முதுகெலும்பு காயம் என்றால் என்ன?
முதுகெலும்பு காயம் என்பது ஒரு அதிர்ச்சி அல்லது முதுகெலும்பில் ஏற்படும் காயம் அல்லது முதுகெலும்பிலிருந்து வரும் நரம்புகளில் ஏற்படும் காயம் ஆகும். இந்த வகை காயம், பொதுவாக மாற்றியமைக்கப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் தசை வலிமை மாற்றங்களை ஏற்படுத்துகிறது, சிலநேரங்களில், பக்கவாதத்திற்கு வழிவகுக்கலாம். கீழே வீழ்தல், விபத்துகள் அல்லது முதுகெலும்பு தொற்றுகள் ஆகியவற்றின் காரணமாக முதுகெலும்பு காயம் ஏற்படலாம். காயம் சிறியதாக இருந்தால், முன்கணிப்பு நல்லது, ஆனால் கடுமையான காயம் இருந்தால், அது நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
முதுகெலும்பு காயத்தின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள், காயத்தின் தீவிரத்தயோ, இடத்தையோ அல்லது அதிர்ச்சியின் அளவையோ பொருத்து ஏற்படுகின்றன.
- பராப்லெகியா அல்லது குவாட்ரிப்லெகியா - ஒன்று அல்லது நான்கு கை, கால் உறுப்புகளின் பக்கவாதம் .
- குறிப்பாக, தொடுதல், வெப்பம் அல்லது குளிர் ஆகியவற்றுக்கான மாற்றியமைக்கப்பட்ட உணர்வு அல்லது உணர்விழப்பு .
- சிறுநீர்ப்பை அல்லது குடல் கட்டுப்பாடு குறைதல்.
- இயக்கங்களின் இழப்பு.
- மிகைப்படுத்தப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட மறிவினைகள்.
- மாற்றப்பட்ட பாலியல் செயல்பாடுகள்.
- இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம்.
கடுமையான காயத்தைக் குறிக்கும் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கழுத்து மற்றும் தலைக்கு நீட்டிக்கப்படும் கடுமையான முதுகு வலி.
- பாதிக்கப்பட்ட பகுதியின் பக்கவாதம்.
- தோற்றப்பாங்கு மற்றும் நடையை பராமரிப்பதில் சிரமம்.
- காயத்திற்கு பின்னர் சுவாசிப்பதில் சிரமம்.
- சிறுநீர்ப்பை மற்றும் குடல் கட்டுப்பாடு குறைதல்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
முதுகெலும்பு, தண்டுவட முள்ளெலும்பு இடைவட்டு அல்லது முதுகெலும்பு தண்டை ஆதரிக்கும் தசைகள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டால் முதுகுத்தண்டு காயத்தின் அறிகுறிகள் தோன்றும். அதிர்ச்சி (முதுகெலும்புகள் இடப்பெயர்வு அல்லது முதுகெலும்புகள் முறிவு), கீல்வாதம், வீக்கம், தொற்றுநோய், புற்றுநோய் அல்லது வட்டு சீர்குலைவு ஆகியவற்றால் முதுகுத்தண்டு அமைப்புகளில் காயம் ஏற்படக்கூடும்.
முதுகெலும்பு காயங்களால் ஏற்படக்கூடிய முறிவுகளைத் தவிர, வீக்கம், அழற்சி, திரவ குவிப்பு மற்றும் ரத்தக்கசிவு ஆகியவற்றின் வாய்ப்பு உள்ளது மற்றும் இதனால் முதுகெலும்பு சுருக்கங்கள் ஏற்படலாம். விழுதல், வாகன விபத்துகள், உடல் ரீதியான வன்முறை, விளையாட்டு காயங்கள் அல்லது நோய்கள் காரணமாக இந்த காயங்கள் ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
தண்டுவடம் காயப்படும் அளவு மற்றும் காயத்தின் தீவிரத்தைக் கண்டறிய ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனை மற்றும் மரிமுனைகளின் பரிசோதனையை ஒரு அவசர அறையில் வழக்கமாக மருத்துவர் மேற்கொள்வார். மருத்துவ வரலாறை தவிர, சில இமேஜிங் முறைமைகள் காயத்தின் அளவை கண்டறிய உதவுகின்றன. இந்த இமேஜிங் முறைகள் பின்வருமாறு:
- எக்ஸ்-கதிர்கள் சோதனை - எலும்பு முறிவு, வட்டு ஹெர்னியா போன்றவற்றை கண்டறிய செய்யப்படுகிறது.
- சி.டி ஸ்கேன் - எக்ஸ்-கதிர்கள் மீது ஒரு சிறந்த பார்வை அளிக்கிறது மற்றும் எலும்புகள் மற்றும் வட்டு பற்றிய ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது.மேலும் முதுகெலும்பு நெடுவரிசையின் எலும்புகள் அல்லது தொற்றுநோய்களுக்கான சோதனைக்கு உதவும்.
- எம்.ஆர்.ஐ. ஸ்கேன் - இது மிகவும் முன்னேறிய நடைமுறை மற்றும் விசாரணை தேர்வு ஆகும், இது எலும்புகள், தசைகள், தசைநார்கள் மற்றும் தண்டுவட முள்ளெலும்பு இடைவட்டு ஆகியவற்றின் தெளிவான படத்தை கொடுக்கிறது. இது இடைவட்டு சுருக்க அளவை தீர்மானிக்க உதவுகிறது.
முதுகெலும்பு சேதத்தின் சேதத்தை திரும்பப் பெறச் செய்ய குறைந்த வழிகளே உள்ளதால், இயலாமையை குறைப்பதையும் வலி மற்றும் அசௌகரியம் போன்ற அறிகுறிகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
கடுமையான காயங்களுக்கான சிகிச்சைகள் பின்வருமாறு:
- முதுகெலும்பு நரம்புகளின் அழற்சி மற்றும் வீக்கம் ஆகியவற்றிற்கான மருந்துகள்.
- முதுகெலும்பை நிலைநிறுத்துவதற்க்கான சிகிச்சை.
- முதுகெலும்புப் பத்தியின் எலும்புகள் மற்றும் தசைநார்களின் காயத்தை சரிசெய்ய அறுவை சிகிச்சை.
நாள்பட்ட காயங்களுக்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- மருந்துகள் - வலியைக் குறைக்கும் சில மருந்துகள், தசை தளர்வு ஏற்படுத்துதல், மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் குடல் கட்டுப்பாடுகளை மேம்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
- உடல் சிகிச்சை - புனர்வாழ்வு சிகிச்சையாக அறியப்படுவது, காயத்தின் தாக்கத்தை குறைப்பதற்கும் மூட்டுகளில் இழந்த செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல நவீன நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
- மின்சார நரம்பு தூண்டுதல்.
- ரோபோ நடை பயிற்சி.
- நவீன மின்சார சக்கர நாற்காலி பயன்படுத்துதல்.