பருவகால பாதிப்புக் குறைபாடு (எஸ்.ஏ.டி) என்றால் என்ன?
பருவகால பாதிப்புக் குறைபாடு, இது எஸ்.ஏ.டி எனவும் அறியப்படுகிறது.பெயர் குறிப்பிடுவது போல, இது பருவ மாற்றங்களின் காரணமாக ஏற்படக்கூடிய ஒரு மனஅழுத்த சீர்குலைவு ஆகும்.குளிர்காலத்தில் பெரும்பாலும் இது ஏற்படுகிறது என்பதால், இது 'குளிர்கால மன அழுத்தம் அல்லது குளிர்கால புளூஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக இலையுதிர்காலத்தின் கடைசியில் தொடங்கி குளிர்காலத்தின் ஆரம்பத்தில் முடிகிறது.கோடை காலத்தில், இந்த நோயின் நிகழ்வு குறைவாக இருக்கும். இது பெண்கள், இளம் பதின்ம வயதினர் மற்றும் பூமத்திய ரேகையிலிருந்து தள்ளி வாழும் மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.கடந்த கால ஆய்வுகளில் அடிப்படையில், நோய்த்தாக்கம் 0%-6.9% வரை காணப்படுகிறது.
அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
காணப்படும் அறிகுறிகள் பருவகாலம் அல்லாத மனச்சிதைவுக்கு ஒத்ததாக இருக்கின்றது.எஸ்.ஏ.டி நோயின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- பெரும் மனச்சோர்வு.
- எல்லா நேரத்திலும் சோகமாக இருப்பது.
- எதிர்மறை எண்ணங்கள்.
- ஆற்றல் இல்லாமை.
- அதிக கார்போஹைட்ரெட் உள்ள உணவுகள் மீது மிகுந்த விருப்பம்.
- இன்சோம்னியா (உறக்கமின்மை).
- கவனம் செலுத்துவதில் சிரமம்.
குளிர்காலங்களில் பாதிக்கும் எஸ்.ஏ.டி நோயின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- ஆற்றல் இல்லாமை.
- அதிகமான பகல்நேர தூக்கம்.
- அதிகமான பகல்நேர தூக்கம்.
- மக்களிடமிருந்து விலகி இருத்தல்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
எஸ்.ஏ.டி நோய்க்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியப்படவில்லை.மரபணு அசாதாரணங்கள் பருவகால பாதிப்புக் குறைபாட்டிற்கு பங்களிக்கின்றன.
ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
- ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் இந்த பிரச்சனையில் நான்கு மடங்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
- வடக்கு அல்லது தென் துருவங்களுக்கு அருகில் வாழும் மக்களிடையே இந்த நிலைமை அதிகமாக நிகழக்கூடியதாக உள்ளது.
- எஸ்.ஏ.டி.நோயின் குடும்ப பின்னணி கொண்டவர்கள் இந்த நிலைமைக்கு சாதகமாக உள்ளனர்.
- முதியவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
- வைட்டமின் டி குறைபாடு, மனத்தளர்ச்சி நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
இது எப்படி நோயறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
மனத்தளர்ச்சி அறிகுறிகளை கவனிப்பதன் மூலம் எஸ்.ஏ.டி நோய் கண்டறியப்படலாம் மற்றும் பருவகால பாதிப்புக் குறைபாடு நோய்க்கான அனைத்து வரைமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.நோயாளியின் மனநலத்தை ஆய்வு செய்ய ஒரு கேள்வித்தாளை பயன்படுத்தலாம்.
எஸ்.ஏ.டி நோய்க்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறை, ஒளி சிகிச்சை ஆகும்.சிறந்த பலனைப் பெற இந்த சிகிச்சை தினசரி பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் ஒரு தேர்ந்த மனநல நிபுணரின் வழிகாட்டலின் கீழ் செய்யப்பட வேண்டும்.அறிகுறிகளை குணப்படுத்த மற்றும் நீண்டகால நன்மைகளை வழங்குவதற்காக, மன தளர்ச்சி எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு அடுத்த செயல்முறை ஆகும்.சிந்தனை செயல்முறைகளை கண்காணிக்கவும் நேர்மறை எண்ணங்களை வழங்கவும் சிந்தனை நடத்தை சிகிச்சை (சி.பி.டி) பயன்படுத்தப்படலாம். வைட்டமின் டி பிற்சேர்வுகள் வழங்கப்படலாம்.
எஸ்.ஏ.டி என்பது ஒரு வகை மனச்சிதைவு கோளாறு ஆகும் மற்றும் இது பருவகால மாற்றங்களால் தூண்டப்படுவதால் இதை எளிதில் கவனித்துக் கொள்ளமுடியும்.சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவது, விரைவாக குணமடைய உதவும்.