மூச்சுத்திணறல் - Shortness of Breath in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

August 12, 2018

March 06, 2020

மூச்சுத்திணறல்
மூச்சுத்திணறல்

சுருக்கம்

மூச்சுத் திணறல், மருத்துவ ரீதியாக டிஸ்ப்னொயா என அறியப்படும் பொதுவான உடல்நலப் பிரச்சனை. இது சுவாசம் சம்மந்தமாக ஒரு நபர் அனுபவிக்கும் பல்வேறு வகையான உணர்வுளை குறிக்கிறது. மூச்சுத் திணறல் ஏற்பட பல வகைக் காரணங்கள் இருப்பது அதற்கான சரியான காரணத்தை கண்டறிவதை சவாலாக்குகிறது. மூச்சுத் திணறலை திறமையாக கட்டுப்படுத்த, விரைவாக சோதனைகள் செய்து கண்டறிந்து அதை உறுதிப்படுத்துதல் முக்கியம். சில நேரங்களில், அதை ஏற்படுத்தும் அடிப்படை நோயைக் கண்டறிய முடியாவிட்டால், மூச்சுத் திணறலின் சரியான காரணத்தை கண்டறிவது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும். நுரையீரல், இதய நோய்கள், நிமோனியா, இதய செயலிழப்பு, கடுமையான கொரோனரி சிண்ட்ரோம் மற்றும் ரத்தசோகை, உடல் பருமன் மற்றும் மன நோய்கள் போன்ற பிற நிலைகள் ஆகியவை மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகள்.

மூச்சுத்திணறல் அறிகுறிகள் என்ன - Symptoms of Shortness of Breath in Tamil

மூச்சுத் திணறலின் அறிகுறிகள் திடீரெனவோ (கடுமையானவை) அல்லது படிப்படியாகவோ (நீண்டகாலமாக) தொடங்கும். கடுமையான சுவாச பிரச்சனை சில நிமிடங்களுக்குள்ளோ அல்லது ஒரு சில மணி நேரங்களுக்குள்ளோ தொடங்குகிறது. இது இருமல், காய்ச்சல், வெடிப்பு அல்லது மார்பு வலி போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருக்கலாம். கடுமையான நாள்பட்ட நிலையில் மூச்சுத் திணறல், ஒரு அறையிலிருந்து மற்றொரு இடத்திற்கு நடந்து செல்லுதல் அல்லது உட்கார்ந்த நிலையில் இருந்து நிற்க முயற்சித்தல் போன்ற தினசரிப் பணிகளைச் செய்யும் போது கூட ஏற்படும். சில நேரங்களில், உடல் நிலையை மாற்றும்பொழுது கூட வேகமாக மூச்சுவிட தூண்டப்படலாம் அல்லது நிலைமை இன்னும் மோசமாகலாம். மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

 • மூச்சு விட முடியாத உணர்வு.
 • நெஞ்சில் இருக்கமாக உணருதல்.
 • சுவாசிக்க தூண்டுதல் (காற்று பசி).
 • ஆழமாக மூச்சுவிட முடியாமை.
 • சத்தத்துடன் சுவாசம்.
 • வேகமாக, மேலோட்டமான சுவாசம்.
 • மூச்சுத்திணறல்.
 • இளஞ்சிவப்பு, குளிர்ந்த, ஈரம் மிகுந்த தோல்.
 • கழுத்து தசை மற்றும் மார்பின் மேல் பகுதியை பயன்படுத்தி மூச்சுவிடல்.
 • கவலை அல்லது பீதி தாக்குதல்கள்.

மூச்சுத்திணறல் சிகிச்சை - Treatment of Shortness of Breath in Tamil

சிகிச்சையானது பொதுவாக மூச்சத் திணறலின் காரணத்தை சார்ந்தது. சில நேரங்களில், அடிப்படை காரணங்கள் முற்றிலுமாக சிகிச்சை பெறலாம் ஆனால் மூச்சுத் திணறல்கான அறிகுறிகள் முற்றிலும் தீர்க்க இயலாதவை. சில மருந்துகள் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கலாம், எனவே அதன் ஆபத்துகள் மற்றும் நன்மைகள் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது. சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

