வயிற்று புற்றுநோய் - Stomach Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 03, 2019

March 06, 2020

வயிற்று புற்றுநோய்
வயிற்று புற்றுநோய்

முன்னுரை

வயிற்றின் உட்புற சுவரில் உள்ள மூன்று அடுக்குகளில் ஒன்றில் உள்ள செல்கள், கட்டுப்பாடின்றி, அசாதாரணமாக வளர்ச்சி அடைகின்ற போது வயிற்று புற்றுநோய் ஏற்படுகின்றது. வழக்கமாக வயிற்று புற்றுநோய், வயிற்றின் உட்புற அடுக்கில் ஆரம்பித்து, பின்னர் வெளிப்புற அடுக்குகளுக்கு பரவுகிறது. மேலும் அது, அருகிலுள்ள உறுப்புகள், அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் கூட பரவக்கூடியது ஆகும். வயிற்றில் பல்வேறு வகை புற்றுநோய்கள் ஏற்படக் கூடும், அவற்றுள் மிகவும் வழக்கமானதாக இருப்பது நாளப் புற்றுநோய் ஆகும். வயிற்றுடன் தொடர்புடைய பரம்பரை வியாதிகள் மற்றும் மருத்துவப் பிரச்சினைகளைத் தவிர, குறிப்பிட்ட வாழ்க்கைமுறைகள் மற்றும் உணவுத் தேர்வுகளும் கூட, ஒரு நபரை வயிற்றுப் புற்றுநோய்க்கு ஆளாக்கக் கூடும். ஆரம்ப நிலைகளில், ஒரு வயிற்று புற்றுநோய் உள்ள நபருக்கு, அது அறிகுறியற்றதாக (எந்த அறிகுறிகளும் காட்டுவதில்லை), அல்லது காரணமற்ற எடை இழப்பு, அல்லது செரிமானமின்மை போன்ற நோயை வெளிப்படுத்துகின்ற அறிகுறிகளைக் காட்டுவதாக இருக்கிறது. முற்றிய நிலைகளில், கணிசமான எடை இழப்பு, பசியிழப்பு, அல்லது கட்டுப்படுத்த முடியாத வாந்தி போன்ற தீவிரமான அறிகுறிகள் உண்டாகின்றன.

சிகிச்சையானது, அந்த நபரின் மருத்துவப் பின்புலம், நோயின் வளர்ச்சி, மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. இந்த நோயினால் ஏற்படும் பிரச்சினைகளில், கல்லீரலுக்கு புற்றுநோய் பரவுவதன் காரணமாக தோல் மஞ்சள் நிறம் அடைதல் (மஞ்சள் காமாலை), கட்டியின் காரணமாக வயிற்று வெளியேற்று வழியில் அடைப்பு, வயிற்றில் இரத்தக் கசிவு, வயிறு அல்லது நுரையீரல்களை சுற்றிலும் திரவம் சேருதல் (உள்ளுறை அல்லது நுரையீரல் சவ்வு திரவம் நிரம்பி வழிதல்), அதே போல், பசியிழப்பினால் ஏற்படும் பட்டினியின் காரணமாக ஏற்படும் பலவீனம் மற்றும் களைப்பு ஆகியவை அடங்கும். வயிற்று புற்றுநோயினால் ஏற்படும் விளைவுகள், ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல் பரிசோதனைகள் செய்கின்ற நேரத்தில் நோய் பரவியிருப்பதைப் பொறுத்து இருக்கிறது. வயிற்று புற்றுநோயைக் கொண்டிருக்கும் எந்த இரண்டு நபர்களும் வித்தியாசமானவர்களே, மேலும் சிகிச்சையானது நபருக்கு நபர் மாறுபடுகிறது.பொதுவாக, நோய் எவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

வயிற்று புற்றுநோய் என்ன - What is Stomach Cancer in Tamil

உலக அளவில், ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பாலினத்தவர்களுக்கும் ஏற்படும் புற்றுநோய் தொடர்பான மரணங்களில், வயிற்று புற்றுநோய், மூன்றாவது முதன்மையான காரணமாக உள்ளது. அது, உலக அளவில் ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோய்களில், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் ஏற்படுவதில் பாதியளவுக்கு கிழக்கு ஆசியா, குறிப்பாக சீனாவில் ஏற்படுகின்ற வேளையில், 70% அதிகமானவை வளரும் நாடுகளில் ஏற்படுகின்றன.

வயிற்று புற்றுநோய் என்றால் என்ன?

