உடல் அரிப்பு - Skin Rash in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 06, 2019

March 06, 2020

உடல் அரிப்பு
உடல் அரிப்பு

சுருக்கம்

உடல் அரிப்பு என்பது, சாதாரணமான தோலில் இருந்து எளிதில் வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய வகையில், தோலின் நிறம் மற்றும் தோற்றத்தில் தெரிகின்ற மாற்றமாகும். இது, குழந்தைகளிடமும் அதே போன்று பெரியவர்களிடமும் வழக்கமாக இருக்கின்ற, பல்வேறு மறைந்திருக்கும் பிரச்சினை(கள்) காரணமாக ஏற்படும் அறிகுறியாகும். பெரும்பாலான நேரங்களில், இது உணவு அல்லது மருந்து- காரணமாக ஏற்படுகிற ஒவ்வாமையினால் வருகிறது.  கூடவே, வெயில் படும்படி இருப்பதும், குறிப்பாக கோடை காலங்களில், உடல் அரிப்பை ஏற்படுத்தக் கூடும். வைரஸ், நுண்ணுயிர், பூஞ்சை அல்லது ஒட்டுண்ணி வகையாக இருக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட நோய் தொற்றுகளும் கூட, உடல் அரிப்பை எழுப்பக் கூடும். சிலநேரங்களில், உடல் அரிப்பு, சில மருந்துகளின் ஒரு பக்க விளைவாக இருக்கிறது. இது, ஒரு தோல் நோய் மருத்துவரால், அரிப்பை கண்காணிப்பதன் மூலமும், அந்த நபரைப் பற்றிய ஒரு விரிவான சரித்திரத்தைப் பற்றி குறிப்புகள் எடுப்பதன் மூலமும், கண்டறியப்பட முடியும். சில நேரங்களில் கண்டறிதலுக்கு, ஆய்வுக்கூட சோதனைகள் தேவைப்படலாம். உடல் அரிப்புக்கான சிகிச்சை, நோய்த்தொற்றுக்கள் காரணமாக இருந்தால் தகுந்த மருந்துகள், அதிக அளவு தண்ணீர் குடிப்பது, உடல் அரிப்பை ஏற்படுத்துபவை என சந்தேகப்படும் மருந்துகளைத் தவிர்ப்பது, தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள், நச்சுத்தன்மையுள்ள உலோகங்கள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றோடு கூடவே ஓய்வையும் உள்ளடக்கியது. உடல் அரிப்பு பற்றிய முன்கணிப்பு பொதுவாக, சிகிச்சையளிக்கக் கூடிய சில ஒவ்வாமைகள் அல்லது நோய் தொற்றுகள் காரணமாக இருந்தால், நன்றாக இருக்கிறது. சிலநேரங்களில் உடல் அரிப்பு, தீவிரமாக அரிக்கக் கூடிய, வீங்கிய, உடல் முழுவதும் பரவக் கூடிய மற்றும், கட்டிகள் மற்றும் கொப்புளங்களாக மாறக்கூடிய ஒரு ஒவ்வாமை விளைவின், ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கக் கூடும்.

உடல் அரிப்பு அறிகுறிகள் என்ன - Symptoms of Skin Rash in Tamil

உடல் அரிப்பு, ஒரு மறைந்திருக்கும் காரணம் அல்லது பிரச்சினைகளின் ஒரு அறிகுறியாக இருக்கிறது.  உடல் அரிப்புடன் கூடவே சில மற்ற அறிகுறிகள் நிலைமையைக் கண்டறிய உதவக் கூடும். உடல் அரிப்புடன் வழக்கமாக ஏற்படக்கூடிய அறிகுறிகள்:

