நாடா புழு தொற்று என்றால் என்ன?
நாடாப்புழுக்கள் மற்ற ஓம்புயிரிகளின் (மனிதர்கள், விலங்குகள்) குடல்களினுள் வாழும் தட்டையான குடற்புழுக்களாகும். நாடாப்புழுக்கள் மனிதனின் உடலில் ஏதேனும் சில ஆதாரங்களின் வழி நுழைந்து பல்வேறு உயிரியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் நாடாப்புழு தொற்று நோய்களை ஏற்படுத்தும்.
நாடா புழுக்களின் முட்டை அல்லது இளம்புழுப்பருவத்தின் மூலமாகவும் அது ஒரு மனிதரை பாதிக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முதல்நிலை அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு காய்ச்சல் மற்றும் அதனுடன் பலவீனம், சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு காணப்படலாம்.
- பொதுவாக சிலர் தங்களது பசியை இழந்துவிடுவார்கள். மாறாக ஒரு சிலருக்கு அதிகமாக பசியெடுக்கும் (சராசரி அளவைவிட).
- புழுக்கள் உடம்பின் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டால், தலைவலி மற்றும் அபாயகாரமான நரம்பியல் பிரச்சனைகளான வலிப்புத்தாக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.
- நாடாப்புழுக்கள் வெளியிடும் ஒவ்வாப்பொருளால் நோயாளிக்கு ஒவ்வாமை மற்றும் தடிப்புகள் ஏற்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய கரணங்கள் என்ன?
- நாடாப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்ற ஆதாரங்களில் இருந்து நாடாப்புழுக்கள் மனித உடலை பாதிக்கிறது. அந்த ஆதாரங்களை பொறுத்து 6 முக்கிய வகையான நாடாப்புழுக்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.
- பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி அல்லது முழுமையாக சமைக்கப்படாத கறி அல்லது அசுத்தமான குடிநீரை பருகுவதாலும் நோய் தொற்று ஏற்படலாம்.
- நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரால் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடும் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்படலாம்.
- ஒருவர் உணவை கையாளும் போது கைகளை சுத்தமாக கழுவாததாலும் அசுத்தமான கைகளால் சமைக்கும்போதும் போதிய தனிப்பட்ட சுகாதாரமின்மையால் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
- உங்களுக்கு நாடாப்புழு தொற்றுநோயின் அறிகுறிகள் இருந்தால், மலத்தில் நாடாப்புழுக்கள் அல்லது அதன் முட்டைகள் இருப்பதை பரிசோதிக்க மலம் மாதிரி எடுத்துக்கொள்ளப்படுகிறது.
- உங்களுக்கு நாடாப்புழு தொற்றுநோயின் அறிகுறிகள் இருந்தால், மலத்தில் நாடாப்புழுக்கள் அல்லது அதன் முட்டைகள் இருப்பதை பரிசோதிக்க மலம் மாதிரி எடுத்துக்கொள்ளப்படுகிறது.
- வயிற்றில் வீக்கம் அல்லது சந்தேகத்திற்குரிய நீர்க்கட்டி இருந்தால் சி.டி ஸ்கேன், காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற சோதனைகளை நோயறிதலுக்கு பயன்படுத்தலாம்.
- உடலில் நாடாப்புழுவால் நோய்த்தொற்று ஏற்பட்டு, அதை எதிர்க்க ஆன்டிபாடி உருவாகியிருந்தால் இரத்த பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- நாடாப்புழு உடலில் தொடர்ந்து வாழ்ந்திருக்கும் போதும் சில நேரங்களில், ஒருவர் எந்தவொரு அறிகுறிகளுமின்றி இருக்கலாம்.
- இம்மாதிரியான தொற்றுக்குரிய மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் மருந்துகளை உட்கொண்டு நிறைவு செய்வது முக்கியம்.
- வலி அல்லது வீக்கம் உண்டானால், வேறு மருந்துகளான அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் ஹெல்மின்திக் எதிர்ப்பு மருந்துகளான அல்பெண்டசால் போன்றவை முட்டைகளையும் புழுக்களையும் கொல்ல தரப்படுகின்றன.
- மோசமான தருணங்களில், கல்லீரல் அல்லது நுரையீரல்களில் தீவிரமான நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் தேவைப்படுகின்றது.
- ஒவ்வொரு நோயாளியும் நோய்தொற்று மறுபடியும் ஏற்படாமல் தடுக்க, தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரித்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.