வயிற்று புற்றுநோய் என்பது, வழக்கமாக வயிற்றின் உட்புற அடுக்கில் (சவ்வு) ஆரம்பித்து, பின்னர் வெளிப்புற சுவர்களுக்குப் பரவுகின்ற, ஒரு வகை புற்றுநோய் ஆகும். அது படிப்படியாக பல வருடங்களாக உருவாகிறது. உண்மையான புற்றுநோய் ஆரம்பிக்கும் முன்னர், வயிற்றின் உட்புற சவ்வில் (உட்புற சுவர்) புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்த முந்தைய மாற்றங்கள், அரிதாகவே அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன, மற்றும் அவை அடிக்கடி கண்டுபிடிக்க முடியாமல் போய் விடுகின்றன.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

வயிற்று புற்றுநோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Stomach Cancer in Tamil

வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள் இரண்டு தனித்துவமான நிலைகளில் வகைப்படுத்தப்படக் கூடியவை ஆகும்:

 • ஆரம்ப நிலை அறிகுறிகள்
 • முற்றிய நிலை அறிகுறிகள்

ஆரம்ப நிலை அறிகுறிகள்

வயிற்று புற்றுநோய் ஆரம்ப நிலையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு, எந்த அறிகுறிகளையும் அது வெளிப்படுத்துவதில்லை. ஆனால் இந்தக் கட்டி வளர்ந்து மற்றும் பரவுகின்ற பொழுது, அது இன்னமும் ஆரம்ப நிலையில் இருக்கின்ற போதும் கூட,  சில குறிகள் மற்றும் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

அறிகுறிகளில் அடங்கியவை:

வயிற்று புற்றுநோயின் ஆரம்ப நிலைகளில் ஏற்படுகின்ற அறிகுறிகள், ஆபத்து குறைந்த வயிறு கோளாறுகளைப் போன்று இருக்கின்றன. அது தான் இந்த நோய் ஏன் கவனிக்கப்படாமல், அல்லது தவறாக கணிக்கப்படுகிறது என்பதற்கான காரணமாக இருக்கிறது. புற்றுநோய் எந்த அளவுக்கு விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகிறதோ. அந்த அளவுக்கு வெற்றிகரமாக அதற்கு சிகிச்சை அளிக்க இயலும்.

முற்றிய நிலை அறிகுறிகள்

வயிற்று புற்றுநோயின் முற்றிய நிலையின் அறிகுறிகள் மிகவும் அபாயகரமான வகை ஆகும். கட்டிகள் வளர்ந்து, மற்றும் பரவுவதற்கேற்ப, அது பெருங்குடல் மற்றும் கல்லீரல் போன்ற அருகிலுள்ள உறுப்புகளைப் பாதிக்கின்ற சாத்தியங்கள் உள்ளன.

ஒருவேளை அது, வயிறு அல்லது பெருங்குடலில் ஒரு அடைப்பை ஏற்படுத்துகின்ற அளவுக்குப் பெரிதாக வளர்ந்து இருந்தால், ஒருவர் பின்வரும் அறிகுறிகளை உணரக் கூடும்:

 • கட்டுப்படுத்த இயலாத வாந்தி.
 • பசி இழப்பு.
 • கணிசமான அளவு எடை இழப்பு.

ஒருவேளை வயிற்று புற்றுநோய் கல்லீரலுக்குப் பரவி இருந்தால், ஒருவர் பின்வரும் அறிகுறிகளையும் உணரக் கூடும்:

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

வயிற்று புற்றுநோய் சிகிச்சை - Treatment of Stomach Cancer in Tamil

வயிற்று புற்றுநோய்க்கான சிகிச்சைகள் இரண்டு வகைப்படும்:

 • குறிப்பிட்ட இட சிகிச்சை
  இந்த சிகிச்சை, ஒரு கட்டியின் செல்கள், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இதில் அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவை அடங்கும்.
 • அமைப்புரீதியான சிகிச்சை
  இந்த சிகிச்சை, இரத்த ஓட்டத்தின் வழியாகப் பயணிப்பதன் மூலமாக உடல் முழுவதும் உள்ள செல்களை சென்றடைகிறது. இதில் கீமோதெரபியும் அடங்கும்.

ஒருவர் குறிப்பிட்ட இட சிகிச்சை, அல்லது அமைப்புரீதியான சிகிச்சை, அல்லது இரண்டு வகை சிகிச்சையும் பெறக் கூடும். சிகிச்சையானது பின்வருவனவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது:

 • கட்டி இருக்கும் இடம், கட்டியின் வகை மற்றும் அளவு.
 • நோயின் நிலை.
 • ஆய்வக சோதனை முடிவுகள்.
 • வயது மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கிய நிலை.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை, வயிற்று புற்றுநோய்க்கான மிகவும் வழக்கமான சிகிச்சை முறை ஆகும். அது, கட்டியின் முழு திரட்சி, மற்றும் அருகில் பரவக்கூடிய ஏதேனும் புற்றுநோய் செல்களை முழுமையாக நீக்குவதை இலக்காக கொண்டுக் செயல்படுகிறது. புற்றுநோயின் நிலையைப் பொறுத்து, அறுவை சிகிச்சை ஒரு சிகிச்சை தேர்வாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

கீமோதெரபி

இந்த சிகிச்சையானது, இரத்தக்குழாயில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு, அல்லது வாய்வழியாகக் கொடுக்கப்பட்டு, பின்னர் இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைகின்ற, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறது. கீமோதெரபி, உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி இருக்கின்ற புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க மிகவும் பயன் மிக்கதாக இருக்கிறது.