  • அரிப்பு
    நிறைய பிரச்சினைகளில் அரிப்பு உண்டாகும் இடத்தில் தோலில் அரிப்பு தோன்றக் கூடும். பெரும்பாலும் இது, இயல்பில் ஒவ்வாமை பிரச்சினைகளாக மற்றும் சில நேரங்களில் மருந்தின் தூண்டுதலாக அல்லது நோய் தொற்று காரணமாக இருக்கிறது.
  • காய்ச்சல்
    உடல் அரிப்பு, தொடர்ந்து வரக்கூடிய காய்ச்சல்-ன் ஆரம்ப கட்ட அறிகுறியாக அல்லது சில நேரங்களில் வைரஸ்கள், நுண்ணுயிரிகள், பூஞ்சை அல்லது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களில், தலைகீழாகவும் காணப்படுகிறது. உடல் அரிப்புடன் காய்ச்சல் காணப்படுகிற, நோய்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே இருக்கின்றன:
    • டெங்கு என்பது, அதே பெயரிலுள்ள வைரஸினால் ஏற்படுகிறது, மேலும் இது கொசுக்கள் மூலமாகப் பரவுகிறது. உடல் அரிப்பு, தோலின் அடியில் இருக்கும், சிவப்புப் புள்ளிகள் போன்ற இரத்த நுண்குழாய்கள் உடைவதன் காரணமாக ஏற்படுகிறது.
    • கீல்வாத காய்ச்சல், இதயத்தைப் பாதிக்கக் கூடிய மற்றும் ஒரு இதயக் குறைபாடு தொடர்புடைய அறிகுறிகளை வெளிப்படுத்தும் நுண்ணுயிர் நோய் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது.
    • கேன்டிடியாஸ், பூஞ்சை வளர்வதன் காரணமாக, தோலில் ஒரு வெள்ளை நிறமாற்றம் ஏற்படுவதோடு இணைந்திருக்கிற ஒரு பூஞ்சை நோய் தோற்று ஆகும் 
    • சிரங்கு ஒரு ஒட்டுண்ணியின் காரணமாக ஏற்படுகிறது. சுகாதாரமற்ற நிலைகளில், விரல்களின் வலை இடைவெளிகளில் ஒட்டுண்ணி தங்குவதால் ஏற்படுகிறது, மேலும் இரவு-நேர அரிப்பைத் தூண்டுகிறது.
  • சிவந்து போதல்
    ஒரு உடல் அரிப்பு எப்போதும் சிவந்து போதலுடனே இணைந்திருக்கிறது, மேலும் சிலநேரங்களில், இந்த சிவந்து போதல் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் பரவ ஆரம்பிக்கிறது.
  • வீக்கம்
    சிலநேரங்களில், உடல் அரிப்பு, நீர்க்கொப்புளங்கள் தோல் நோய் பிரச்சினையில், நீர் நிரம்பிய கொப்புளங்கள் போன்று தோன்றக் கூடிய, வீக்கம் அல்லது புடைப்பாக மாறுகிறது . சிலநேரங்களில் அவை, ஆரம்பத்தில் ஒரு அரிப்பாகத் தோன்றி, பிறகு மினுமினுப்பான செதில்களாக தோன்றுகிற சொரியாஸிஸ் பிரச்சினையில், செதில்களாக மாறுகின்றன. இந்த அரிப்பு, நாளடைவில் உடல் முழுவதும் பரவி, செதில்கள் உரிந்த இடத்தில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது.  

உடல் அரிப்பு சிகிச்சை - Treatment of Skin Rash in Tamil

உடல் அரிப்புக்கான சிகிச்சை, பின்னால் மறைந்திருக்கும் காரணத்தைப் பொறுத்து இருக்கிறது. பெரும்பாலான பிரிச்சினைகளில், அரிப்பு, சில வீட்டு மருத்துவங்கள் அல்லது துத்தநாக களிம்புகள் போன்ற  மருந்துக்கடையில் வாங்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் போய் விடுகிறது. கடுமையான அரிப்பு அல்லது பின்னால் மறைந்திருக்கும் ஒரு நோயுடன் கூடிய ஒரு அரிப்புக்கு, பிரத்யேகமான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

  • வீட்டு மருத்துவங்கள்
    • அதிக நேரங்களில், உடல் அரிப்புக்கு எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை, அது தானாகவே மறைந்து விடுகிறது. எடுத்துக்காட்டாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஒரு வைரஸினால் கை, பாதம் மற்றும் வாயில் வரும் நோய்களுக்கு, ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது. இருந்தாலும், உடல் அரிப்பு ஒரு நாளுக்கு மேல் நீடித்தால் அல்லது வலி, காய்ச்சல், வீக்கம் மற்றும் அரிப்புடன் காணப்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது, மேலும், காரணத்தைக் கண்டறிய உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
    • தீங்கான வேதிப்பெருட்கள் கலக்காத மிதமான சோப்புக்களைக் கொண்டு உங்கள் அரிப்பு இடத்தை கழுவுங்கள்.
    • அரிப்பைத் தணிக்கவும், ஏதேனும் சிவந்து போதல் இருந்தால் அதிலிருந்து விடுபடவும் பனிக்கட்டி பைகளைப் பயன்படுத்தவும்.
    • அரிப்பின் மீது பெட்ரோலிய ஜெல்லியைப் பயன்படுத்தவும். இது, உங்கள் தோல் வேதனையை ஆற்ற  உதவுகிறது.
    • குளிக்கும் பொழுதும், பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவும் பொழுதும், வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது, அரிப்பைத் தீவிரமாக்கி, எரிச்சல் மற்றும் சிவந்து போதலை அதிகரிக்கிறது.
    • அரிப்பை மூடுவதற்கு, பிளாஸ்திரிகள் அல்லது வேறு ஏதேனும் கட்டுப் போடும் துணிகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள், ஏதேனும் உராய்வு ஏற்படுவதைத் தடுக்க, முடிந்த அளவு அதைத் திறந்தே வைத்திருங்கள்.
  • அரிப்புக்கான சிகிச்சை
    உங்கள் மருத்துவர், அரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணத்தைப் பொறுத்து, உங்களுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடும். அவற்றுள் அடங்கியவை:
    • உணவு, மருந்து, உலோகங்கள் மற்றும் பூச்சிக்கடி மூலமான ஒவ்வாமைகள் ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் ஒவ்வாமை-எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். பெரும்பாலான நிலைகளில், அரிப்புக்கு சிகிச்சையளிக்க, ஒன்று அல்லது இரண்டு முறைக்கு, ஒவ்வாமை எதிர்ப்பு மாத்திரைகள் போதுமானதாக இருக்கிறது.
    • அரிப்புடன் கூடவே சிவந்து போதல், வலி அல்லது வீக்கம் இணைந்து இருக்கும் நிலைகளில், அழற்சி-எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
    • நோய் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
    • மேற்பூச்சு ஹிஸ்டமின் எதிர்ப்பு அல்லது ஸ்டெராய்டு க்ரீம்கள் மற்றும் களிம்புகள், சிவந்து போதல், அரிப்பு மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற பரிந்துரைக்கப்படலாம்.
    • கடுமையுமான உடல் அரிப்பு பிரச்சினையாக இருந்தால், உங்கள் மருத்துவர் ஸ்டெராய்டு ஊசிகளைப் பரிந்துரைக்கக் கூடும்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

