டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு என்றால் என்ன?
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு என்பது வயதான ஆண்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு நிலை, ஏனெனில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைவதால் இந்த குறைபாடு உண்டாகும். இளவயது ஆண்களுக்கு பருவமடைதலுக்கும் உடல் மாற்றத்திற்கும் டெஸ்டோஸ்டிரோன் தேவை என்பதால் அதன் குறைபாடு இருப்பது பல கோளாறுகளை விளைவிக்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்நிலையின் அறிகுறிகள் வெவ்வேறு வயதினருக்கு ஏற்றார்போல் மாறுபடும். டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வளர்ச்சியடையாத ஆண் பிறப்புறுப்பு.
- குறைந்த தாடி, மீசை மற்றும் தசை நார் வளர்ச்சி.
- பருவமடைதலுக்கு பின் வளர்ச்சி நிறுத்தப்படுதல்.
வயது முதிர்ந்தோருக்கு பாலுணர்வு உந்தல் குறைதல் மற்றும் பாலியல் செயல்பாடுகள் கடுமை ஆகுதலுடன் மனநிலை ஊசலாட்டம் அதிகரிக்கும்.
- தசை நார் வலிமை குறையும்.
- ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத்துளைநோய்.
நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?
மனித மூளை, இயக்குநீர் உருவாக்குதலை சீராக்குவதால் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி கட்டுப்பாடு விரைப்பை மற்றும் மூளையை பொறுத்தது. டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டின் இயற்கையான காரணம் முதுமை. இந்நிலையை உண்டாக்கும் மற்ற காரணங்கள் பின்வருமாறு:
- பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் எனப்படும் மூளை அடிப்பகுதி அல்லது விரைகளின் மரபுவழி ஒழுங்கின்மை.
- தவறான மருந்து பயன்பாடு.
- விரைகளின் அதிர்ச்சி அல்லது சேதம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
குறைந்த பாலுணர்வு உந்தல் மற்றும் அடிக்கடி மனநிலையில் ஊசலாட்டம் ஏற்பட்டால் மருத்துவர் இரத்த மாதிரி மூலம் செய்யப்படும் டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனையை பரிந்துரைப்பர். முடிவுகளை உறுதிப்படுத்த இந்த பரிசோதனை செய்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மீண்டும் செய்யப்படுகிறது. இந்நிலைக்கு சிகிச்சை உள்ளது எனினும் இம்மருந்துகள் வரிசையாய் தொடர்ந்து உட்கொள்ளப்படவேண்டும் மற்றும் இநிலையை பூரணமாக குணமாக்க முடியாது. இதன் அளவை இயல்பு நிலைக்கு திருப்ப டெஸ்டோஸ்ட்ரோன் ஈடுசெய் மருத்துவம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இந்த குறைபாட்டின் சிகிச்சைக்கு டெஸ்டோஸ்டிரோன் கூழ்மம் அல்லது ஊசி பரிந்துரைக்கப்படுகிறது.
இளம் வயதினர்களில், டெஸ்டோஸ்டிரோன் தெரபி மூலம் காணப்படாத இரண்டாம்நிலை பான்மைகளை சுலபமாக சரி செய்யலாம். எனினும் வயது முதிர்ந்தவர்களில், இது பூரண திருப்திகரமான பலனை அளிக்காது.
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு என்பது வயது வந்தவர் அனைவருக்கும் ஒரு சவாலான நிலை ஏனென்றால் அது ஆண்களின் விதை வளர்ச்சியை பாதிக்கிறது.