 • நெபுலைசைர், இன்ஹ்லர் மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை
  குழாய்த் தளர்த்தியானது மூச்சுக்குழாய் அழற்சியை சரி செய்யும் ஏரோசோல் என்ற பொருளை தயாரிக்கும் ஒரு இயந்திரம் (சுவாச பாதையை திறக்கும் மருந்து). வீட்டு நெபுலைசர் கருவிகளை வழிமுறைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். மருத்துவமனையில் அல்லது வீட்டில் மூச்சுத் திணறலை எளிதாக்கும் வகையில் ஒரு சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. தீவிர ஆஸ்த்துமா தாக்குதல்களின் போது, மருந்துகள் கொண்டிருக்கும் ஒரு இன்ஹேலரானது காற்றுப்பாதையை திறக்க உதவுகிறது மற்றும் உடனடியாக மூச்சத் திணறலையும் குறைக்க உதவுகிறது.
 • மருந்துகள்
  மற்றும் மார்பு வலிக்கு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சளி நீக்க மருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. சில ஓபியம் சார்ந்த வலி நிவாரணிகளால் சுவாச நிவாரணம் பெற உதவுகின்றது. அவைகள் சுவாச விகிதத்தை குறைப்பதற்கும் தூக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. சில மருந்துகள் சுரப்புகளை குறைக்க செய்து மற்றும் சுவாச வழிகளை திறக்க உதவுகின்றன. அனைத்து மருந்துகளும் மருத்துவரின் உத்தரவின்படி மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.
 • திரவ வடிகால்
  மற்றும் பெர்கார்டைல் எஃபெஷன்ஸ் போன்ற பிரச்சனைகளில், சுவாசத்தை சுலபமாக்குவதற்கு நுரையீரலில் சேர்ந்துள்ள திரவத்தை உலர்த்த வேண்டும்.
 • கதிர்வீச்சு சிகிச்சை
  காரணமாக சுவாசப் பாதையில் ஏதேனும் கட்டி இருந்தால், கதிர்வீச்சு சிகிச்சை சுவாசக் குழாயை அடைத்துள்ள கட்டியின் அளவைக் குறைக்க உதவுகிறது.
 • லேசர்
  நுரையீரல் புற்றுநோய் கட்டிகளை அகற்ற, லேசர் அறுவை சிகிச்சையானது பரிந்துரைக்கப்படுகிறது.

வாழ்க்கை மேலாண்மைகள்

சுவாசக் குறைபாட்டை உணரும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

 • புகை பிடிப்பதை நிறுத்தவும்
  பிடிப்பதை நிறுத்துவதினால் நுரையீரல், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்க்கலாம். புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் 'புகைப்பதை ஒழிக்கும் கிளினிக்குகளை அணுகவும். அங்கு செல்வதினால் கடுமையான பின்விளைவு அறிகுறிகள் இல்லாமல் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க முடியும். நிகோடின் கம்கள் மற்றும் நிகோடின் இணைப்புகளை பயன்படுத்துதல் புகை பிடிக்கும் பழக்கத்தை அகற்றுவதில் உதவி புரிகிறது.
 • தீங்கு விளைவிக்கும் மாசுபாடு உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
  திணறலைத் தூண்டிவிடும் காரணிகளை தவிர்ப்பது சிறந்தது. மகரந்த பருவத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும் அல்லது ஏதேனும் ஒவ்வாமை, வாயுக்கள், நச்சு விஷமிகள், சுற்றுச் சூழலால் ஏற்படும் நச்சுகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருக்காதீர்கள்.
 • எடை குறைப்பு
  பருமனினால் கூட மூச்சுத்திணறல் ஏற்படலாம். எந்தவொரு சிறிய முயற்சியும் ஒரு நபருக்கு சுவாசிக்க முடியாத நிலையை வழி வகுக்கும். தைராய்டுனால் கூட உடல் எடை அதிகரிக்கலாம், அதனாலும் மூச்சுத் திணறல் ஏற்படலாம். எனவே, உடற் பயிற்சி செய்வதினால் உடல் எடை மற்றும் மூச்சுத் திணறலை பராமரிக்க உதவும்.
 • அதிக உயரத்தில் இருக்கும் வேலையை தவிர்க்கவும்
  5000 அடிக்கும் அப்பால், வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் மூச்சத் திணறல் உள்ள நபர்களுக்கு சுவாசிப்பது மேலும் மோசமடையக் கூடும், எனவே அதிக உயரத்தில் இருக்கும் இடங்களுக்கு செல்லக் கூடாது என பரிந்துரைக்கப்படுகிறது.
 • ஆக்ஸிஜன் நிரப்பி
  நபர் வழக்கமாக ஆக்ஸிஜன் நிரப்பிகளை நம்பியிருந்தால், அதன் செயல் திறன் ஒழுங்காக இயங்குகிறதா என தேவைப்படும் போதும் உறுதி செய்ய வேண்டும்.