உணவு ஒவ்வாமைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களால் ஏற்படும் உடல் அரிப்பால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளவர்கள், ஒவ்வாமைப் பொருட்களை தவிர்ப்பதும், உணவுகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் மேலுள்ள விவர சீட்டை படிப்பதும், வருங்காலத்தில் உடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க மிகவும் உதவிகரமாக இருக்கக் கூடும். வெயிலில் செல்லும் பொழுது, சூரிய ஒளி தடுப்பு களிம்புகளை தடவிக் கொள்வது, ஒளிக்கதிர்-ஒவ்வாமை மற்றும் வெப்ப அரிப்பைத் தடுக்க உதவுகிறது. தினசரி குளிப்பது, தூய்மையான ஆடைகளை அணிவது, நகங்களை வெட்டுவது மற்றும் கைகளைக் கழுவுவது மூலம் போதுமான சுகாதாரத்தைப் பராமரிப்பது, நோய் தொற்றுக்களையும், உடல் அரிப்பையும் தடுக்க உதவுகின்றன.

Body Brightening Cream
₹450  ₹649  30% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. Li W, Zhang Z, Tian R, Zhang K. Skin as a novel route for allergen-specific immunotherapy. Curr Pharm Des. 2014; 20(6):886-91. PMID: 23701565
  2. Ding, W. Y., Lee, C. K., &Choon, S. E. (2010). Cutaneous adverse drug reactions seen in a tertiary hospital in Johor, Malaysia. International Journal of Dermatology, 49(7), 834–841.PMID: 20618508
  3. Tordesillas L et.al. Skin exposure promotes a Th2-dependent sensitization to peanut allergens. J Clin Invest. 2014 Nov; 124(11):4965-75. PMID: 25295541
  4. Alonso C, Larburu I, Bon E, González MM, Iglesias MT, Urreta I, Emparanza JI. Efficacy of petrolatum jelly for the prevention of diaper rash: a randomized clinical trial. J Spec PediatrNurs. 2013 Apr; 18(2):123-32. PMID: 23560584
  5. Mohan, D., Singh, K., & Parikh, Y. Atypical skin manifestations of dengue fever. Indian Journal of Child Health, 5(6), 450-452. VOLUME 5, ISSUE 6, JUNE 2018 [Internet]
  6. Gerogianni, K., Tsezou, A., & Dimas, K. (2018). Drug-Induced Skin Adverse Reactions: The Role of Pharmacogenomics in their Prevention. Molecular Diagnosis & Therapy, 22(3), 297–314.
  7. Miura, T., Yanagida, N., Sato, S., Ogura, K., &Ebisawa, M. (2017).Follow-up of patients with uncertain symptoms during an oral food challenge is useful for diagnosis. Pediatric Allergy and Immunology, 29(1), 66–71. PMID: 29047183
  8. Singh A, Mandal A. Atypical dermatological manifestation of neonatal chikungunya. Indian J PaediatrDermatol 2018; 19:286-7 [Internet]
  9. El Meniawy M, Essam M, Khaled Y.Leprosy, a Pleitropic infectious disease: a challenging diagnosis. Egypt J Intern Med 2018; 30:40-2. [Internet]
  10. Faitelson, Y., Boaz, M., &Dalal, I. (2018). Asthma, Family History of Drug Allergy, and Age Predict Amoxicillin Allergy in Children. The Journal of Allergy and Clinical Immunology: In Practice, 6(4), 1363–1367.
  11. Nedorost S.T, Stevens S.R. Diagnosis and Treatment of Allergic Skin Disorders in the Elderly. Drugs Aging. 2001; 18(11): 827-835. PMID: 11772123
  12. Edwards, I. R., & Aronson, J. K. (2000). Adverse drug reactions: definitions, diagnosis, and management. The Lancet, 356(9237), 1255–1259. PMID: 11072960
  13. Chattopadhyay C, Chakrabarti N. A cross-sectional study of cutaneous drug reactions in a private dental college and government medical college in eastern India. Niger J ClinPract. 2012 Apr-Jun; 15(2):194-8. PMID: 22718172

உடல் அரிப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for உடல் அரிப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.