கதிர்வீச்சு சிகிச்சை

இந்த சிகிச்சை, உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கின்ற புற்றுநோய் செல்களைக் கொல்ல உயர்-சக்தி துகள்கள், அல்லது கதிர்களைப் பயன்படுத்துகிறது.

குறிப்பிட்ட இலக்கு சிகிச்சைகள்

கதிர்வீச்சு சிகிச்சை அல்லது கீமோதெரபி போல் அல்லாமல், குறிப்பிட்ட இலக்கு சிகிச்சைகள் ஆரோக்கியமான திசுக்களைப் பாதிக்காமல் புற்றுநோய் செல்களைத் தாக்குகின்றன, இந்த மருந்துகள், புற்றுநோய் செல்களின் குறிப்பிட்ட மூலக்கூறுகளின் செயல்பாட்டில் குறுக்கிடுவதன் மூலமாக, புற்றுநோயின் வளர்ச்சி மற்றும் பரவுதலைத் தாமதப்படுத்துகின்றன.

உயிரியல் ரீதியான சிகிச்சை

உயிரியல் ரீதியான சிகிச்சையானது, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடிய உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் பொருட்கள், அல்லது கூறுகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பதுடன் தொடர்புடையது ஆகும். இதன் எடுத்துக்காட்டுக்களில், இன்டெர்ஃபெரான்கள், இன்டெர்லூக்கின்கள், மற்றும் குறிப்பிடப்படாத நோய் எதிர்ப்பு தூண்டுதல் காரணிகள் ஆகியவை அடங்கும்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

உங்களுக்கு வயிற்று புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பற்றிய பின்வரும் அறிவுரைகள் உதவிகரமாக இருப்பதாக நீங்கள் உணரக் கூடும்:

 • மற்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களிடம் பேசுங்கள். உள்ளூர் ஆதரவு குழுக்களை நாடுங்கள்.
 • உங்கள் பிரச்சினையைப் பற்றிப் படியுங்கள், மற்றும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
 • உங்களுக்கு புற்றுநோய்க்காக ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால், மீண்டு வருவதற்கு நாட்கள் எடுத்துக் கொள்ளத்தான் செய்யும்.  இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான நியாயமான காலத்தை,உங்களுக்கு நீங்கள் அளியுங்கள்
 • கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற சிகிச்சைகள் உங்களைக் களைப்படைய செய்யக் கூடியவை, மேலும், நீங்கள் உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கலாம்.
 • உங்கள் வயிற்றின் ஒரு பகுதியை நீக்குவதற்காக உங்களுக்கு அறுவை சிகிச்சை (பகுதி இரைப்பை நீக்கம்) மேற்கொள்ளப்பட்டு இருந்தால், சிறிது காலத்துக்கு நீங்கள் குறைந்த அளவு உணவுகள் மட்டுமே சாப்பிட இயலும், பின்னர் படிப்படியாக அது இயல்பு நிலைக்குத் திரும்ப வந்து விடும்.
 • உங்களுக்கு உங்கள் வயிறை நீக்குவதற்கான (முழு இரைப்பை நீக்கம்) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால், வழக்கமான உணவுப் பழக்கங்களுக்கு நீங்கள் மாறுவதற்கு முன்னர், அது மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளும். உங்கள் உணவு முறையைப் பற்றி உங்கள் மருத்துவர் குழு உங்களுக்கு அறிவுரை வழங்கும். முழு இரைப்பை நீக்கத்துக்குப் பிறகு, இரத்த சோகை, மற்றும் நரம்பு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க, வைட்டமின் B12 ஊசிகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். (மேலும் படிக்க - வைட்டமின் B நன்மைகள் மற்றும் ஆதாரங்கள்)


மேற்கோள்கள்

 1. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Stomach Cancer
 2. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; What Is Stomach Cancer?.
 3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Stomach Cancer.
 4. National Health Service [Internet]. UK; Stomach cancer.
 5. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Stomach Cancer Risk Factors.
 6. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Upper GI series
 7. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Targeted Therapy: About this Treatment
 8. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; Radiation Therapy for Stomach Cancer.

வயிற்று புற்றுநோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for வயிற்று புற்றுநோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.