படுத்துதல்.
- விரல்களின் மீது ஏற்படும் வீக்கம் மற்றும் அதைப்பு.
- சிவந்த , வீங்கிய கைகள்
- மூட்டுகளில் வலி ஏற்படுதல்.
- காலை நேரத்தில் ஏற்படும் விறைப்பு.
- சோர்வு.
- எடை இழப்பு.
- ரேனாய்டு இயல்பு: கால்விரல்கள் மற்றும் விரல் நுனியில் உண்டாகும் சுழற்சியை இழத்தல், என்பது கடும் குளிரினால் கை மற்றும் கால் விரல்களின் நிறம் நீலமாகவோ அல்லது சிவப்பாகவோ ஆகும் நிலை.கடும் குளிரினால் இரத்த நாளங்களில் ஏற்படும் சுருக்கத்தினால் இவ்வாறு ஏற்படுகிறது.
நோயின் இறுதி கட்டத்தில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தோலில் உள்ள திசு இழப்பின் காரணமாக தோல் அதிக நிறமாக தோன்றுதல்.
- கால்சினோசிஸ்: விரல்கள், முன்னங்கைகள் அல்லது பிற அழுத்தம் தரக்கூடிய பகுதிகளில் தசைநாரைச் சுற்றிச் சுண்ணாம்புச்சத்துப் படிதல்.
- ரேனாய்டு இயல்பு.
- உணவுக்குழாய் செயலிழப்பு.
- ஸ்க்ளீரோகடாக்டிலி: தோல் மெல்லியதாகவும், பளபளப்பாகவும், பிரகாசமாகவும் தோன்றும், அதன் விளைவாக விரல்கள் மற்றும் கால் விரல் பகுதியில் குறைந்த இயக்கம் ஏற்படுதல்.
- இரத்தக் கிளைக் குழல் விரிவு: இரத்தக் குழாய்களை விரிவுபடுத்துகிறது , இதனால் தோலின் மேற்பரப்பில் சிவப்பு புள்ளிகள் தோன்றுகிறது.
- ரேனாய்டு இயல்பு, நோய் முற்றிய கட்டத்தில் கூச்ச உணர்வு, உணர்வின்மை,பாதிக்கப்பட்ட பகுதியில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு.
பரவலான தோல் தடிப்பு, இதயம், இரத்த நாளங்கள், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் இரைப்பை குடல் உறுப்புகளை பாதிக்கிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தோல் தடிப்பு நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை, ஆனால் இந்நோய் ஒரு தன்னுடல் தாக்கு நோய் என்று நம்பப்படுகிறது.
இந்நோய் பொதுவாக பெண்களைஅதிகமாக பாதிக்கிறது மற்றும் இரண்டு பிரிவுகள் உள்ளது அதாவது,
- குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படும் தோல் தடிப்பு.
- பரவலான தோல் தடிப்பு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
தோல் தடிப்பு நோய்க்கு சிகிச்சை பெற முடக்குவாத மருத்துவர் அல்லது தோல் நோய் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகிறது.
தோல் தடிப்பு நோயினை கண்டறிவதற்கு மருத்துவ அறிக்கை மற்றும் உடல் பரிசோதனை உதவி புரிகிறது.
பல்வேறு பரிசோதனை மற்றும் ஆய்வுகள் இந்நோய் ஏற்படுவதற்கான காரணத்தை மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு செய்யவும் உதவி செய்கிறது.
இந்நோயறிதலுக்கான ஆய்வுகள் பின்வருமாறு:
- இரத்த பரிசோதனைகள்.
- நியூக்ளியர் எதிர்ப்பு ஆன்டிபாடி சோதனை.
- சரும திசு பரிசோதனை.
பிற ஆய்வுகள் பாதிக்கப்பட்ட உள் உறுப்புகளின் தாக்கத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும்.
ஸ்க்ளீரோடெர்மா சிகிச்சையானது அறிகுறிகளைக் தெரியப்படுத்தி சிறந்த முறையில் இந்நோய் ஏற்படுவதை குறைக்கிறது.
நெஞ்செரிச்சலிருந்து விடுபெறவும், இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தவும் தேவையான மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
இந்த தோல் தடிப்பு நோயை மேலும் பரவாமல் தடுக்க நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை குறைக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூட்டு விறைப்பு, வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைப்பதில் எதிர்ப்பு அழற்சி மருந்துகள் மற்றும் வலிநீக்கிகள் பயனுள்ளதாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட உள்ளுறுப்புகளின் அடிப்படையில் அதற்கு தக்கவாறு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சுயபாதுகாப்பு முறைகள்:
- விரல்கள் மற்றும் கால்களை குளிரின் வெளிப்பாட்டிலிருந்து தவிர்க்க கையுறைகள் மற்றும் காலுறைகள் அணிதல்.
- உங்கள் உடலை சுத்தமாகவும், சருமத்தை நன்கு ஈரப்பதமாக இருக்கும் படி வைத்திருப்பது நல்லது.
- பிசியோதெரபி செய்வது.
- புகை பிடிப்பதை தவிர்த்தல்.