செலினியம் குறைபாடு என்றால் என்ன?
செலினியம் குறைபாடு என்பது உடலில் உள்ள செலினியத்தின் அளவுகள் குறைவடைவதைக் குறிக்கிறது.இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் சிறிதளவில் காணப்படும் கனிமமாகும்.செலினியம் குறைபாடு அரிதாகவே ஏற்படுகையில், மண்ணில் குறைந்த அளவு செலினியம் உள்ளடக்கம் கொண்ட பகுதிகளில் இது மிகவும் பொதுவானது ஆகும்.இந்த குறைபாடு தானாகவே எந்தவொரு நோயையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால், இது ஒருவரை பிற நோய்கள் எளிதில் தாக்கும்படியாகச் செய்துவிடுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
செலினியம் குறைபாட்டின் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வரும் சில நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளன:
- கேஷன் நோய்: இதயம் பலவீனம் அடைதல், இதய செயலிழப்பு, கார்டியோஜெனிக் அதிர்ச்சி மற்றும் விரிவடைந்த இதயம் ஆகியவற்றை ஏற்படுத்தும் மயோகார்டியல் நெக்ரோஸிஸ்.
- காஷின்-பெக் நோய்: மூட்டுகளில் உள்ள கசியிழையத்துக்குரிய திசுக்களின் முறிவு, சீர்குலைவு மற்றும் உயிரணு இறப்பு.
- மிக்சோடிமட்டஸ் எண்டெமிக் கிரட்டினிசம்:இது உடலில் குறைந்த செலினியம் மற்றும் அயோடின் அளவுகள் உள்ள தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளில் ஏற்படுகிறது.இது கைக் குழந்தைகளில் மன வளர்ச்சி குறைதல் அறிகுறிகளைக் காட்டுகிறது.
இதன் பிற அறிகுறிகள் பின்வருமாறு:
- தைராய்டு சுரப்புக் குறை.
- அதிகப்படியான சோர்வு.
- கண்டக்கழலை.
- மன வளர்ச்சி குறைவு.
- கருச்சிதைவு.
- முடி கொட்டுதல்.
- கருவுறாமை.
- பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- செலினியம் குறைபாடு ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணம் செலினியம் நிறைந்த உணவுப் பொருட்களை குறைவாக உட்கொள்ளுதல் ஆகும், இது உணவுப் பொருட்கள் மண்ணில் குறைந்த செலினியம் உள்ளடக்கம் உள்ள பகுதிகளில் விளையும் போது ஏற்படுகிறது.
- குரோன் நோய் அல்லது வயிறு பகுதியளவு அல்லது முழுவதுமாக அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்படுவதன் காரணமாக செலினியம் குறைவாக உறிஞ்சப்படுவதன் விளைவாக செலினியம் குறைபாடு ஏற்படலாம்.
- வயதானவர்களிடையே செலினியம் குறைவாக உறிஞ்சப்படுவது மிகவும் பொதுவானது.
- ஸ்டேடின் மற்றும் அமினோகிளைக்கோசைட்கள் போன்ற மருந்துகளின் பயன்பாடு செலினியம் குறைபாட்டை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பொதுவாக விரிவான மருத்துவ பின்புலம் மற்றும் உடல் பரிசோதனைக்குப் பிறகு செலினியம் குறைபாடு கண்டறியப்படுகிறது.
உங்கள் மருத்துவர் பின்வரும் ஆய்வுகளை அறிவுறுத்தக்கூடும்:
- தைராய்டு தூண்டுதல் ஹார்மோனை அளவிட இரத்தப் பரிசோதனை (இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பது செலினியம் அல்லது அயோடின் குறைப்பாட்டை சுட்டிக்காட்டுகிறது).
- செலினியம், குளுதாதயோன் பெராக்ஸிடேஸ் மற்றும் செலினோபுரோட்டின் அளவுகளை அளவிட இரத்தப் பரிசோதனை.
செலினியம் குறைபாடு உணவில் செலினியம் நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வது மற்றும் செலினியம் பிற்சேர்க்கைகள் எடுத்துக் கொள்வது போன்றதன் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகிறது.
பல மல்டி வைட்டமின் மாத்திரைகளில் செலினியம் உள்ளது.
செலினியம் நிறைந்த உணவுப் பொருட்கள் பின்வருமாறு:
- கடலிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்..
- இறைச்சி.
- முட்டை மற்றும் பால் பொருட்கள்.ரொட்டி, தானியங்கள், ஓட்ஸ் மற்றும் பிற உணவு தானியங்கள்.