தோல் நிறமாற்றம் என்றால் என்ன?
தோல் நிறமாற்றம் என்பது தோலில் ஏற்படும் ஒழுங்கற்ற திட்டுக்களுடனான நிற மாற்றத்தைக் குறிக்கும். மற்ற நோய்களுடன் ஒப்பிடுகையில் தோல் நிறமாற்றம் என்பது காயம், வீக்கம் அல்லது வேறு தீவிர அடிப்படை நோயினால் உண்டாகும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். தோல் நிறமாற்றம் தோலில் வெவ்வேறு அளவிலான கருநிறவழங்கி இருப்பதினால் உருவாகின்றது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
காரணத்தின் அடிப்படையில், இந்நிற மங்கிய திட்டுக்கள் வெவ்வேறு தீவிரத்திலான அறிகுறிகளைக் கொண்டு இருக்கும். அவை பின்வருமாறு:
- நிறம் கூடிய அல்லது நிறம் குறைந்த அல்லது இரண்டு வகையான திட்டுகள் உடைய தோல்.
- அரிப்பு.
- சிவத்தல்.
- தோல் திட்டுக்களில் உணர்வு குறைந்து இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது.
- புலனுணர்வு மிகை (உணர்ச்சி மிகுதல்).
இதன் முக்கியக் காரணங்கள் என்ன?
தோல் நிறமாற்றம் என்பது சாதாரண ஒவ்வாமையிலிருந்து, தீவிர தற்சார்பு எமக்கோளாறு வரை பலதரப்பட்ட நிலைகளால் உண்டாகிறது. இதனை உண்டாக்கும் பொதுவான காரணிகள் பின்வருமாறு:
- ஒவ்வாமைகள்.
- தொடர்பு தோல் அழற்சி.
- படை நோய்.
- நோய்த்தொற்று.
- நுண்ணுயிர் நோய்த்தொற்று (பாக்டீரியல்).
- பூஞ்சைத் தொற்று (படை, டினியா வெர்ஸிகொலர், இருதிரிபுக் காளான்).
- தீக்காயம்.
- தற்சார்பு எமக்கோளாறு நோய்.
- சிஸ்டமாட்டிக் லூபஸ் எரிதிமெடோஸஸ்.
- க்ரேவ்ஸ் நோய்.
- பிறவிக்குறி.
- மச்சம்.
- ஸ்ட்ராபெர்ரி மச்சக்கட்டி.
- போர்ட் வயின் ஸ்டெயின்.
- மங்கோலியன் நீலப் புள்ளி.
- ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்.
- மெலாஸ்மா.
- க்ளோஅஸ்மா.
- தோல் புற்றுநோய்.
- பேசல் செல் கார்சினோமா.
- சகுவாமோஸ் செல் கார்சினோமா.
- மச்சக்கட்டி.
- காயம்.
- ரொஸாஸியா.
- கதிர்வீச்சு சிகிச்சை முறை.
- முதுமை வெண்தோல் படலம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
தோல் நிறமாற்றத்தின் சரியான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ வரலாறு ஆகியவை நோயைப் பற்றி கண்டறிய உதவும், ஆனால் நோய்க் கண்டறிதலை உறுதி செய்யவும் தகுந்த சிகிச்சை அளிக்கவும் குறிப்பிட்ட சில ஆய்வுகள் தேவைப்படுகின்றன.அவை பின்வருமாறு:
- இரத்த ஆய்வுகள் - ஒவ்வாமைகள் மற்றும் தற்சார்பு எமக்கோளாறு நோய்களின் இருப்பை கண்டறிய சில ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதில் முழுமையான இரத்த எண்ணிக்கை (சி.பி.சி), சி- எதிர்வினை புரதம் (சி.ஆர்.பி), அணு எதிர் எதிர்மங்கள் (ஏ.என்.ஏ).
- உட்ஸ் லேம்ப் பரிசோதனை - நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை நோய்த்தொற்றைக் கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது.
- தோல் திசுப்பரிசோதனை - நுண்ணோக்கியில் உயிரணு பரிசோதனை செய்ய இது உதவுகிறது.
நோயின் காரணத்தைப் பொறுத்தே சிகிச்சை வரைகூறு அமையும்.காரணத்தை கண்டறிந்தவுடன், நிறமாற்றத்தை குணப்படுத்துவது சுலபமாகிறது. அடிப்படை நோயைச் சார்ந்தே சிகிச்சை அமைகிறது, இது தானாகவே நிறமாற்றத்தை குணப்படுத்துகிறது. எனினும் இது பல நிலைகளில் சாத்தியமாவதில்லை. நிறமாற்றத்தை குணப்படுத்த சில மருந்துகள் உதவும்.இதில் பின்வருவன அடங்கும்:
- இடம் சார்ந்த பயன்பாடு - மேலோட்டமாக தடவக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் இ அல்லது ஹைட்ரோகுவினைன், கருந்தோல் திட்டுக்களை குணப்படுத்த உதவுகிறது.
- வேதியல் முறைப்படி உரித்தல் - க்ளைகோலிக் அமிலம் அல்லது சாலிசிலிக் அமிலம் போன்ற சில குறிப்பிட்ட வேதிப்பொருள்கள் தோலின் வேளிப்புற அடுக்கை (பொதுவாக நிறம் மங்கி இருக்கும்) நீக்க உதவுகிறது.
- லேசர் மருத்துவ முறை - கருநிற தோல் திட்டுக்களை நிறம் குறையச் செய்ய லேசர் மருத்துவ முறையும் உதவுகிறது.