அதிர்ச்சி என்றால் என்ன?
அதிர்ச்சி சூழ்நிலைகள், தொடர் நிகழ்வுகள், அல்லது ஒரு நபர் உணர்ச்சி ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ அனுபவிக்கும் ஒரு தீங்கு விளைவிக்கும் அல்லது அச்சுறுத்தும் நிகழ்வின் விளைவால் அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த நிகழ்வு ஒரு தனிநபரின் சமூக செயல்பாடு, உணர்ச்சி, உடல், நல்வாழ்வு ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கான மனரீதியான வெளிப்பாடுகள் பின்வருமாறு:
- குறைந்த நினைவாற்றல் மற்றும் ஒருமுக சிந்தனை.
- நிகழ்வைப் பற்றி அமைதி குலைந்த எண்ணங்கள்.
- குழப்பம்.
- நிகழ்வுகளின் ஒரு பகுதிகள் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றுதல்.
ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கான உடல் ரீதியான வெளிப்பாடுகள் பின்வருமாறு:
- அமைதி குலைந்த தூக்க முறைகள்.
- தலைசுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி.
- தலைவலி.
- தீவிரமான வியர்வை.
- அதிகரித்த இதயதுடிப்பு.
அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கான நடத்தை ரீதியான வெளிப்பாடுகள் பின்வருமாறு:
- பசி மாற்றங்கள்.
- வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகுதல்.
- தூக்கத்தில் சிக்கல்கள்.
- மிகவும் முனைப்பாக மீட்பு தொடர்பான பணிகளில் ஈடுபடுவது.
- புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் காபி ஆகியவற்றை நுகரும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது.
- நிகழ்வைப் பற்றி யோசிப்பதை நிறுத்த இயலாமை.
- நிகழ்வுடன் தொடர்புடைய எந்த நினைவையும் தவிர்ப்பது.
ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கான உணர்ச்சி ரீதியான வெளிப்பாடுகள் பின்வருமாறு:
- பீதி, பதட்டம் மற்றும் மற்றும் பயம்.
- உணர்ச்சியற்ற உணர்வு நிலை.
- அதிர்ச்சி நிலை.
- குழப்பம் மற்றும் பிரிக்கப்பட்ட உணர்வு நிலை.
- மக்களிடமிருந்து விலகி, அவர்களுடன் இணைய விருப்பமில்லாத நிலை.
- இன்னமும் அந்த நிகழ்வ நடப்பது போல் உணர்வது மற்றும் சுற்றி ஆபத்து இருப்பதாக உணரும் நிலை.
- சம்பவத்திற்குப் பிறகு மிக சோர்வுற்றதாக உணரும் நிலை.
- சம்பவம் முடிந்துவிட்ட பின் அந்த நிகழ்வை கை விடும் நிலை.
- குற்றவுணர்வு, மனச்சோர்வு, தவிர்த்தல், மற்றும் மிகுந்த உணர்திறன் ஆகிய உணர்ச்சிகள் கை விடும் நிலையில் அனுபவிக்கப்படுகிறது.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பின்வரும் நிகழ்வுகளை அனுபவிப்பது ஒரு நபருக்கு அதிர்ச்சிகரமான வெளிப்பாட்டை துண்டுகிறது:
- இழப்பு.
- உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம்.
- சமூக, உள்நாட்டு, பணியிடத்தில் வன்முறை.
- குற்றம்.
- இயற்கை பேரழிவு.
- இழப்பை உணர்தல்.
- புறவழிக்காயம் அல்லது அதிர்ச்சி ஏற்படுத்தும் துன்பம்.
- மருத்துவ நடைமுறைகள், காயம் அல்லது நோய்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு வயதுவந்தோர் இந்த அறிகுறிகளைக் கொண்டிருக்கும் போது அதிர்ச்சி கண்டறியப்படுகிறது:
- குறைந்தபட்சம் இரண்டு எதிர்வினை மற்றும் கிளர்ச்சி அறிகுறிகள்.
- குறைந்தபட்சம் ஒரு மீண்டும் அனுபவிக்கும் அறிகுறி.
- குறைந்தது இரண்டு மனநிலை மற்றும் அறிவாற்றல் அறிகுறிகள்.
- குறைந்தபட்சம் ஒரு தவிர்த்தல் அறிகுறி.
அதிர்ச்சிக்கு பின்வரும் முறைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது:
- புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை.
- வெளிப்பாடு சிகிச்சை.
- புலனுணர்வு மறுசீரமைப்பு.
- முறையான உணர்திறன் குறைப்பு.
- கவலை மேலாண்மை.
- மன அழுத்தம் குறைப்பு சிகிச்சை.
- கண் இயக்க உணர்திறன் குறைப்பு மற்றும் மறுசீராக்கல்.
- மனச்சோர்வு போக்கிகள் மற்றும் பிற மருந்துகள்.