ஷிகெல்லாசிஸ் என்றால் என்ன?
ஷிகெல்லாசிஸ் என்பது ஷிகெல்லா எனப்படும் பாக்டீரியாவின் வகையினால் ஏற்படும் ஒரு படையெடுக்கும் தொற்றுநோய் ஆகும்.வயிற்றுப்போக்கு, இதனைத் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்பு ஆகியவை ஷிகெல்லாசிஸ் நோயின் மிகவும் பொதுவான வெளிப்பாடு ஆகும்.இந்த நோயானது, மோசமான சுகாதாரம் மற்றும் தூய்மிப்பு உள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளை அடிக்கடி பாதிக்கிறது.இது மலவாய்-வாய்வழி பாதையின் மூலம் பரவுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பாக்டீரியாவுடன் தொடர்புகொண்ட 1 அல்லது 2 நாட்களுக்குப் பிறகு ஒருவர் அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
இதன் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சளி, இரதம் மற்றும் சீழுடன் கூடிய மலைக்கழிவுடன் பேதி, அதாவது வயிற்றுப்போக்கு
- காய்ச்சல்.
- அடிவயிற்று பிடிப்புகள்.
- முழுமையற்ற கழிவகற்றலின் உணர்வு.
- களைப்பு.
- குமட்டல்.
- வாந்தி.
அரிதான அறிகுறிகள் பின்வருமாறு:
- தொற்றுக்குப்பின் ஏற்படும் வாதம்: கண் எரிச்சல், வலிமிகுந்த மூட்டுகள் மற்றும் சிறுநீரக கழிக்கும்போது வலி.
- இரத்தப்பாதை நோய்த்தொற்றுகள்: எச்.ஐ.வி., ஊட்டச்சத்துக் குறைபாடு, புற்றுநோய் போன்ற நிலைகளைக் கொண்ட மோசமான நோயெதிர்ப்பு அமைப்புள்ள நபர்களிடத்தில் இவை உண்டாகலாம்.
- வலிப்புத்தாக்கங்கள்.
- ஹீமோலிடிக் -யூரிக் சிண்ட்ரோம்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஒரு நபர் தற்செயலாக ஷிகெல்லா பாக்டீரியாவை உள்வாங்கும்போது ஷிகெல்லாசிஸ் ஏற்படுகிறது.
ஷிகெல்லாசிஸ் நோயின் காரணங்கள் பின்வருமாறு:
- இது ஷிகெல்லா பாக்டீரியா பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் நேரடி தொடர்புகொள்வதன் மூலம் பரவலாம்.
- மாசுபட்ட உணவை சாப்பிடுதல்.
- மாசுபட்ட குடிநீரை அருந்துதல்.
- குழந்தை பராமரிப்பு மையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் நபர்கள் அல்லது மோசமான சுகாதாரம் மற்றும் தூய்மிப்பு உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஷிகெல்லாசிஸ் நோய்க்கான வாய்ப்புகள் அதிகம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஷிகெல்லாசிஸ் நிலையைக் கண்டறிவதில் வரலாறு மற்றும் பரிசோதனை உதவும்.ஷிகெல்லா பாக்டீரியா மற்றும் நச்சுகளை கண்டறிய உங்கள் மருத்துவர் ஒரு மலப் பரிசோதனையை பரிந்துரைப்பார்.
மேலாண்மை முறைகள் பின்வருமாறு:
- ஷிகெல்லாசிஸ் வழக்கமாக 5 முதல் 7 நாட்களுக்குள் தானாகவே குணமடைகிறது.
- லேசான ஷிகெல்லாசிஸ் நோய்க்கு போதுமான அளவு திரவ உட்கொள்ளல் தேவைப்படுகிறது.
- உடலில் இருந்து திரவங்களின் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு தண்ணீர் நிறைய குடிப்பது மிகவும் அவசியம்.
- இழந்த உப்பு மற்றும் திரவங்களை திரும்பப் பெற எலுமிச்சை நீர், மோர், வீட்டில் தயாரிக்கப்பட்ட திரவங்கள், தேங்காய் நீர் போன்ற ஓரல் ரீஹைட்ரேஷன் திரவங்களைப் (ஓ.ஆர்.எஸ்) பருக வேண்டும்.
- விரைவான சிகிச்சை முடிவுகளுக்காக சில சந்தர்ப்பங்களில் சிரைவழி திரவங்கள் நிர்வகிக்கப்படலாம்.
- ஷிகெல்லாசிஸ் நோயின் கடுமையான நிலைகளில் மட்டுமே ஆண்டிபயாடிக் சிகிச்சை தேவைப்படுகிறது.குழந்தைகள், வயதானவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்புத்திறன் கொண்டவர்கள் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் தேவைப்படும்.