த்ரோம்போசைட்டோபீனியா (குருதித் தட்டுக்குறை) மற்றும் ஐடிபி - Thrombocytopenia and ITP in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 21, 2019

March 06, 2020

த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் ஐடிபி
த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் ஐடிபி

த்ரோம்போசைட்டோபீனியா (குருதித் தட்டுக்குறை) மற்றும் இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா என்றால் என்ன?

இரத்தத்தின் கூறுகளில் ப்ளேட்லட்களும் ஒன்றாக இருக்கின்றது. இரத்தத்தில் உள்ள ப்ளேட்லட்களின் எண்ணிக்கை  சாதாரண அளவைவிட குறைவாக இருக்கும் நிலையே த்ரோம்போசைட்டோபீனியா எனப்படுகிறது. ப்ளேட்லட்கள் இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிப்பதோடு, காயங்களைக் குணப்படுத்தவும் இரத்தப்போக்கை நிறுத்தவும் தேவைப்படுகின்றன. இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா (ஐ.டி.பி.) என்பது இரத்தத்தின் ஆட்டோ-இம்யூன் கோளாறு ஆகும், இந்நிலையில் உடல் ப்ளேட்லட்களை சுயமாக அழிப்பதால் ப்ளேட்லட்களுக்கான பற்றாக்குறை உருவாகின்றது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

இளநிலை த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் ஐ.டி.பி. பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் உருவாக்குவதில்லை. கடுமையான த்ரோம்போசைட்டோபீனியா உடலின் எந்த பகுதியிலும் இரத்தகைச்சிவை ஏற்படுத்துவதால் மருத்துவ அபாயத்திற்கு வழிவகுக்கக்கூடியது.

ஐ.டி.பி. இல் பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்:

  • தோலின் மேற்பரப்பில் இருக்கும் பழுப்பு நிறப் பகுதிகள் அல்லது சிகப்பு புள்ளிகள், தோலின் கீழ் இரத்தப்போக்கு இருப்பதை குறிக்கின்றது.
  • தோலின் கீழ் இருக்கும் கட்டி.
  • மூக்கில் இரத்தம் வடிதல்.
  • ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு.
  • சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்த வெளியேற்றம்.
  • காயங்களிலிருந்து தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு இரத்தக் கசிவு ஏற்படுதல்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

த்ரோபோசோப்டொபீனியாவின் காரணம் இன்னும் அறியப்படாத ஒன்றாக இருக்கின்றது. சில நேரங்களில் பின்வரும் காரணிகள் அல்லது அதன் சேர்க்கைகள் த்ரோபோசோப்டொபீனியாவை ஏற்படுத்தக்கூடும்:

  • மரபணு மூலமாக, பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு பரிமாற்றமாகுதல்.
  • எலும்பு மஜ்ஜை போதிய எண்ணிக்கையைவிட குறைந்தளவில் பிளேட்லெட்டுகளை உற்பத்தி செய்தல்.
  • எலும்பு மஜ்ஜை போதிய எண்ணிக்கையில் பிளேட்லெட்டுகள் உற்பத்தி செய்தாலும், அவற்றை உடல் பயன்படுத்திவிடுதல் அல்லது அழித்துவிடுதலினால் உருவாகும் பற்றாக்குறை.
  • மண்ணீரல் கணிசமான அளவு பிளேட்லெட்டுகளை தேக்கி வைத்திருத்தல்.

பொதுவாக ஐ.டி.பி எனும் நிலை, இம்யூன் எதிர்வினையின் காரணமாக உடலின் பிளேட்லெட்டுகள் தாக்கப்பட்டு அழிக்கப்படும் போது ஏற்படுகிறது. இந்நிலை மற்ற பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்றுகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

உடல் பரிசோதனை, மருத்துவ வரலாறு மற்றும் இரத்த பரிசோதனைகள் ஆகியவை பிளேட்லெட்டுகளின் குறைபாட்டை கண்டறிய உதவுகின்றன. மருத்துவர் ஐ.டி.பி. நோய் என சந்தேகித்தால் பின்வரும் காரணிகளை பற்றி விசாரிக்கலாம்:

  • இரத்தப்போக்கிற்கான அறிகுறிகள்.
  • பிளேட்லெட்டின் எண்ணிக்கை குறைய காரணமாக இருக்க கூடிய ஏதேனும் நோய்கள் ஏற்படுதல்.
  • தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் ஏதேனும் சிகிச்சையின் காரணமாக இரத்தப்போக்கு ஏற்படுதல் அல்லது பிளேட்லெட் எண்ணிக்கை குறைதல்.

இளநிலை த்ரோபோசோப்டொபீனியா மற்றும் ஐ.டி.பி. ஆகியவைக்கு எந்த சிகிச்சையும் அவசியம் இல்லை. இந்நோயின் கடுமையான நிலையில் சிகிச்சையளிக்க பல்வேறு சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

  • கார்டிகோஸ்டீராய்ட்கள் போன்ற மருந்துகள், இவை பிளேட்லெட்கள் அழிக்கப்படுவதற்கான வேகத்தை குறைக்க உதவுகின்றன.
  • தீவிரமான வழக்குகளில் இரத்தம் அல்லது பிளேட்லெட் டிரான்ஸ்ஃபியூஷன்.
  • மருந்துகள் எந்த பயனும் அளிக்காத நிலையில், இறுதி தேர்வாக மண்ணீரல் அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்படும். இது பொதுவாக ஐ.டி.பி. க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Thrombocytopenia.
  2. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Immune Thrombocytopenia.
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Thrombocytopenia.
  4. National Organization for Rare Disorders [Internet]; Immune Thrombocytopenia.
  5. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; Thrombocytopenia.

த்ரோம்போசைட்டோபீனியா (குருதித் தட்டுக்குறை) மற்றும் ஐடிபி டாக்டர்கள்

நகரின் Hematologist தேடல்

  1. Hematologist in Surat

த்ரோம்போசைட்டோபீனியா (குருதித் தட்டுக்குறை) மற்றும் ஐடிபி க்கான மருந்துகள்

Medicines listed below are available for த்ரோம்போசைட்டோபீனியா (குருதித் தட்டுக்குறை) மற்றும் ஐடிபி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹95.0

Showing 1 to 0 of 1 entries