மூச்சுத்திணறல் என்ன - What is Shortness of Breath in Tamil

மிகவும் பொதுவான மூச்சுத் திணறல், கிட்டத்தட்ட 25% மக்களை பாதிக்கிறது. இதுவே ஒரு நபர் உடனடி மருத்துவ உதவி பெற அல்லது ஒரு அவசர சோதனை செய்யது கொள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இது பல அடிப்படை நிலைமைகளின் காரணாங்களால் ஏற்படுகிறது மற்றும் சில நேரங்களில் இது சில உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். தற்போதைக்கு, சுவாசக் குறைபாடுகளுக்கான மருத்துவமனை சிகிச்சை பெறும் நபர்களின் சரியான தகவல்களும் அதனால் கிடைக்கும் பலன்களை பற்றிய வரையறுக்கப்பட்ட தகவல்களும் குறைவாகவே உள்ளன. ஆரோக்கியமான மக்களுக்கு, உடற்பயிற்சிக்கு பின்னர் சுவாசத்தில் ஏற்படும் குறைபாடு  பொதுவானது, மேலும் இது அதிக உயரமான பகுதியில் செல்லும் போது, தீவிர வெப்ப நிலைக்கு அருகில் அல்லது உடல் பருமன் ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இது போன்ற எந்த காரணங்களும் இல்லாமல் வேறு காரணங்களால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ஒரு சிறப்பு மருத்துவரை அணுகுக வேண்டும்.

மூச்சுத் திணறல்(டிஸ்ப்னொயா) என்றால் என்ன?

அமெரிக்க தொரசிக் சமுதாயத்தின் படி, மூச்சுத் திணறல், சுவாசிக்கும் போது தீவிரத்தில் வேறுபடும் பல உணர்வுகளுடன் ஏற்படும் அசௌகரியம் என வரையறுக்கப்படுகிறது. இது மூச்சுப் பெருங்குழாய் ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகள் முதல் நீரிழிவு கீட்டோ அசிடோசிஸ் போன்ற சுவாச சம்பந்தமில்லாத கோளாறுகள் வரையிலான பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் தாக்குதல் அல்லது சுவாச உறுப்புகளின் செயலிழப்பு போன்ற பல வெவ்வேறு காரணங்கள் மூச்சுத் திணறலை உண்டாக்கலாம். குறிப்பாக பல உறுப்பு அமைப்புகள் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், இதற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க பல நாட்கள் ஆகலாம் மேலும் அது கடினமான செயல் முறையாகவும் இருக்கலாம்.மேற்கோள்கள்

 1. Dominik Berliner, Nils Schneider,Tobias Welte, Johann Bauersachs. [link]. Dtsch Arztebl Int. 2016 Dec; 113(49): 834–845. PMID: 28098068
 2. Mukerji V. Dyspnea, Orthopnea, and Paroxysmal Nocturnal Dyspnea. In: Walker HK, Hall WD, Hurst JW, editors. Clinical Methods: The History, Physical, and Laboratory Examinations. 3rd edition. Boston: Butterworths; 1990. Chapter 11.
 3. Am Fam Physician. 2012 Jul 15;86(2):173-180. [Internet] American Academy of Family Physicians; Causes and Evaluation of Chronic Dyspnea.
 4. Berliner D, Schneider N, Welte T, Bauersachs J. The differential diagnosis of dyspnea. Deutsches Ärzteblatt International. 2016 Dec;113(49):834. PMID: 28098068
 5. Merck Manual Professional Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Dyspnea
 6. Abernethy AP, Currow DC, Frith P, Fazekas BS, McHugh A, Bui C. Randomised, double blind, placebo controlled crossover trial of sustained release morphine for the management of refractory dyspnoea. . Bmj. 2003 Sep 4;327(7414):523-8. PMID: 12958109

மூச்சுத்திணறல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for மூச்சுத்திணறல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for மூச்சுத்திணறல்

Number of tests are available for மூச்சுத்திணறல். We have listed commonly prescribed tests below: