டூரெட்ஸ் நோய்க்குறி என்றால் என்ன?
டூரெட்ஸ் நோய்க்குறி என்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு நிலை, இது பாதிக்கப்பட்டவரிடம் திடீர் மற்றும் விருப்பமில்லா இயக்கங்களையும் ஒலிகளையும் ஏற்படுத்த உந்துகிறது. இந்த திடீர் ஒலிகள் அல்லது இயக்கங்கள் டிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, மற்றும் நோயின் அறிகுறிகள் மிதமானதாகவும் கடுமையானதாகவும் இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
டூரெட்ஸ் நோய்க்குறியின் இரண்டு முக்கிய அறிகுறிகள் மோட்டார் டிக்ஸ் மற்றும் வாய்மொழி டிக்ஸ் ஆகும்.
மோட்டார் டிக்ஸ் என்பது விருப்பமில்லாத மற்றும் திடீர் இயக்கங்களைக் குறிக்கின்றது. மோட்டார் டிக்ஸ் பின்வருமாறு:
- கண் சிமிட்டல்.
- முகம் சுளித்தல்.
- திடீர் தாடை இயக்கங்கள்.
- விருப்பமில்லாத தலையாட்டல்.
- குதித்தல்.
- தோள்பட்டைகளை குலுக்குதல்.
- திடீரென வாய் திறத்தல்.
- விருப்பமில்லாமல் கையை ஆட்டல்.
வாய்மொழி டிக்ஸ் ஒருவரால் செய்யப்படும் விருப்பமில்லா ஒலிகளைக் குறிக்கின்றது. இந்த ஒலிகளுக்கு அர்த்தம் இருப்பதில்லை மற்றும் பெரும்பாலான நேரங்களில் எந்த பின்புலமும் இருப்பதில்லை. வாய்மொழி டிக்ஸ் பின்வருமாறு:
- மூக்குறிஞ்சுதல்.
- கீறீச்சிடும் சப்தம்.
- கத்துதல்.
- உறுமல்.
சில சந்தர்ப்பங்களில், வாய்மொழி டிக்ஸ் ஒரு இழிச்சொல்லாகவோ அல்லது சமூகத்தில் சொல்லக்கூடாத வார்த்தைகளாகவோ இருக்கலாம். எனினும், இது மிகவும் அரிதாகவே இருக்கிறது.
பின்வரும் சிக்கல்களுடனும் டூரெட் நோய்த்தாக்கம் ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்:
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
டூரெட்ஸ் நோய்க்குறியின் சரியான காரணம் தெரியவில்லை, இருப்பினும் பெரும்பாலான மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மூளை மற்றும் மரபியல் பகுதிகளிலுள்ள கட்டமைப்பு வேறுபாடுகளுடன் இந்த நோய்த்தன்மையை இணைக்கின்றனர். ஒரு நேர்மறையான குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு இந்த நோய்க்குறியீட்டினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.
இந்த நோய் ஆண்களில் அதிகமாக ஏற்பட்டுகிறது, எனவே பாலினம் ஒரு காரணி என்று கருதப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
டூரெட்ஸ் நோய்க்குறி இருக்குமானால், பின்வரும் தீர்மானமான அறிகுறிகள் இருக்க வேண்டும்:
- குறைந்தபட்சம் இரு மோட்டார் டிக்ஸ் மற்றும் ஒரு வாய்மொழி டிக் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு இந்த டிக்ஸ் இருந்திருக்க வேண்டும்.
- 18 வயதிற்கு முன்பே டிக்ஸ் தோன்றியிருக்க வேண்டும்.
- மருந்துகள் போன்ற வெளிப்புற காரணிகளால் அறிகுறிகள் ஏற்பட்டிருக்கக்கூடாது.
டூரெட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் குறைவாகவே உள்ளன.
இருப்பினும், பெரும்பாலான நிகழ்வுகளில் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவில் அறிகுறிகள் இருக்காது. எனவே, சரியான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் மூலம் நன்றாகக் வாழ முடியும்.
சில சந்தர்ப்பங்களில், இதனுடன் தொடர்புடைய மற்ற நோய்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்த மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். நோய்க்குறியை பற்றி ஒருவரிடமோ அல்லது அவர்களின் குடும்பத்தினரிடமோ கற்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் அதேபோல் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவது நன்றாக உதவும்.